ஞாயிறு, டிசம்பர் 30, 2012

இன்கிரடிபிள் இந்தியா (Incredible India)

2013 பிறக்கும் வரை எதுவுமே எழுதுவதில்லை.. பதிவுலகத்துக்கு சற்று விடுமுறை கொடுக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். அதையும் மீறி எழுதவைத்தது சமீபத்தில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட டெல்லி மாணவியின் மரணம். கடந்த சில வாரங்களாகவே பல அரசியல் பிரமுகர்கள், செய்தி நிறுவனங்களை மட்டுமல்லாது பதிவுலகையுமே சற்றே கொந்தளிக்க வைத்த நிகழ்வு. பொதுவாகவே பாலியல் வல்லுறவு என்பது எவ்வளவு மிருகத்தனமான செயல் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதற்க்கான அடிப்படைக்காரணி யாரோ எங்கேயோ ஓரிரண்டு மனித மிருகங்களில் மட்டுமே இருப்பதல்ல. ஒவ்வொரு சராசரி மனிதனுக்குள்ளிருக்கும் இருக்கும் அரக்க குணத்தின் முற்றுமுழுதான வெளிப்பாடு ஒரு பெண்ணின்மீது காமம் கலந்து திணிக்கப்படுகையில் அது பாலியல் வல்லுறவாகிறது. 

This Photo was Shared on Fb
by some indian friends
என்னடா இது சாதாரண மனிதர்களும் அந்த மிருகங்களும் ஒன்றா என்று கோபப்படுபவர்கள் சற்று நிதானித்து சிந்தித்துப் பாருங்கள். அந்தக் கயவர்களையுமே நல்லவர்கள், அவர்கள் பக்கமும் நியாயம் இருக்கு என்று வாதிடுவதர்க்காய் நாலு பேர் இருக்கிறார்கள்.. இல்லையெனின் இனிமேலாவது வரத்தான் போகிறார்கள். குறைந்தது ஒரு வக்கீலாவது வந்து காசுக்காக வாதாடுவார். இப்போதே சிலரின் கருத்துக்களைப் பார்க்கையிலே சற்றே வேதனையாகத்தான் இருக்கின்றது. "ஆறுபேர் நிக்கிறாங்கன்னு தெரியுதில்ல? பேசாம சரண்டர் ஆயிருக்கவேணாம்?" என்று ஒரு பெண் விஞ்ஞானி கருத்துத் தெரிவித்திருக்கிறார். இன்னும் சிலர் அந்தப்பெண் தனியே ஓர் ஆணுடன் இரவு இவ்வளவு நேரம் கடந்து வெளியே இருந்தது தவறு என்றும் பெண்களின் உடை மற்றும் இத்தகைய நடவடிக்கைகள் தான் ஆண்களின் இவ்வாறான செயல்பாடுகளுக்கு தூண்டுகோலாய் அமைகின்றது என்றும் சொல்கின்றனர். 

சில அதீத தமிழ் உணர்வாளர்கள் இவை எல்லாவற்றுக்கும் மேலேயே போய் தமிழீழத்தில் எங்கள் பெண்கள் பலாத்காரத்துக்கு உள்ளானபோது தற்போது எதிர்ப்பவர்கள் எல்லாம் என்கேபோயிருந்தார்கள் என்று கேள்வி எழுப்புகின்றார்கள். நண்பர்களே உங்களது உள்ளக்குமுறல்கள் புரிகிறது. ஆனால் அதனை வெளிப்படுத்தும் தருணம் இதுவல்ல. முதலில் மனிதநேயம், அதன்பின்புதான் மற்றவையெல்லாம். இதையே சற்று வேறுவிதமாய் சிந்தித்துப் பாருங்கள். உலகத்தின் அத்தனை வஞ்சகங்களையும் கயமைகளையும் கொடுமைகளையும் அனுபவித்து மீண்டு வந்த ஒரு இனத்தினால் நிச்சயமாக மற்றவர்களின் அத்தகைய அவல நிலையை முழுதாய் உணர்ந்து ஆறுதல்படுத்த முடியும். எனவே இத்தகைய சூழலில் நாங்கள் எதிர்க்கவேண்டியது மனிதனுக்குள்ளிரும் இத்தகைய அசுர குணங்களையே ஒழிய சக மனிதனையல்ல.

இந்தியாவில் இருபது நிமிடத்துக்கு ஒரு பாலியல் வல்லுறவு நடைபெறுவதாய் தரவுகள் சொல்கின்றன. டெல்லி சம்பவம் ஓய்ந்துபோகு முன்னரே தமிழ் நாட்டில் இரண்டு சம்பவங்கள் நடைபெற்றிருக்கு. எனவே இது இன்று நேற்றுடன் முடிந்துபோகப்போகும் விடயமல்ல. மரணதண்டனைமூலம் இத்தகைய குற்றங்களை நிச்சயமாக ஒழிக்கமுடியாது. ஏனெனில் இத்தகையவர்கள் ஓர் அர்த்தமில்லாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பது மட்டுமல்லாது பெரும்பாலும் சாவில் நாட்டம் உடையவர்களாகத்தான் இருப்பார்கள். ஏற்கனவே இறந்து போனவர்களை மீண்டும் தூக்கிலேற்றுவதில் எந்தவித அர்த்தமில்லை என்றே படுகின்றது. 

அப்படியென்றால் இதற்குத் தீர்வுதான் என்ன? சுயமாற்றம்.. அதன் மூலம் மட்டுமே நாம் உலக மாற்றத்தைக் கொண்டுவர முடியும். அந்த ஆறுபேர் அளவுக்கு இல்லையெனிலும் நாம் ஒவ்வொருவருமே உடலாலோ மனதாலோ தவறு செய்துகொண்டு தானிருக்கிறோம். பாலியல் பலாத்காரங்களுக்கு எதிராகக் குரல்கொடுப்போரில் எத்தனைபேர் நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்றுவரை மனத்தால் கூட ஒருபெண்ணை அல்லது சினிமா நடிகைகளை அத்தகைய நிலைக்கு உள்ளாக்கியதில்லை? எனவே ஒவ்வொருவரும் தாமாகப் பார்த்து மாறாவிட்டால் இந்த பூமியில் இயேசு, புத்தன் என்று எத்தனை மகான்கள் வந்து சென்றாலுமே யாராலுமே எந்த மாற்றத்தையுமே கொண்டுவர முடியாது.
Mr. MM Singh!
Do you really think a girl could travel alone like this in your country?


THIS ARTICLE IS TRIBUTE TO THE INDIAN WOMAN WHO WAS GANG RAPED IN INDIA AND DIED IN SINGAPORE YESTERDAY.
புதன், டிசம்பர் 26, 2012

அன்புள்ள வாசகர்களுக்கு

சமீபத்தில் ரசிகையின் நீண்டநாள் வாசகர் ஒருவரை தற்செயலாய் சந்தித்திருந்தேன். அவரையே அன்று தான் முதன் முதலில் சந்திக்கிறேன். ஆனால் அவர் "உங்களுக்கு எல்லாத்தைப் பற்றியுமே தெரிந்திருக்கே" என்று வியந்தார். எனக்கு ஒரே ஆச்சரியம். என்னடா இது நம்ம பாட்டுக்கு என்னமோ கிறுக்கிட்டு இருக்கிறம் அதை வைத்து எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வந்தாங்க எண்டு. அவரிடமே கேட்டுவிட்டேன். "இல்லை.. பொதுவாகவே இசை நடனம் கதை கவிதை என்று எல்லாமே எழுதிறீங்களே. அதுதான். கொஞ்சம் பொறாமையா கூட இருக்கு." என்றார்.

இற்றைக்கு சரியாக பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு நாள். 1997/12 இருபத்தரோ இருபத்தேழோ என்று சரியாய் ஞாபகமில்லை.
"கௌரி. New Yearக்கு BMICHல ஒரு ப்ரோக்ராம் இருக்கு. பாடுறத்துக்கு ஆக்கள் தேவை. வரமுடியுமா?" என்று சாதாரண தரம் சித்தியடைவதர்க்காக ஒரேயொரு கீர்த்தனையை மூன்று மாதம் கஷ்டப்பட்டு ஓரளவு சரியாகப் பாடக் கற்றுத்தந்த எனது சங்கீத ஆசிரியை மினக்கட்டு போன் பண்ணி கேட்டபோது எனக்கு தூக்கிவாரிப் போட்டது. வயலினில் தத்தித் தத்தி எதோ சில நிகழ்ச்சிகள் செய்திருந்தாலுமே மேடையேறிப் பாட என்றுமே துணிந்ததில்லை. 

"டீச்சர். எனக்கு பாட வராது. வேண்டாம்." என்றேன் தயங்கியபடி. 
"பாரதி பாட்டுதான். ஒரு பத்து பதினைந்து பேர் சேர்ந்து பாடுகினம். நீரும் அவையோட சேர்ந்து பாடினா சரி." என்றபோது அப்பாடா என்றிருந்தது. தவிர பாரதி என்றதும் வேறெதையுமே யோசிக்கவில்லை சரி என்றுவிட்டேன். 
"31ம் திகதி ப்ரோக்ராம். rehearsalக்கு நாளைக்கு ஒன்பது மணிக்கு வர முடியுமா?" என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஏனோ அடிவயித்துக்குள் கலர் கலரா பட்டாம் பூச்சி பறக்கத்தொடங்கிவிட்டிருன்தது.

அடுத்து பலவகையான நடனங்களை பழக/ஆட முயன்றிருந்தாதும் மேடையேறியது தாண்டவம் மாதிரி எதோ ஒரு நடனம் ஸ்கூல் ப்ரோக்ராமில் செய்ததோடு சரி. தர்சினியின் புண்ணியத்தில் "சரஸ்வதி சபதத்தில்" துர்க்கையாக கஷ்டப்பட்டு ஒருபக்க டயலாக் மனப்பாடம் செய்து நடித்தது. பின்பு karate, convocation, runway, pageant என்று பலவகையான நிகழ்வுகளுக்கு மேடையேறியிருந்தாலும் என்னமோ அந்த முதல் பாடல் தந்த அனுபவம் மாதிரி வரவில்லை. It was such a divine feeling.

"என்னை மன்னித்துவிடு" என்ற எனது முதல் (உரைநடைக்) கவிதை ஸ்கூல் magazine முதல் பக்கத்தில் வந்ததோட சரி. பின்பு அது ஏற்படுத்திய ரணகளத்துக்கு பல வருசமாய் மருந்து போட்டு போட்டு இன்னுமே சரியா ஆறலை. 

ரசிகையின் முதல் கதையை தப்பி தவறி பேப்பர்ல போட்டிடாங்க. ஆனா ஏனோ சந்தோசப்பட முடியலை. இம்புட்டுத்தான் நம்ம சாதனைப் பட்டியல். 

மற்றபடிக்கு நாம வெறும் ரசிகை மட்டுமே. மேடையில் வருண் கிருஷ்ணன் பாடுகையில் கீழே நித்யாவாக இருந்து ரசிப்பதில் இருக்கும் ஆனந்தம்/வெட்டி பந்தா, சாய்ந்து சாய்ந்து பார்க்கும் போது அடடா.. என்று என்னதான் நமக்கு வராது/இல்லை என்றாலுமே ரசித்தவை ஏராளம் ஏராளம். அவை கொடுத்துப்போன நினைவுகள் ஏராளம்.

தவிர, பல கொடுமையான நிகழ்வுகளில் கூட எதுவோ ஒன்று தப்பிக்க வைத்து இதுவரை வாழ வைத்திருக்கிறதே, அதனை ரசித்திருக்கிறேன். இப்படியாகப் பலதரப்பட்ட ரசனைகளில் இங்கே இந்த ஒருவருடத்தில் நான் பகிர்ந்துகொண்டது ஒருசிலவே. எழுதாமல் விட்டது இன்னும் எத்தனையோ. அவற்றையெல்லாம் சரியான காலம் வரும்போது நிச்சயமாகப் பகிர்ந்து கொள்வேன் என நம்புகிறேன்.

அதுவரை வணக்கம் கூறி விடைபெறுவது என்றும் உங்கள் 
நித்தியா அனந்தன். மன்னிக்கவும்.. கௌரி நித்தியா னந்தன்.. இல்லை கௌரி.. சரி சரி விடுங்க. கீப் இட் சோர்ட் அண்ட் ச்வீட். ரசிகை எண்டே இருக்கட்டும்.


முக்கிய குறிப்பு: நான் முன்பு இங்கே பல தடவை சொல்லியது போல இங்கு பதியப்படுபவை அனைத்தும் எனது சொந்தப் பார்வைகளே. அவற்றை ஏற்றுக்கொள்ளச் சொல்லி யாரையுமே இங்கு கட்டாயப் படுத்தவில்லை. அவை தவறாகப் படும் பட்சத்தில் உங்களது கருத்துக்களை தாராளமாகப் பகிர்ந்து கொள்ளலாம். நிற்க, சில மூன்றாந்தரக் கருத்துகளை அழித்துவிடும் வசதியிருப்பினும் அதனை நான் இன்னும் செய்யாமல் இருப்பது அவர்கள் கொஞ்சமேனும் வளர்ந்தபின்னர் தாங்களாகவே புரிந்து கொண்டு நீக்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் தான். அதற்காய் மற்றவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

செவ்வாய், டிசம்பர் 25, 2012

அன்பென்ற மழையிலே

"உனக்கு என்ன வேணும் சொல்லு?" காரை மெதுவாக பிளாட்டின் கீழே நிறுத்திவிடு அவள் பக்கம் திரும்பி ஆசையாய் கேட்டபோது அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 
"தெரியலை"

ப்ளேயரில் Mariah Carey மாறி இப்போ மின்சாரக்கனவில் பிரபுதேவா கஜோலைக் கலாய்த்துக் கொண்டிருந்தார். நேரம் அதிகாலை இரண்டு மணியிருக்கும். சிறு வயதிலிருந்தே வேத பள்ளிக்கூடத்தில் படித்திருந்தாலும் இயேசு பிறந்தது 24 இரவா இல்லை 25 இரவா என்ற குழப்பம் இன்னும் அவளுக்கு தீர்ந்தபாடில்லை. இப்பிடித்தான் கார்த்திகை தீபத்தையும் தீபாவளியையும் கூட அடிக்கடி போட்டு குழப்பிக் கொள்ளுவாள். அவ்வளவெல்லாம் எதுக்கு சாதாரணமாய் இடது வலது சொல்வதற்கே கொஞ்சநேரம் பிடிக்கும். அதான் எதோ DRDயோ BRDயோ எண்டு சொல்லுவாங்கள். அதில்கூட குழப்பம் அவளுக்கு. இதனால் தானோ என்னமோ நல்லகாலமாய் மெடிசின் படிக்கவில்லை என்று அடிக்கடி நினைத்துக்கொள்ளுவாள். ஒருவேளை அப்பிடிப் படித்திருந்தால் இன்றைக்கு எத்தினை பேரின் வாழ்க்கை கேள்விக்குறியாகியிருக்கும்? ஹ்ம்ம்.. இப்ப மட்டும் என்னவாம்..? நீண்ட நெடிய பெருமூச்சொன்று வந்தது அவளிடமிருந்து..

"இன்னிக்கு Christmas. உனக்கு ஏதாச்சும் தரனும் போல இருக்கும்மா. ஆனா என்கிட்ட இப்ப இவ்வளவு தான் இருக்கு. உனக்கு பிடிச்சதை.." தயங்கித் தயங்கி ஒருவாறு சொல்லி முடித்த போது துடித்துப்போனாள். அவள் ஒரு வேசி என்று மறைமுகமாய் என்ன நேரடியாகவே சொல்லிவிட்டான். உதட்டை இறுக்க மடித்து வர இருந்த கண்ணீரை ஒருவாறு அடக்கிக்கொண்டாள்.

அவன் சொல்வதும் சரிதானே. நைட் கிளப், பீச், பார்ட்டி.. இன்று இவன், நாளை இன்னொருவன் என்றுதானே அவள் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கு. என்ன இன்னும் கை நீட்டி காசு வாங்காதது தான் பாக்கி. அதற்கும் இன்று இவனே அடியெடுத்துக் கொடுத்துவிட்டான்.
"சாரி.. தப்பா எதுவும் பேசிட்டேனா?"
இல்லையென்று தலையாட்டினாள். அவள் மௌனத்தையே சம்மதமாக நினைத்து முன்னே அன்புடன் அரவணைப்பதற்கு தயாராய் தனதிருகரங்களையும் அகல நீட்டியபடி நின்றிருந்த மாதா உருவத்தின் அடியிலிருந்து ஒரு கவரை எடுத்து நீட்டினான். அவளுக்கு உலகமே தலை மீது இடிந்து விழுவது போன்றிருந்தது. இப்படியே செத்துவிட மாட்டோமா என்று தோன்றியது. 

நீட்டிய கவரை ஏறெடுத்தும் பார்க்காது வெளியே வெறித்தபடி இருந்த அவளைப் புரியாமல் பார்த்தான். 
"இதில்லை.. உனக்கு வேறை என்ன வேணுமெண்டாலும் என்னை தயங்காமல் கேக்கலாம். ஆனா அவன் கூட மட்டும்.." சடாரென்று திரும்பியவள்... "ப்ளீஸ்.." குரல் முழுவதுமாய் உடைந்து போயிருந்தது. இன்னும் கொஞ்சநேரம் இருந்தால் அழுதுவிடுவோம் என்று தோன்றவே, "ஓகே நான் வாறன். Merry Christmas to you.." என்றபடி கார் கதவைத் திறக்கப் போனவளை தடுத்து "உனக்கு என்ன வேணும் என்று சொல்லிட்டுப் போ. என்னால முடிஞ்சதை.." என்றவனை இடை மறித்து, 
"உங்களால தரமுடியாது.."
"நிச்சயமா. உனக்காக.. என்கிட்ட இருக்கிறது என்னவேனாலும் கேளு. ப்ளீஸ்.."
"ஐ நீட் லவ்.. ஜஸ்ட் லவ் ஒன்லி.. நதிங் எல்ஸ்.. உங்களால முடியுமா?"
அவள் கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் தலை குனிந்தான்.
அந்த மாயான அமைதியைக் கிழித்தபடி அந்தக் குரல்... சித்ராவினதோ.. அனுராதா சிறீராமினதோ..

"அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே..""குட் நைட் டியர்.. சி யு லேட்டர்.." அவன் குரல் கேட்காத தூரத்தில் அவள் சென்றுகொண்டிருந்தாள்.


புதன், டிசம்பர் 19, 2012

நீ தானே என் பொன்வசந்தம்


எல்லோருமே ஒண்டு சேந்தாப்பல ப்ளோக்ல, fbல எண்டு திட்டித் தீர்க்கிறான்களே.. அவ்ளோ மோசமாவா இருக்கும் என்ற பயத்துடன் தான் பார்க்கத் தொடங்கியது. முதல் பாட்டு "புடிக்கலை மாமு". தொடக்கமே சொதப்பல், முக்கியமாக சந்தானம் இந்தப்பாட்டில் வலுக்கட்டாயமாக சொருகப்பட்டது போன்றொரு உணர்வு வருவதைத் தடுக்க முடியவில்லை. வழமையாக படங்களில் சந்தானத்தினது காட்சிகள் கலகலப்பை உண்டுபண்ணும். இதில் என்னமோ அது மிஸ்ஸிங். ஒரு கட்டத்துக்குப் பின் விவேக்குக்கு நடந்ததுதான் நடக்கப் போகிறதோ தெரியவில்லை.

Collegeஇல் சமந்தாவை ஜீவா பல வருடங்களின் பின்பு முதன்முதலாக பார்க்கும் காட்சிகள் (அசடு வழிவது முதல் கொண்டு) வசனங்கள் அனைத்தும் அருமை. படத்துக்கே "நீ தானே என் பொன்வசந்தம்" எண்டு பேரை வைச்சிட்டு அந்த அருமையான பாடலை அவ்ளோ சுமாரா பாடியிருக்க வேணாம். தவிர நீண்டநாள் அமுங்கியிருந்த உணர்வுகளை மீண்டும் எழுப்பிக் கொண்டுவருமளவுக்கு, காயத்துக்கு மருந்திடுமளவுக்கு அந்த குரலில் வசீகரம் இல்லை என்று தான் சொல்லவேணும். பல இடங்களில் பார்த்த மேடைக்காட்சி என்றாலும் என்னமோ விசேடமாக இந்தப் படத்தில் இன்னும் சிறப்பாக இருக்குமென எதிர்பார்த்திருந்தேன். ஏமாற்றமே..

அடுத்து வழமையாய் வரும் ஊடல்.. சண்டை.. பிரிவு.. ஈகோ.. classic. ஜீவா சமந்தா இருவரினதும் யதார்த்த நடிப்பு அற்புதம். இருவரில் ஒருவர் சற்று அதிகப்படியாகவோ இல்லை குறைவாகவோ நடித்திருந்தால் நிச்சயமாய் அது கதையோட்டத்துக்கு பொருந்தியிருக்காது என்பதே எனது கருத்து. ஜீவாவைத் திட்டுபவர்கள் பலருக்கு அவரின் நடிப்பைவிட சமந்தா மேலிருந்த அதீத விருப்பம் காரணமாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது. 

இரண்டாவது பாதியில் குறை என்று சொல்வதற்கு எதுவுமில்லை, சந்தானத்தினது சைடு trackஐ தவிர. சுத்தமாய் பொருந்தவில்லை. லொள்ளு சபா வேறு சினிமா வேறு. இரண்டையும் கலந்தது கௌதமினது தவறு. 

சமந்தாவை தேடி ரயிலில் போகும்போது "காற்றைக் கொஞ்சம்" என்று தொடங்கும் இளையராஜா தொடர்ந்து "என்னோடு வாவா", "பெண்கள் என்றால்", "சற்று முன்பு" என்று படம் முடியும்வரை பாடல் மழையை நிறுத்தவேயில்லை. ஆனாலும் பெரும்பாலானவர்கள் விமர்சித்தது போலல்லாமல் எனக்கு என்னமோ அவைதான் உணர்வுகளின் அழுத்தத்துக்கு ஈடுகொடுத்து படத்துக்கு இன்னும் மெருகூட்டினவோ என்று நினைக்கத் தோன்றுகிறது. 

எனக்கு மிகவும் பிடித்த "முதன் முதல் பார்த்த ஞாபகம்" பாடலை கண்டமேனிக்கு பிய்த்துப் போட்டிருக்கிறார்கள். மற்றபடிக்கு "சாய்ந்து சாய்ந்து" அருமை. கிளைமாக்ஸ் அமைத்த விதத்திற்க்கே இந்தப் படத்துக்கு கண்ணை மூடிக்கொண்டு எழுபது மார்க்குக்கு மேலயே போடலாம்.மொத்தத்தில் இன்னொரு GVM படம் பார்த்த நிறைவைத் தந்த படம். 
வெள்ளி, டிசம்பர் 14, 2012

கமலின் விஸ்வரூபம்


விஸ்வரூபத்தில் ஒருபாடல். துப்பாக்கி எங்கள் தோளிலே.. கேட்கையில் தொண்ணூறுகளுக்கு எம்மையறியாமலே இழுத்துச்செல்கிறது. 
போரை நாம் தேர்ந்தெடுக்கவில்லை
போர்தான் எம்மை தேர்ந்தெடுத்துகொண்டது
எங்களின் கையில் ஆயுதங்கள் இல்லை
ஆயுதத்தின் கைகளில் எங்கள் உடல் உள்ளது
அன்று கேட்க்கையில் புல்லரிக்கவைத்த வரிகள். இன்னும் எத்தனை முறை தான் என்று சலிக்க வைக்கிறது இப்போது. 
ஊரைக்காக்கும் போரிற்க்கு ஒத்திகை செய்கின்றோம்
சாவே எங்கள் வாழ்வு என்று சத்தியம் செய்கின்றோம்.
கண்ணீர் குளம்கட்டவில்லை. வெறுமை மனதை பிசையவில்லை. துக்கம் தொண்டைக்குழிக்குள் நின்று அழுத்தவில்லை. 
துப்பாக்கி எங்கள் தோழனே
தோழ் கொண்ட வீரன் தெய்வமே
எப்போதும் எங்கள் கோப்பையில்
தேநீர் பருகும் மரணமே 
இதற்குமேல் கேட்டத் தோன்றவில்லை.

சிறுவயதிலிருந்தே நமக்கு என்று இருந்த ஒரே துணை மௌனம். அதீத உணர்வுகள் அலை மோதும்போது மௌனத்துக்குள் முடங்கிக்கொள்வதில் இருக்கும் ஆறுதலே ஒருசுகம் தான். யாரினதும் அணைப்போ ஆறுதல் படுத்துதல்களோ தேவையிருப்பதில்லை, அதனை விரும்புவதுமில்லை. நடுஇரவில் கூரைமேல் மல்லாந்துபடுத்துக்கொண்டு கோடானுகோடி நட்சத்திரங்கள் மத்தியில் இன்னுமொரு நட்ச்சத்திரமாய் இந்த உலகை மறப்பதில் இருக்கும் சுகம் வேறெதிலும் இருப்பதில்லை. 

Silence, Sweet silence, Dead silence என்று  மூன்று வகையான மௌனங்களை குறிப்பிடுகிறார்கள். மதுபனில் இருக்கும்போது என்னவோ திரும்பவும் யாருமேயில்லாத அந்த மௌனவெளிக்குள் மீண்டும் தொலைந்துவிட ஆசை வந்தது. ஆசை என்பதைவிட ஓர் வெறி. இருபத்திருநாள் மௌனவிரதம்.. தபசியா செய்யவேடுமென்று தோன்றியது. தொடங்கி இரண்டுநாள் தான் ஆகிறது.  

நண்பி ஒருத்தி கேட்டாள். How do you find it ?  
யவன் என்று நினைத்தாய்
எதைக்கண்டு சிரித்தாய்
விதை ஒன்று முளைக்கையில்
வெளிப்படும் சுயரூபம்
என்று சொல்லாலாமேன்றால்.. உம்ஹும்..

நாம் என்ன விதைக்கிறோமோ அதைத்தானே அறுவடை செய்ய முடியும்.
அணுவிதைத்த பூமியிலே அறுவடைக்கும் அணுகதிர் தான் 
ஆறடி மண்கூட எமக்காக கேளோம் என்றவர்கள் ஆண்டாண்டுகாலமாய் பல்லாயிரம் மக்களின் மனங்களில் நிரந்தரமாய் சிம்மாசனமிட்டு.. 
கருவறையும் வீடல்ல கடல்சூழ் உலகும் உனதல்ல
நிரந்தரமாய் நமதென்று சொல்லுமிடம் இல்லை
நம் நோய்க்கு அன்பன்றி வேருமருந்தில்லை.
உண்மைதான். அவர்கள் அன்பைப் புரிந்துகொள்ளுங்கள். புரட்சி.. பூகம்பம்.. சுனாமி எல்லாம் வெறும் கட்டுக்கதை. கண்களில் முந்தைய வெறியில்லை, எதையோ தொலைத்துவிட்ட வெறுமை தான் எஞ்சியிருக்கு. மீண்டும் மீண்டும் தட்டித்தட்டி நீங்களே மீண்டும் புதிதாய் உருவாக்கி விடாதீர்கள்.
போர் செல்லும் வீரன் ஒருதாய் மகன்தான்
நம்மில் யார் இறந்தாலும் ஒருதாய் அழுவாள்.
வரிகள் வைரமுத்து என்றதும் ஒருகணம் குழம்பிவிட்டேன். இல்லை.. இவை கமலுக்கேயுரிய வரிகள்.. அவரால் மட்டுமே இவ்வாறு எழுத முடியும். He is really Great, Vishwaroop..There is a place faraway 
I wanna go there someday 
I waana be there someday 


புதன், டிசம்பர் 12, 2012

12.12.12


"புலிக்கும் பெரும் புயலுக்கும் பிறந்த ஒருவர் பூகம்பத்தை திருமணம் செய்துகொண்டால் அவருக்குப் பிறப்பதை ‘ரஜினிகாந்த்’ எனலாம்" -'நியூயார்க் டைம்ஸ்'

Photo Credit: Diraj

சூப்பர் ஸ்டாரின் மறக்க முடியாத பிறந்த நாளாக மலருகிறது வரும் 12.12.12. ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை மட்டுமே அமையும் அபூர்வ தேதி இது. உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்கள், இந்தப் பிறந்த நாளை தங்களால் முடிந்த அளவு சிறப்பாகக் கொண்டாட தயாராகி வருகின்றனர். தமிழ் சினிமா உலகமும், ரஜினிக்கு மரியாதை செய்யும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நேரத்தில் இன்னொரு ஆச்சரியமான தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிக்கு இந்த ஆண்டு வருவது 63 வது பிறந்த நாள். அவரது பிறந்த நாள் அமையும் தேதி 12.12.12. இந்த மூன்றையும் கூட்டினால் 36 வருகிறது (12+12+12). ரஜினி சினிமாத் துறைக்குள் காலடி வைத்து 36 ஆண்டுகள் ஆகின்றன! இந்த 36-ஐ திருப்பிப் போட்டால், அவரது வயது 63 வந்துவிடுகிறது.

இது ஒரு தன்னிச்சையான ஒற்றுமையாக இருந்தாலும், வேறு எந்த நடிகருக்கும் அல்லது தலைவருக்கும் அமையாத ஒரு அபூர்வ விஷயம் என்பதால், இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸும், இசையமைப்பாளர் விஜய் ஆன்டனியும் இணைந்து இசை ஆல்பம் தயாரித்து வெளியிடுகின்றனர். இது குறித்து ராகவா லாரன்ஸ் கூறுகையில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நானும் அவரது ரசிகன். இந்த ஆண்டு ரஜினியின் பிறந்த நாள் 12-12-12 அன்று வருகிறது. இது விசேஷமான தேதி. எனவே ரஜினிக்கு அன்பு பரிசாக வழங்க இசை ஆல்பம் ஒன்றை தயாரித்து வருகிறேன். 12-12-12 அன்று இந்த  வெளியிடப்படும். ரஜினி மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்புக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த ஆல்பத்தை உருவாக்கி வருகிறேன். இதற்கான பாடல்களுக்கு திரைப்பட இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார். ரஜினி ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இது அமையும்,” என்றார்.
கறுப்பு வெள்ளையில்...

சமீபத்தில் கலைப்புலி தாணுவை நாம் சந்தித்தபோது, ரஜினி கறுப்பு வெள்ளை காலத்தில் சூப்பர் ஸ்டார் ஆனதை இப்படி வர்ணிக்கிறார்:

பைரவிக்கு நான்தான் விநியோகஸ்தர். ரஜினியுடன் அப்போதே தனிப்பட்ட முறையில் நல்ல நெருக்கம். அண்ணாசாலையின் பிரதான பகுதியில் பைரவி படத்துக்கு பிரமாண்ட கட் அவுட் வைத்தேன். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று குறிப்பிட்டிருந்தேன். பத்திரிகையிலும் அப்படித்தான் பெரிய சைஸில் விளம்பரம் கொடுத்தேன்.
அடுத்த நாளே பதறியடித்துக் கொண்டு அலுவலகத்துக்கு வந்தனர் இயக்குநர் எம் பாஸ்கரும் தயாரிப்பாளர் கலைஞானமும்.
“என்ன தாணு.. புரட்சித் தலைவர், நடிகர் திலகமெல்லாம் இருக்கும்போது இப்படி ஒரு பட்டப்பெயர் வச்சிட்டீங்க. தயவு செய்து அதை எடுத்துடுங்க..அவங்க ஏதும் தப்பா நினைச்சிடப் போறாங்க..,” என்றனர்.
“சரிண்ணே, எடுத்திடறேன்,” என்று கூறிவிட்டு, அடுத்த நாள் தந்தியில் ‘இந்தியாவின் மெகா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்’ என்று விளம்பரம் கொடுத்தேன். அதற்குப் பிறகு யாரும் என்னிடம் ஆலோசனை கூறவில்லை. மூன்றாவது நாளிலிருந்து சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டுதான் விளம்பரம் கொடுத்தேன். இன்று வரை அந்தப் பட்டப் பெயர் அவர் ஒருவருக்கு மட்டும்தான். இனியும் யாருக்கும் பொருந்தாது,” என்றார்.

வண்ணத்தில்…
ரஜினி நடித்த முதல் வண்ணப்படம் 16 வயதினிலே. ஆனால் அவர் முழுமையான கதாநாயகனாக நடித்த முதல் வண்ணப்படம் முள்ளும் மலரும். ஸ்டைலில், வசூலில் மட்டுமல்ல… நடிப்பில் சூப்பர் ஸ்டாராக ஜொலிக்க ஆரம்பித்தார். அதுவும் பைரவி வெளிவந்த ஆண்டுதான்.1978-ல் மட்டும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் ரஜினி மொத்தம் 21 படங்கள் நடித்திருந்தார். அது ஒரு பெரிய சாதனை!

“ரஜினிக்கு மிக முக்கியமான காலகட்டம் அது. அசுரத்தனமான உழைப்பை கொட்டி தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் அந்த ஆண்டு. அதற்கு அடுத்த ஆண்டு, ரஜினி மிகப் பெரிய ஆக்ஷன் சூப்பர் ஸ்டாராக தன்னை உயர்த்திக் கொண்டார். அப்போதுதான் பில்லா, ஜானி, முரட்டுக்காளை என மெகா ஹிட் படங்கள் அவருக்கு அமைந்தன… தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் அவர்தான் என்ற நிலை உருவானது,” என்கிறார் ரஜினிக்கு அந்தஸ்து நிலைக்கக் காரணமான இயக்குநர் எஸ்பி முத்துராமன்.


3 டியில்…
ரஜினி படத்தை 3 டியில் எடுக்க வேண்டும் என முதலில் திட்டமிட்டவர்கள் தேவர் பிலிம்ஸ். அப்போது மைடியர் குட்டிச்சாத்தான் வந்து, எங்கும் 3 டி என்ற பேச்சுதான். ஆனால் அந்த சமயத்தில் தமிழ், இந்தி என பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தார் ரஜினி. உடனே விஜயகாந்தை வைத்து அன்னை பூமி என்ற 3 டி படத்தை வெளியிட்டனர் தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தினர்.

அந்தப் படத்தின் தோல்வியோடு 3 டி பற்றிய பேச்சு அடங்கிவிட்டது. மீண்டும் சில ஆண்டுகளுக்கு முன் அவதார் வந்தபோதுதான் 3 டியில் படமெடுக்கும் ஆசை எல்லோரையும் தொற்றிக் கொண்டது. தமிழில் முழுக்க முழுக்க 3 டியில் தயாரான படம் என்றால், எதுவும் இல்லை எனலாம். சில மாதங்களுக்கு முன்பு வந்த அம்புலியில் கூட சில காட்சிகள்தான் 3 டியில் இருந்தன. மற்றவை 2டிதான்.

இந்த நிலையில் 2007-ல் வெளியாகி சக்கைபோடு போட்ட ரஜினியின் சிவாஜி – தி பாஸ் படத்தை, முழுமையாக 3 டிக்கு மாற்றியுள்ளனர். இதற்காக 400 கலைஞர்கள், ரூ 16 கோடி முதலீடு என மெகா முயற்சியில் இறங்கியுள்ள ஏவிஎம் நிறுவனம், அதில் வெற்றியும் கண்டுவிட்டது.
சிவாஜி 3 டியுடன் மோதுவதா என இப்போதே பல ஹீரோக்களும் தயாரிப்பாளர்களும் ஒதுங்கி நிற்க, ரஜினியே பெருந்தன்மையுடன், யார் படத்தோடும் மோத வேண்டாம்… முன்கூட்டி வெளியிடுங்கள். வளரும் நடிகர்கள் படத்துக்கு வழிவிடுங்கள் என்று கூறும் அளவுக்கு இந்தப் படம் கலக்கலாக வந்திருக்கிறது.
சினிமாவின் எதிர்காலம் 3 டி படங்கள்தான் என்று ரஜினியே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அனிமேஷன்..
ரஜினியின் அடுத்த படம் கோச்சடையான். இதுவும் 3 டி படம்தான். அனிமேஷனை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியாக வெளிநாட்டு ஊடகங்களால் வர்ணிக்கப்படும் அளவுக்கு உயர்ந்த தொழில் நுட்பத்தில் தயாராகிறது. அனிமேஷன் என்று தெரியாத அளவு நிஜமாகக் காட்சிதர வைக்கும் தொழில்நுட்பம் இது.
இந்திய திரையுலகில் பெரும் மாறுதல்களுக்கு இந்தப் படம் வித்திடும் என்ற எதிர்ப்பார்ப்புடன் கோச்சடையானை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் திரையுலகினர்.
“தமிழ் சினிமா என்றல்ல.. உலக சினிமா என்று பார்த்தால் கூட, சினிமாவின் அத்தனை வடிவங்களிலும் உச்ச நட்சத்திரமாகவே வெற்றிக் கொடி நாட்டிய பெருமை ரஜினி சாருக்குதான் உண்டு. அந்த வகையில், அவருக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டப் பெயரைச் சூட்ட ஆண்டவன் என்னை கருவியாகப் பயன்படுத்திக் கொண்டதாகவே கருதுகிறேன். சினிமாவின் அடுத்தடுத்த வடிவங்களிலும் அவர் உச்ச நட்சத்திரமாகவே தொடர வேண்டும் என்பது என்னைப் போன்ற அவரது நலம் விரும்பிகளின் ஆசை.. வாழ்த்து!” என்றார் கலைப்புலி தாணு.

தொகுப்பு : ரெ. துவாரகன் 
நன்றி : யாழ் ஓசை சென்னை மாவட்ட ரசிகர்கள் சார்பில் தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் இந்த ஆண்டு வள்ளுவர் கோட்டத்தில் 13.12.12-ல் கொண்டாடப்படவிருக்கிறது. அதுபற்றி விகடன் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரை…

‘பல்லேலக்கா பல்லேலக்கா… சூப்பர் ஸ்டார் ரஜினி வந்தா, தமிழ்நாடு அமெரிக்கா…’ _ என்பது போன்ற பேனர்கள், ரஜினி பிறந்த நாள் விழாவை சென்னையில் அமர்க்களப்படுத்த இருக்கின்றன.
12.12.12 அன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் 63-வது பிறந்த நாள். இந்தமுறை நாள், மாதம், வருடம் அனைத்தும் 12 என்று வருவதால், அவருடைய ரசிகர்களுக்கு தீபாவளிக் கொண்டாட்டம்!
அன்றைய தினம் பெசன்ட் நகர் மாதா கோயில், தி.நகர் திருப்பதி தேவஸ்தானம், மவுன்ட் ரோடு தர்கா, சைதை இளங்காளி அம்மன், தாம்பரம் செல்வ விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தும் ரஜினி ரசிகர்கள், அடுத்த நாள் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் 63 கிலோ கேக் வெட்டி விழாவை நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர்.

அன்று மாலை நடக்கும் விழா வில், ம.தி.மு.க-வில் சர்ச்சையைக் கிளப்பிவரும் நாஞ்சில் சம்பத், முதன் முதலாக ரஜினி ரசிகர் மன்றத்தின் மேடையில் ஏறுகிறார். அவர் தலைமையில், ‘கோடி நிலாக்களுக்கு குளிர்ச்சி தருகிற எங்கள் சூப்பர் ஸ்டாரின் வெற்றிக்குக் காரணம் நடிப்பா… பண்பா?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது.

ரஜினி பாடல்கள் மட்டுமே இடம்பெறும் இசைக் கச்சேரியோடு, திண்டுக்கல் ரஜினி சோமுவின் வித்தியாசமான ரஜினி ஷோவும் நடக்கிறது. ஏராளமான திரை நட்சத்திரங்களும் வாழ்த்திப் பேச வருகிறார்கள். 12 ஏழை மாணவர்கள், 12 முதியோர் இல்லங்கள், 12 ஏழைக் குடும்பங்கள்… என்று 15 லட்ச ரூபாய்க்கு மேல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு ரஜினி ரசிகர்கள் 5,000 பேர் கண்தானம் செய்கின்றனர். விழாக்குழுவினர் 20 பேர் உடல்தானம் செய்கிறார்கள். விழாவுக்கு 30 ஆயிரம் ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் இலவச மரக்கன்று கொடுக்கிறார்கள்.இயற்கையைப் பாதுகாக்க மரம வளர்க்கவேண்டும் என்று ரஜினி விரும்புவதால், இந்த ஸ்பெஷல் ஏற்பாடாம். ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக, ரஜினி படத்தில் உள்ள பஞ்ச் டயலாக்குகள், தத்துவப் பாடல்களை அகன்ற திரையில் போட்டுக் காட்டுகிறார்கள். ‘ஆண்டவன் சொல்றான்… அருணாச்சலம் செய்றான்’, ‘ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி…’, ‘நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது… ஆனா, வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்…’ என்று, பல அதிரடி வசனக் காட்சிகளைத் தயார்செய்து வைத்திருக்கிறார்கள்.

”13-ம் தேதி விழா எளிமையாகவும், அதேநேரத்தில் ரஜினியின் பண்புகளை எடுத்துச் சொல்லும் வகையிலும் இருக்கும்” என்கிறார்கள் சென்னை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றத்தின் விழாக் குழுவினர் ராம்தாஸ், சூர்யா, ரவி, சினோரா அசோக் மற்றும் சைதை ரவி ஆகியோர்.
கடந்த ஆண்டு வள்ளுவர் கோட்டத்தில் ரஜினியின் 62-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடந்தது. விழா, கட்-அவுட்டுகள், பேனர்கள், அதில் இடம்பெற்று இருந்த வாசகங்கள் குறித்து ரஜினிக்குத் தகவல் சென்றதை அடுத்து, அதில் சில மாற்றங்களைச் செய்யச் சொன்னாராம். அதனால், இந்த ஆண்டு அவருடைய முழுமையான ஒப்புதலோடுதான் விழாவை நடத்துகிறார்களாம்.
இந்தத் தடவை ரஜினி நிச்சயம் விழாவுக்கு வருவார் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
லேட் என்றாலும் லேட்டஸ்ட்டாக வருவாரா ரஜினி?

நன்றி: விகடன்


செவ்வாய், நவம்பர் 20, 2012

ஹிமாலயா கிரியேசன்ஸ் 5


"பன்னிரெண்டோட முடிஞ்சிடுச்சா..? பதின்மூணு வருதில்லை..?" என்று ஒருவழியா மாயன்களிடமே கடன்வாங்கி ஒரு ஸ்டோரிபோர்ட் கொண்டுபோனா.. "இது ஓகே . ஆனா எனக்கு பஞ்சாங்க காலண்டருக்கு நிறைய importance குடுக்கணும். எனவே தனியாக வேறையா அதுக்கு இன்னொரு விளம்பரம் செய்யுங்க" என்றார்.

மெய்கண்டான் காலண்டர் எண்டு கேள்விப் பட்டிருகிறோம், ஆனால் யாரு எழுதுறா.. யாரு அடிக்கிறா என்று தெரியாததால் மெய்கண்டான வைத்து google பண்ணிப் பார்த்ததில் மெய்கண்டான் ஒரு சிவனடியார் எண்டு வந்துது. எனவே அவர் எழுதியிருக்க 99% வாய்ப்பில்லை.

அப்பத்தான் சுஜன் அண்ணா சொன்னார் "கரிகணன் போன்று தான் மெய்கண்டான், அஷ்டலக்ஷ்மி போன்றவையும் பஞ்சாங்கத்தை வைத்துதான் அடிக்கினம். ஆனால் நாங்கள் யாழ்ப்பாணத்திலே புகழ்பெற்ற இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த காலண்டேரை பிரிண்ட் பண்ணி வெளியிடுறம் என்பது மக்களுக்கு தெளிவாக போய் சேரவேண்டும்" என்று.  

இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கம் என்றவுடன் தான் பொறிதட்டியது. சிறுவயதுகளில் வாக்கிய பஞ்சங்கத்தின் முன்னால் அவரது பெயர் பெரிதாய் போட்டிருப்பது பார்த்திருக்கிறேன். ஆனால் இதுவரை அவர் படத்தை இணையத்திலோ வேறெங்குமோ கண்டதில்லை. அதனால் இந்த விளம்பரத்தில் அவரது படத்தையும் உள்ளடக்கினால் நன்றாகவிருக்குமே என்று தோன்றவே எமது கருத்தை ராஜன் அண்ணா அவர்களிடம் சொன்னோம். நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகம் மகிழச்சியடைன்தது அவர்தான். "நல்ல ஐடியா.. நானே அவர்களிடம் கேட்டு சொல்கிறேன். நீங்களே நேரில் சென்று உங்களுக்கு தேவையான படத்தை எடுங்கள்" என்றார். இதை நாங்கள் சற்றுமே எதிர்பார்க்காததால் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. நம்மைப்போலவே இந்த விளம்பரத்தைப் பார்க்கும், திரு.இரகுனாதையரின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் அனைவருமே நிச்சயமாய் மகிழ்ச்சியடைவர் என்பதில் எமக்கு துளிகூட சந்தேகமில்லை. 


எமது ஒவ்வோர் படைப்பிலும் ஏதாவதொன்று புதுமையாக இருக்கவேண்டும் என்பதில் நாம் அதிக கவனம் எடுத்துக்கொள்கிறோம். இந்த இடத்தில் இவ்விளம்பரத்தின் ஒவ்வொரு Frameஐயும் அழகாக வடிவமைத்த நிஷகரனையும் அதை சரியாக நாம் விரும்பியதுபோலவே கொண்டுவந்த நமது மதிப்பிற்குரிய எடிட்டர் துசிகரனையும் Visualக்கு ஏற்றவாறு ஒன்றை நகைச்சுவையாகவும் மற்றொன்றை பிரமாண்டமாய்க் காட்டும்படியும் அட்டகாசமாக இசையமைத்த சுகன்யனையும் நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.

இம்முறை தீபாவளி சரவெடிதான்..
திங்கள், நவம்பர் 19, 2012

ஹிமாலயா கிரியேசன்ஸ் 4


வருடக்கடைசி நெருங்கிக்கொண்டிருக்கின்றது. FBயில் பலர் இப்போதே countdown தொடங்கிவிட்டார்கள். மாயன் காலண்டர் வேற உலகம் அழியப்போகுது என்று பெரும் பீதியக்கிளப்பிக்கொண்டிருக்கும் சமயம் பார்த்து ஒரு போன்கால்.. "தம்பி.. 2013 பிறக்கப்போகுது, எனக்கு எங்கடை கரிகணன் காலண்டரை வைத்து ஒரு விளம்பரம் செய்ய வேணும்". 

ஆறடி உயரமும் முகமேதெரியாதளவுக்கு தாடியுமாக சட்சாத் அவர் வேறுயாருமல்ல, முதன் முதலாய் நமது குறிக்கோள்களைப் புரிந்து பாராட்டி தூக்கிவிட்ட கரிகணன் பிரிண்டர்ஸ் முதலாளி திரு.ராஜ்குமார் அவர்கள் தான். என்னா ஒரு நம்பிக்கை.. தன்னம்பிக்கை..  

நாளை நடக்கப் போகும் ஒன்றிற்காய் இன்று நமது முயற்ச்சியை கைவிட்டுவிட்டு சும்மாயிருப்பது சுத்த மடைத்தனம் அல்லவா? அந்தவகையில் 2013 பிறக்குதோ இல்லையோ அவர்களுடைய வேலை பெரிய பெரிய கம்பனிகளுக்கு ஆர்டர் எடுத்து கலண்டர், டயரி அடிப்பது. எமதுவேலை விளம்பரம் செய்வது.. யாரோ சொன்னார்கள் உலகம் அழியப்போகுதுதாம் என்றுவிட்டு வெறுமனே இருந்துவிடமுடியாது தானே? அதால.. 

"பன்னிரெண்டோட முடிஞ்சிடுச்சா..? பதின்மூணு வருதில்லை..?"
உங்க வாடிக்கையாளருக்கு என்ன குடுக்கப்போறீங்க..?விவாஹாஸ் விளம்பரம் Teenagersஐ பெரிதும் கவர்ந்திருந்தது. அடுத்து வந்த அருள் குளோபல் express விளம்பரம் Professionals மத்தியில் ஏக பாராட்டைப் பெற்றுத்தந்தது. எமது முதலாவது ஆங்கில விளம்பரமான Zulu Style எமக்கு இலங்கையைத் தாண்டி வெளிநாட்டில் மட்டுமல்லாது Singapore மீடியாக்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தைப் பெற்றுத்தந்தது.

எனவே புதிதாய் இதில் என்ன கொண்டுவருவது என்று யோசித்தால் குழந்தைகளையும் கவரும் விதமாக சற்றே வினோதமான முறையில் பரீட்ச்சித்துப் பார்க்கலாமே என்று தோன்றியது.

நிற்க, குழந்தைகளுக்கும் காலண்டருக்கும் என்ன சம்பந்தமிருக்க முடியும்? பெரிதாகவோன்றுமில்லை. அநேகாமாக தினமும் காலண்டர் கிழிப்பதிலிருந்து ரோல் கலேண்டர்ஸ் விதவிதமாய் வாங்கிச் சேர்ப்பது மற்றும் தந்தையின் மனேஜ்மென்ட் டைரீஸ்இல் கிறுக்கித் தள்ளுவது வரை எல்லாம் நம்ம வீட்டுக் குழந்தைகள் தான் இல்லையா?


ஹிமாலய கிரியேசன்ஸின் ஐந்தாவது விளம்பரம் நாளை வெளிவரும்.திங்கள், நவம்பர் 12, 2012

அடடே நாளைக்கு தீபாவளியில்ல?


ரசிகையின் முதல் பதிவு - புதன், அக்டோபர் 26, 2011 அடடே இன்னைக்கு தீபாவளியில்ல?

அதுக்கு.. 

Thillakan சொன்னது…
இலவசம blog தாறன் எண்டதுக்ககாக 68 blog திறந்து வருசத்துக்கு ஒருக்க எழுதக்கூடாது ;)

வாயில வரத தமிழ் எழுத்தில வருகுது :)

உண்மைதான் இன்றுவரை கிட்டத்தட்ட பத்து பன்னிரண்டு ப்ளாக் திறந்திருப்பேன். ஆனால் தொடர்ச்சியாக குறைந்தது மாதத்துக்கு ரெண்டு தடவையேனும் எழுத முடிந்தது இதில் மட்டும் தான். ஏனெனில் எழுதும்போது ஏனோ ஒருகட்டுக்குள் நின்று எழுதுவதென்பது என்னால் முடியாத காரியம். அந்த நேரத்தில் தோன்றுவது எதுவோ அதை அப்படியே எழுதி போட்டுவிடுவேன். திரும்பவும் பார்த்து திருத்துவதென்பது மிக மிகக் குறைவு.  

ஒரு சிலர் சில பதிவுகளில் கேட்டிருக்கிறார்கள் 'இதன் மூலம் நீங்க என்ன சொல்லவாறீங்க' எண்டு. என்னதான் பேப்பர்ல போடும் அளவுக்கு ஏதோ கிறுக்கியிருந்தாலும் சத்தியமா யாருக்கும் கருத்தோ அட்வைசோ என்று பண்ணுற அளவுக்கு நான் இன்னும் வளரலை. 

அது மட்டுமல்லாது இங்கு எந்த இலக்கியமோ இலக்கணமோ இருக்காது. அதன்படி எழுத வேண்டும் என்ற ஆர்வமும் இதுவரை எழுந்ததில்லை. ஏதோ மனதில் தோன்றியதை எழுதுகிறேன். பிக்காசோவின் ஓவியங்கள்போல.. சிலருக்கு புரிகிறது, பலருக்கு குழப்பமாயிருக்கிறது. இன்னும் சிலருக்கோ கடுப்பாகவிருக்கின்றது. அதற்க்கு நான் எதுவும் செய்யமுடியாது. அது அவரவர் பார்வையைப் பொறுத்தது.

நிற்க, சென்றதடவை தீபாவளி என்றால் புதுசட்டை, பலகாரம், விருந்து சாப்பாடு, கோவில், அப்பா என்று  ஐந்து விடையங்களைக் குறிப்பிட்டிருந்தேன். அதில் முதல் நான்கும் இம்முறையும் இருக்கிறதோ இல்லையோ என்றுமில்லாத ஒன்றாய் பலவருடங்களின் பின்பு இம்முறை தீபாவளியன்று  அப்பா வருகிறார்.

அதைவிட முக்கியமாய் செல்லாவில் நாளை துப்பாக்கி திரையிடுகிறார்கள். அதில் என்ன விசேடம் இருக்க முடியும் என்று கேட்டீங்கன்னா எமது முதலாவது மற்றும் இரண்டாவது விளம்பரங்கள் படத்தின் நடுவே திரையிடப்பட இருக்கின்றன. மூன்றாவது விளம்பரம் ஏற்கனவே சோனி டிவியில் வருகிறது. தற்போது தீபவளியையொட்டி  சிங்கப்பூரின் பிரபலமான தமிழ் சேனலான வண்ணத்திரையிலும் போடுகிறார்கள். நான்காவது மற்றும் ஐந்தாவது விளம்பரங்கள் இன்னும் சிலதினங்களில் தொலைக்காட்ச்சிகளிலும் Youtubeஇலும் ஒரே சமயத்தில் வெளியிடப்படும்.டமில் டுமீல் என்று ஆக மொத்தத்தில் போன தீபாவளிக்கு மத்தாப்பெண்டால் இந்தமுறை துப்.. மன்னிக்கவும்.. சரவெடி தான்.. :)

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்.. இதுவரை நான் பார்த்த தீபாவளி அலங்காரங்களில் என்னை முழுதுமாய் கொள்ளைகொண்ட இடம் Gyan Sarovar. இன்னும் மூன்று நாட்களில் இங்கிருப்பேன் என்பதை நம்புவதற்கே இன்னும் பல நாட்கள் எடுக்கும்.    


(¯` [[312004515520386]] ´¯)´´¯`•°*”˜˜”*°•. [[126216480723638]]
`*.¸.*.•°*”˜˜”*°•. [[126216480723638]]
•°*”˜˜”*°•. [[126216480723638]] * ¸ [[336842623036575]] [[363460793698354]]


(¯` [[312004515520386]] ´¯)´´¯`•°*”˜˜”*°•. [[126216480723638]]
`*.¸.*.•°*”˜˜”*°•. [[126216480723638]]
•°*”˜˜”*°•. [[126216480723638]] * ¸ [[336842623036575]] [[363460793698354]]வெள்ளி, நவம்பர் 09, 2012

காடு பாலைவனமாகிறது

படித்ததும் (பிடித்ததும் ?!) அறிவுக்கெட்டியதும்.. 
முதல்ல இதைப் படிங்க..
காடு பாலைவனமாகிறது திறந்து கிடக்கிறது By JK.

முதன் முதலாக ஒரு விஷப் பரீட்சை.. அட நீ எழுதத் தொடங்கினதே அதுதானே என்பவர்கள் மட்டும் தைரியமாக மேலே வாசிக்கலாம்.. மற்றவர்களுக்கு நான் பொறுப்பாளியல்ல..
“நீ எப்போதாவது காதலித்திருக்கிறாயா?”
சாதாரணமாகப் பார்த்தால் ஒரு மேலோட்டமான கேள்விதான். ஆனால் கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் பைத்தியம் பிடிக்க வைக்கும் கேள்வி. எங்கே தொடங்கியது, எங்கு சென்று கொண்டிருக்கிறது, இன்னும் எங்கே போய் முடியும் என்றெல்லாம் அறியமுடியாத கேள்வி இது. மேலும் மேலும் சிந்திதுகொண்டு போனால் 'சே நாம இத்தின்னாள் வரை பண்ணின்டிருன்தது காதலேயில்லை' என்றும் கூடத் தோன்றும். பின்பு காதல் பொய் என்று பேசவைக்கும். பின்பு திரும்ப 'அது காதலாய் இருக்ககூடாதா' என்று திடீரென அடிமனசில் ஓர் ஆசை கிளம்பும். சூடுகண்ட பூனை சற்றே யோசிக்கும். அடுப்பங்கரை கதகதப்பு சுகமாய் மீண்டும் ஓர் ஆனந்த சயனம், பின்பு திரும்பியும் சூடு வாங்கி.. வாங்கி.. சக்கரம் திரும்பவும் சுற்றுகையில்.. உணர்வுகள் படிப்படியாக அடங்கி இப்போ புத்தியின் கையில் செங்கோலேறும். புத்தி எதையுமே நம்பாது. 
“காடா? … காட்டுக்கெதுக்கு நாட்டிலிருந்து நட்பு?… காட்டில் கிடைக்காததா? இந்த தேனியிடம் பேசினாயா? பூக்கள் பூக்களாய் திரிகிறது பார் .. தறி கெட்ட கழுதை .. அந்த தேனியிடம் பேசு .. கருகிய மரங்களை விட்டுவிட்டு வசந்தகால குருத்துகள் மத்தியில் கூடு கட்டி கொண்டாடுகிறதே குருவிகள். அதனுடன் பேசு. நீ எரியும்போது நாட்டுக்குள் ஓடிவிட்டு துளிர்த்த பின் அடைக்கலம் தேடிய மிருகங்களிடம் பேசு. இதை தானே துணை என்று நினைத்து தனித்து கிடக்கிறாய். தற்குறி. பேசு .. அதை எல்லாவற்றையும் விட்டு விட்டு என்னோடு என்ன வீண் பேச்சு? நான் யார் உனக்கு? நான் யார் எனக்கென்றே தெரியாதவன் நான். என்னை ஏன் வீணாக வம்புக்கிழுக்கிறாய்?”
என்று ஆயிரம் கேள்வி கேட்கும். என்னதான் இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு தடுமாற்றம் இருந்துகொண்டுதானிருக்கும். 
'கோபமாய் கேட்டாலும் குரலில் ஒரு ஏக்கத்தை காட்டிவிட்டேனோ? தரித்திரம் பிடித்தவன் நான். இதை ஏன் வெளியே காட்டிக்கொள்ளவேண்டும்? போயும் போயும் ஒரு காடு .. அது போய் என்னோடு பேசுகிறேன் என்கிறது. விட்டு எறியவேண்டாம்? ச்சே விவஸ்தை கெட்டவன் நான்.'
ஆனால் காதல்/காடு எதிரே விடாப்பிடியாய் நிற்கும்..
“நாட்டிலிருந்து நீ என்னைத்தேடி வந்தாயே? நான் கேட்டேனா? இது நியதி. அதை ஏன் புரிந்துகொள்ளமாட்டேன் என்கிறாய்? இங்கே நானும் நீயும் தான். இருவருமே தனித்திருக்கும் பனித்திருக்கும் பரம ஏழைகள். காடாய் இருந்து ஒருமுறை பார். எல்லாமே சுத்தி சத்தம்போடும்போது கிறீச்சிட்டுகொண்டு ஒரு மௌனம் கிழிக்கும். அது என்னை கொல்கிறது. நல்ல காலம் நீ வந்துவிட்டாய்." 
இப்போ காட்டின்மேல் ஒரு கழிவிரக்கம் வரும். அட நம்மள மாதிரித்தான் இதுவும் போல கிடக்கே, சரி போறவழிக்கு பேச்சுத் துணையாகட்டும் என்று மீண்டும் அடுப்பங்கரை கதகதப்பு சுகமாக..  ஆக.. நம்மையறியாமலே காதல் இப்போது சற்றே உரிமைஎடுத்துக்கொள்ளத் தொடங்கும்..
“அப்படி என்ன அவசரம்? எங்கே போகிறாய்?”
“நீர் வீழ்ச்சிக்கு … “
“நீர் வீழ்ச்சியா .. அது எங்கே இருக்கிறது? யார் சொன்னார்கள்?” 
“யாரும் சொல்லவில்லை. எனக்கு நீர் வீழ்ச்சிக்கு போய் அதனோடு சேர்ந்து அழவேண்டும் போல இருக்கிறது. அதன் கண்ணீரில் நனையவேண்டும் போல … அதனோடு சேர்ந்து நானும் குதித்து தற்கொலை செய்யவேண்டும் போல … ஒவ்வொரு பாறைகளிலும் மோதி சிதறி .. ஆங்காங்கே கரையோரங்களில் இருக்கும் மரங்களுக்கு நீர் பாய்ச்சி .. மீன் வளர்த்து, சுழியோடி.. ஆறுகளுடன் சங்கமித்து .. நீர்வீழ்ச்சியோடு வாழ்வதை விட சாவது சுகம் தெரியுமா?”
மனதிலுள்ளதை அப்படியே கொட்டிப் பேசப் பேச கொஞ்சம் கொஞ்சமாய் காதலைப் பிடிக்கத் தொடங்கும். ரசனைகள் ஒன்றாக சிந்தனைகள் ஒன்றாக 'ஏன் கடைசிவரை அதனுடனேயே இருக்ககூடாது?' என்று தோன்றும்.
“அப்படி என்றால் நீ என்னோடு இறுதிவரை கூட வருவியா?”
"முதலில் நீ எங்கே போகிறாய்? அதைச்சொல்லு”
“நீர் வீழ்ச்சிக்கு”
“அட அது தானே வேண்டாம் என்று ஆகிவிட்டது.. திரும்பவுமா?”
பலர் இங்கே தான் சொதப்புவார்கள். காதல் முத்திப்போய் பாதையையே மாற்றிவிடும் அளவுக்கு அவர்கள் புத்தி மழுங்கடிக்கப் பட்டிருக்கும். எதைத்தேடி வந்தோம் என்றே மறந்துவிடுவார்கள்.
“ஓ … நீர் வீழ்ச்சி வேண்டாம் ..எத்தனை அழுக்கேறினாலும் ஆகட்டும் .. வீழ்ச்சியே இருக்ககூடாது"
அன்பே.. ஆருயிரே.. தேன்நிலவு (நிஜத்தில இருக்கோ இல்லையோ ஆனா FBல மட்டும் கண்டிப்பா இருக்கும்) எல்லாம் சிறிது காலம் தான். பின்னர் அதுவும் அலுத்துவிடும். பிரியவேண்டும். ஆனால் எப்படி? அதற்க்கான வழியையும் காட்டிடமே கேட்ப்பான். 
“எனக்கொரு வழி சொல்லு? சொந்த வழி எந்த வழி என்று சொல்லு? சொல்லும் வழி வீடு போய் சேரும் வழியாய் சொல்லு?”
எங்கு வந்தோம் எதற்காய் வந்தோம் என்றே மறந்துவிட்டிருக்கும். இப்போது காடு தலைக்கு மேல் ஏறி நின்று தத்துவம் பேச ஆரம்பிக்கும்.
“உன் வீடு .. மூடனே .. அது தெரிந்தால் வழி தவறியிருப்பாயா? வீடு எது என்று தெரிந்து என்ன பிரயோசனம்? வழி தெரியவேண்டாமா? வழியை அறிந்தால் அது முடியும் இடம் தானே வீடு. புரிகிறதா முட்டாளே?”
“அப்படி என்றால் அந்த வழியையாவது சொல்லேன்”  
பணிந்து போயே ஆகவேண்டிய நிலை.
“அப்படி வா வழிக்கு … கண்டுபிடி .. உன் வழியை கண்டு பிடி. வழியில் எதையும் கண்டு மயங்காமல் .. யார் பேச்சையும் கேட்காமல் உன் வழியை கண்டுபிடி. உன்னை பின்பற்றி செல்லு. ஒருநாள் இல்லை ஒருநாள். வீடு வரும். அந்த வீடு இருக்கும் நாடு வரும். எல்லாமே .. முதலில் பாதையை சமை.. வீட்டை பற்றி இப்போது கவலைப்படாதே” 
காடு எஸ்கேப்..

நம்மாளு மீண்டும் தாடிய வளர்த்திண்டு முடிஞ்சா பக்கத்தில ரெண்டு நாய்க்குட்டியையும் கூட்டிண்டு.. வாழ்வே மாயம் பாடிண்டு போகையில்.. திரும்பவும்,
“நீ எப்போதாவது காதலித்திருக்கிறாயா?” 
நம்மாளு எஸ்கேப் ஆவான்கிறீங்க..?செவ்வாய், நவம்பர் 06, 2012

அறுபடும் காலம்


ஓர் வெளியில் ஓடும் எண்ணங்கள்
புத்தி பிரிக்கின்றது வேறுவேறாய்..

புரியாதபுதிர்கள் புரிபடத்தொடங்க
பல்லாயிரம் புதிர்கள் பின்னிற்கின்றன
சங்கிலித்தொடராய்

அடிகொடுத்து அடிவாங்கி அலுத்து
எதற்கும் அர்த்தமில்லாது இருந்தாலும்
எடுபடாது எதிலும் பிடிபடாது
எத்தனை பரிமாணங்களில்
எண்ணங்களின் பரிணமிப்புக்கள்

வியக்க வெறுக்க விரட்ட எதுவுமில்லாது
நாகத்தின் கடைசித் தலையும் அறுபடும் காலம்
கெஞ்சுதலோ கொஞ்சுதலோவன்றி
விடுபடும் உறவுகள்
இறுதியாய் வேறென்னவேண்டும்?

விரட்டவிரட்ட ஓடிய காலம்போய்
கால்தேய காலம் பின்னால் இழுபட்டுவருகையில்
இன்னும் எத்தனை தூரமென்று அதற்க்கும் தெரியாது
என்னைப்போலவே..!

திங்கள், அக்டோபர் 29, 2012

ஹிமாலயா கிரியேசன்ஸ் 3


சில நிகழ்வுகள் எதற்காய் நடக்கின்றன என்பது பலசமயம் புரிவதில்லை. அதிலும் எறும்புகளாய் ஊர்ந்துகொண்டிருக்கும்போது முன்னாலிருக்கும் இரை மட்டுமே கண்ணுக்கு தெரியும். அதுவே ஒரு பறவையாய் வானிலுயரப்பரக்கும்போது எல்லாப்புள்ளிகளும் ஒன்று சேர்ந்து ஓர் அழகிய ஓவியமாய்த் தெரியும். தெரிந்து எந்தப் பிரயோஜனமும் இல்லை. அதை சரியான முறையில் செதுக்கி எடுப்பதற்கு ஒரு திறமையான டீமும் தேவை.

அதிலும் இந்த விளம்பரத்திற்காக கொடுக்கப்பட்ட படங்களை மட்டுமே வைத்துக்கொண்டு கான்செப்ட் (Concept) எடுப்பதென்பது மிகவும் சிரமம். ஒருகட்டத்தில் கான்செப்ட் இல்லாமலே செய்வோம் என்று முடிவெடுத்து rough-cut உம் முடித்தாயிற்று. அதைப்பார்த்துவிட்டு திருவாளர் அனந்தன் சொன்னவை, இனி இந்த ஜென்மத்தில் கான்செப்ட் இல்லாமல் செய்வோம் என்று ஒருபோதுமே எம்மை நினைக்க வைக்காது.

கம்பெனி பெயரையும் குறையவிடக்கூடாது அதே சமயம் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்பவும் கொடுக்க வேண்டும். அந்தவகையில் நீண்ட வாதப் பிரதிவாதங்களின் பின் இறுதியாய் ஒருவாறு முடித்து அனுப்பி தற்போது சிங்கப்பூர் Sony Entertainment Television இல் மிகவும் பிரபல்யமான Kaun Banega Crorepati (KBC) ஷோவில் Hariraya தினமான நேற்று முன்தினம் தொடக்கம்  ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.


இவ்விளம்பரம் பலரது கவனத்தையுமே இந்த குறுகிய நேரத்தில் கவர்ந்து நாம் எதிர்பார்த்ததை விடவும் அதிக பாராட்டைப் பெற்றுக்கொண்டிருக்கிறது.

பிறரது பாராட்டுக்களை பெறுவது சுலபமாயிருக்கலாம். ஆனால் எந்த ஒரு வாடிக்கையாளருமே அவ்வளவு சுலபத்தில் நன்றாகவிருக்கிறது என்று சொல்லிவிட மாட்டார்கள். அந்த வகையில் இந்த பின்னூட்டத்தைப் பார்த்தபிறகு எனது இரண்டாவது பதிவில் சொல்லியது போல் "நாம் பணம் சேர்க்கிறமோ இல்லையோ ஆனால் நல்ல மனிதர்களை சேர்த்திருக்கிறோம் என்ற ஒரு திருப்தியைத்தந்த படைப்பு இது."


ஒருவழியாக ஹிமாலயா கிரியேசன்ஸ் தற்போது வெற்றிகரமாய் சிங்கப்பூர்இல் காலடிவைத்திருக்கிறது. இன்னும் பல படைப்புகள் தொடர்ந்து துரித கதியில் வரவிருக்கின்றன. இந்த நேரத்தில் எமது வளர்ச்சியில் உறுதுணையாயிருக்கும் அனைவருக்கும் மீண்டுமொருமுறை எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


திங்கள், அக்டோபர் 22, 2012

கோழி வந்தாதா முதலில் முட்டை வந்தாதா..?


சமீபத்தில் "The Big Bang" பற்றிய கட்டுரை ஒன்று வாசித்துக்கொண்டிருந்தபோது எழுந்த கேள்வி தான் இது..

யதார்த்தமாக பார்த்தால் இந்தக் கேள்விக்கு நான்கு பதில் சாத்தியக்கூறுகள் உள்ளன.
A) கோழி  B) முட்டை C) இரண்டுமே D) இரண்டுமேயில்லை.

இதை தர்க்கரீதியாக ஆராய்ந்தால் "இரண்டுமேயில்லை" என்பது மட்டுமே பதிலாக அமைய முடியும். ஏனெனில் நித்தியம் என்பதில் ஆரம்பமோ இறுதியோ இருப்பதில்லை. இது வெறும் தர்க்க ரீதியான பதிலே தவிர கோட்பாடுகள் மற்றும் தத்துவங்கள் சார்ந்ததல்ல. 

இக்கேள்வியை "காரணம் மற்றும் விளைவு" என்பதின் அடிப்படையில் பார்த்தால் எப்போதுமே ஒன்றின் விளைவுக்கு எதுவோ ஒன்று காரணமாக அமையும் போது அதன் உருவாக்கத்திற்க்கு வேறெதுவோ காரணமாக அமைந்திருக்கவேண்டிய தேவையிருக்கிறது. ஒரு பேச்சுக்கு முட்டை தான் முதலில் வந்தது என்று எடுத்துக்கொண்டால், அப்போ முட்டை எங்கிருந்து வருகிறது? கோழியிலிருந்து தானே? இல்லை வேறேதாவது ஒரு உயிரினம் பல மில்லியன் ஆண்டுகளில் பரிணாமமடைந்து கோழியினது முட்டையை போட்டது என்றால் அது உருவாகிய முட்டையை இன்னோர் உயிரினம் போட எத்தனை மில்லியன் ஆண்டுகள் பரிணாமம் அடைந்திருக்க வேண்டும்? ஆக மொத்தத்தில் எதையுமே ஆரம்பம் என்று சொல்ல முடியாது.. ஏனெனில் அதன் உருவாக்கத்திற்கும் ஏதாவதொன்று காரணமாக இருந்திருக்கும். அதாவது ஒவ்வொரு A க்கும் முன்னால் ஒரு B இருந்திருக்க வேண்டும் அதேபோல் ஒவ்வொரு B க்கு முன்னால் ஒரு A இருந்திருக்க வேண்டும். இது மேலைத்தேய நேர்கோட்டு கால (Linear Time) கோட்பாட்டின் அடிப்படையில் சாத்தியமில்லாத ஒன்று.எனவே தான் கீழத்தேய நாடுகளில் பயன்படுத்தப்படும் "காலச்சக்கரம்" (Cycle of Time) இங்கே முக்கியத்துவம் பெறத்தொடங்குகிறது. இக்கொள்கை இந்தியாவில் மட்டுமல்லாதும் பாபிலோனியர்கள், பண்டைய சீன, மாயர் இனங்கள், அமெரிக்க இந்தியர்கள், Incas, Hopis, பண்டைய கிரேக்கர்கள், ஸ்காண்டிநேவிய மற்றும் பல கலாச்சாரங்களிலும் காணப்படுகிறது. Cycle of Time இல் காலத்திற்கு ஆரம்பமோ முடிவோ இருப்பதில்லை. கோழியிலிருந்து முட்டை வரும்.. முட்டையிலிருந்து கோழி வரும்.. எனவே இங்கு "எது முதலில்..?" என்று கேட்டால் "இரண்டுமேயில்லை" என்பதுதான் சரியான பதிலாக இருக்க முடியும்.
சரி இதற்கும் "The Big Bang" தியரிக்கும் என்ன சம்பந்தம்..? அடுத்த பதிவில்..


திங்கள், அக்டோபர் 15, 2012

Drink Bottle


"அப்பா எனக்கு Drink Bottle ஒண்டு வாங்க வேணும்"

"ஹ்ம்ம்.." ஆறு மாதங்களின் பின்பு நேற்று தான் வந்திருந்தார். கொஞ்சநேரம் கண்ணை மூடி ரெஸ்ட் எடுக்கலாமேண்டால் அதற்குள் அவள் தன் நச்சரிப்பைத் தொடங்கி விட்டிருந்தாள்.
"ஒரு இருநூறு ரூபா வருமெண்டு நினைக்கிறன்.." முடிக்கவில்லை.. "இருநூறா.. அதெல்லாம் வேண்டாம். இப்ப கொண்டு போறதுக்கு என்ன வந்தது..? " அம்மா குசினியிளிருந்தவாறே தன் பல்லவியைத் தொடங்கி விட்டிருந்தார்.

"அது பாரமம்மா.. அதோடை திறந்து குடிக்கிரதேல்லாம் கரைச்சலா இருக்கு. இதிலைஎண்டா ஸ்ட்ரா மாதிரி இருக்கும். அப்பிடியே வைச்சு குடிக்கலாம்.." அவள் விடுவதாயில்லை.
"உப்பிடித்தானே எத்தினை வாங்கி பழுதாக்கி வைச்சிருக்கிறே? உதெல்லாம் கொஞ்ச காலத்துக்குத்தான். பிறகு பளுதாப்போடும்.." அவள் அம்மாவும் விடுவதாயில்லை.

"இது வேறை மாதிரி.. கெதியிலை உடையாது. எண்டை friends எல்லாம் வங்கியிருக்குதுகள்.. எனக்கும் வேணும்.." சற்று அழுத்தமாகவே முடித்தாள்.
"சரி. சரி சண்டை பிடிக்காதேங்கோ. நாளைக்கு சுன்னாகத்துக்கு போறன். பாத்து வங்கி வாறன். சரியே?" friends எல்லாம் வைச்சிருக்கினம் எண்டு சொன்னதாலேயோ இல்லை நித்திரை தூக்கத்திலேயோ என்னமோ அப்பா உடனேயே சம்மதித்து விட்டார்.

"இல்லை.. எனக்கு இண்டைக்கு வேணும்.. அதுவும் நான் பாத்து வாங்க வேணும். நீங்க மாறி வேற ஏதாவது வாங்கிக்கொண்டு வந்திடுவீங்க." வேதாளம் முருங்கை மரத்திலை ஏறிவிட்டது தெளிவாக புரிந்தது. இனி நித்திரை கொள்ள முடியாது.

"சரி purseல காசிருக்கு எடுத்திட்டு போய் நீயே வாங்கிட்டு வா.." சற்று திகைத்தவள், சுதாகரித்துக்கொண்டு "இல்லை நீங்க வந்து வாங்கி தாங்க.. நான் தனிய போக மாட்டன்." 
அவள் தனியே சைக்கிளில் பல இடங்களுக்கு போயிருந்தாலும், இப்படி டவுன் கடைக்கு போய் சாமான் வாங்குமளவுக்கு தைரியம் இருந்ததில்லை. பலசரக்கு கடை எண்டால் மட்டும் அம்மா எழுதி தந்த லிஸ்டை கொண்டுபோய் குடுத்து அவங்கள் தார பில் பாத்து காசை எண்ணிக் கொடுப்பாள். அதில்வேறை அவங்கள் சின்னப்பிள்ளை தானே எண்டு விலை கூட்டியும் சொல்லுவாங்கள். அவளுக்கு பேரம் பேசவெல்லாம் வராது.

"அப்ப நாளைக்கு போவம்.. அப்பா இப்பதானே வந்தது கொஞ்சம் களைப்பா இருக்கும்மா.." 
"எனக்கு இண்டைக்கு வாங்கி தாறதெண்டா தாங்க.. இல்லாடி வேண்டாம்.." கோபமாய் வந்தது. 
"என்னடி நீ.. இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு சைக்கிள் மிழக்கி வந்த மனுசனை கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுக்க விடாமல், உண்டை பிடிவாதத்தை இப்பவே தொடங்கிட்டியே" அம்மா முணுமுணுத்தார்.

"எனக்கு வேண்டாம் எண்டு தானே சொல்லுறன். உங்கடை காசை நீங்களே வைச்சுக் கொள்ளுங்கோ. எனக்கு ஒண்டுமே வாங்கி தர வேண்டாம்." கண்களில் நீர்முட்ட கோபத்துடன் எழுந்து சென்று விட்டாள். 


இருபது வருடங்களின் பின்பு..
"உனக்கென்ன விசரே..? ஏன் ஒவ்வொருக்காலும் இத்தினை drink பாட்டில் வாங்கிட்டு வாறே? அவள் இதிலைஎல்லாம் குடிக்க மாட்டாள்." எரிச்சலுடன் கூறிய தாயை பொருட்படுத்தாது, 
"இங்கை பாரேன்.. அம்மா குட்டிக்கு புது ட்ரின்க் பாட்டில் வாங்கிட்டு வந்திருக்கா.."
"நோ ஐ வான்ட் தட்.." என்றபடி iPad உம் கையுமாக வந்து தனது பழைய பாட்டில்ஐ தூக்கிக்கொண்டு போகும் தனது மகளை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள்.


புதன், அக்டோபர் 10, 2012

Yarl Geek Challenge - Season 1

சனிக்கிழமை (13-10-2012) விழா எண்டு சொன்னாங்களே இன்னும் மஞ்சப் பத்திரிக்கை அடிக்கலையே எண்டு பாத்தா, கன்னங்கரேல் எண்டு ஒரு backgroundல வெள்ளையா எதோ கிறுக்கியிருந்துது. ஒரு கரையிலை பல்பு வேறை. ஒருவேளை எடிசென்களையும் இவங்கதான் உருவாக்கிறான்களோ? Mind, Vision, Imagination, Idea.. எண்டு வேறை நிறைய ஏதேதோ இங்கிலிஷ்ல கிறுக்கியிருந்துது. பாதி புரியாவிட்டாலும் எதோ நம்ம பசங்க விவரமான ஆளுங்கதானே இந்தமுறை என்ன வித்தியாசமா பண்ணப்போறாங்க எண்டு ஆர்வமா சயந்தனுக்கு கால் போட்டு ரெண்டு வரி சொல்லுங்களேன் எண்டு கேட்டா.. சார் ஜெயின் கமிசன் ரேஞ்சுக்கு ஒரு அறிக்கை விட்டார். அதையெல்லாம் கிரகிச்சு நாம ஒரு article எழுதிரத்துக்குள்ள யாழ்ப்பாணம் நிஜமாகவே Silicon Valley ஆயிடும். 
நிற்க, வழமையா campus மாணவர்களையும் மற்றும் IT சார்ந்தோரையும் கூட்டி ரெண்டு மாசத்துக்கொருதடவை நடக்கும் ஒன்று கூடல் தானே.. இதிலை என்ன விசேசம் இருக்கப் போகுதெண்டு கேட்டீங்கன்னா.. இம்முறை சற்றே வித்தியாசமான பாணியிலமைந்த போட்டியொன்றை அறிமுகப்படுத்தப் போகிறோம். அதென்னன்னா "அமெரிக்காவில"...... அட திரும்பவுமா எண்டு கேக்காதீங்க. வேற வழி? சிலிகான் வாலி எண்டு சொல்லியாயிற்று அதால இனி அடிக்கடி அமெரிக்கா போகவேண்டி இருக்கும். கொஞ்சம் பொறுத்துக்கோங்க. எங்க விட்டேன்?? ஆ.. அமெரிக்காவில Apprentice அப்பிடின்னு ஒரு டிவி சீரியல். ரியாலிட்டி ஷோ எண்டும் சொல்லலாம். அதே பணியில் competition ஒன்றை யாழ்ப்பணத்தில் நடத்தப் போகிறோம். இதில் பங்குபெறும் அணிகளுடனான அறிமுக நிகழ்வு வருகிற சனி (13-10-2012) மதியம் ஒரு மணியளவில் சர்வோதயா ஹால் இல் நடைபெற இருக்கிறது.Proposal Round, Requirements Gathering, Design, Algorithm, Product strategy round என ஐந்து சுற்றுகளாக நடைபெறவுள்ள போட்டிகளில் கொழும்பு, பேராதெனிய மற்றும் மொரடுவா மாணவர்களும் பங்குபற்ற வசதியாக அக்டோபர் 26 முதன் 29 வரையான நீண்ட விடுமுறையில் நாட்களிலேயே ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. முதலாவது சுற்றான Proposal Round குழுக்கள் அறிமுக நாளான 13-10-2012 அன்று நடைபெறும். எனவே குழுக்களுக்கான பதிவுகள் நாளைய தினத்துடன் முடிவடைகின்றது. இந் நிகழ்வு தொடர்பான மேலதிக விபரங்களை http://yarlithub.org/geekchallenge.php இல் பெற்றுக்கொள்ளலாம். 

இதில் highlight ஆனா விடயம் என்னவென்றால் இந் நிகழ்விற்கு இலங்கையின் பிரபல IT நிறுவனங்களான Virtusa, hSenid மற்றும் WSO2 என்பன அனுசரணை வழங்குகின்றன. இம்மூன்று நிறுவனங்களுள் ஏதாவதொன்றில் இணைந்துகொள்வதே பெரும்பான்மையான கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களின் கனவாகும். இப்பேர்ப்பட்ட நிறுவனங்கள் முதன் முதலாய் எமது Yarl Geek Challenge! இன்மூலமாய் யாழில் காலடிஎடுத்துவைக்கின்றன. எனவே இத்தகையதொரு அரிய சந்தர்ப்பத்தை எந்தவொரு திறைமைசாலி மாணவனும் தவற விடக்கூடாதென்பதே எமது ஆசை. அதனால் முடிந்தளவு உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் இந்நிகழ்வு பற்றியும் அதன் மூலம் ஏற்படப்போகும் வாய்ப்புக்கள் பற்றியும் எடுத்துச்சொல்லுங்கள். நாளைய தகவல் தொழிநுட்பப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும்படியாக எமது இளைய தலைமுறையை வளர்த்தெடுப்பதில் நீங்களும் பங்காளியாகுங்கள்..!

இந்நிகழ்வுகள் அனைத்திலுமே IT சம்பந்தப்பட்டோர் மட்டுமல்லாது ITயில் ஆர்வமுள்ள எவரும் பார்வையாளர்களாக கலந்துகொள்ள முடியும். மொத்தத்தில் இவை திறமைகளுக்கான தேடல் என்பதையும் தாண்டி ஓர் சந்தோசமான ஒன்றுகூடல், கலந்துரையாடல், அறிவுப்பகிர்தல், கருத்தரங்கு.. எனவே உங்கள் அனைவரையும் அன்புடன் எதிர்பார்க்கிறோம்.

Yarl Geek Challenge - An event not to be missed!


Yarl Geek Challenge Prospectus

Related Posts


வியாழன், செப்டம்பர் 20, 2012

ஹிமாலயா கிரியேசன்ஸ் 2

"இப்ப கண்டிப்பா போய்த்தான் ஆகணுமா?"
மனைவி கேட்கும்போதே கணவனுக்கு அடிவயிற்றில் புளிகரைத்தது போலாகிவிடும். வேறென்ன? எங்கே தன்னையும் கூட்டிக்கொண்டு போகச் சொல்லிவிடுவாளோ எண்டு தான்.. :)
செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.
என்பதெல்லாம் அந்தக்காலம். நீ ஆஸ்திரேலியா போறியா நான் ஸ்ரீலங்கா போறன். இது இந்தக் காலம். காலம் ரொம்ப மாறிப்போச்சுது இல்லை? எதிலும் வேகம். ஒரு ரெண்டு நிமிடம் நிண்டு நிதானமா துக்கப்படவோ வருத்தப்படவோ நேரமில்லை. பல சமயங்களில் அதற்க்கான அவசியங்களும் அர்த்தமற்றவையாகிவிடுகின்றன.

சரி இப்ப நாம ஸ்டோரிக்கு வருவம். 

"இது எண்ட லைப்ஐயே மாற்றப்போற மீட்டிங்" என்று ஒருவழியா அவசர அவசரமாய் விடை பெற்ற கணவன் போற அவசரத்திலை இதயத்தை விட்டிடு போறத்துக்கு பதில் பைல்ஐ விட்டிடு போட்டார். 

ரொம்ப இம்போர்டன்ட் டாகுமென்ட்ஸ் எண்டு ஒரு மாசமா பாத்து பாத்து சேர்த்து வைத்தது. அப்பிடி லப்டோப்ல ஸ்கேன் பண்ணி கொண்டுபோக முடியாம என்ன திரவியமோ? இரவிலை தலாணிக்கு கீழை வைச்சுப் படுக்காத குறை. போன் பண்ணி கேக்கலாமேண்டால் ஒரே Engaged. மனுசிய விட்டு பிரிஞ்சாலும் பிரிவான்கள், ஆனா இந்த கண்டறியாத போன மட்டும் எப்பபார் கொஞ்சிக்கொண்டு இருப்பாங்கள். வேற வழி??

ஷ்ஷ்ஷ்... அருள் குளோபல் எக்ஸ்பிரஸ்.. உங்கள் பொதிகளை உலகின் எப்பாகத்திற்கும்.. அதிவிரைவு சேவைமூலம் அனுப்பிவைக்க..

"Did you Receive the File, Darling?" மனுஷன் போய்ச் சேந்தானா இல்லையா எண்டில்லை.. என்னா ஒரு ரொமாண்டிக் மெசேஜ்..

வாகீசண்ட அந்த கடைசி சிரிப்பு ஒரு trade மார்க் தான். அது மனுசிண்ட கெட்டிக்காரத்தனத்தை நினைத்தா.. இல்லாட்டி கீர்த்தி சொன்ன மாதிரி அப்பாடா ஒரு மாதிரி எஸ்கேப் ஆயிட்டம் எண்டா தெரியலை.


இந்த விளம்பரத்தில் அனைத்துவிதத்திலும் ஒத்துழைத்தவர் பலர். அதில் முதலாவது பதிவில் வந்தவர்களை விட அதிமுக்கியமாய் ஒரு சிலரை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். முதலாவது எடிட்டிங். இரண்டு மணி நேரத்துக்குள் அவசர அவசரமாய் செட் பண்ணி பிளான் பண்ணி சாதா கமெராவால் எடுக்கப்பட்ட framesஐ மட்டுமே வைத்துக்கொண்டு தனக்குத்தெரிந்த அத்தனை நுணுக்கங்களையும் பயன்படுத்தி உலகத் தரத்திற்குக் கொண்டுவருவதற்கான அத்தனை முயற்ச்சிகளையும் இரவுபகல் பாராது செய்த திரு.துசிகரன் அவர்களினது உழைப்பு நிச்சயமாய் ஆச்சரியப்பட வைக்கிறது.அடுத்து எப்போதும் போலவே சுகன்யன் இந்த முறையும் நிறையவே சிரத்தை எடுத்திருக்கிறார். அத்துடன் எக்ஸாம் எண்டு கூடப்பாராமல் நேரத்தை ஒதுக்கி தனது கருத்துக்களையும் சில இசையமைப்பு நுணுக்கங்களையும் பகிர்ந்து கொண்ட சுதர்ஷன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள். இன்னும் சில மாதங்களில் இசை சம்பந்தமான உயர்கல்விக்கு தென்னிந்தியா பயணிக்கவிருக்கும் எமது இசையமைப்பாளர் சுகன்யனுக்கு எமது நிறுவனத்தின் சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்ற விளம்பரத்தின் பின் Dubbing இல் சற்றே முக்கிய கவனம் எடுக்கச் சொல்லி பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

அதற்கேற்ப இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன யாழ் சேவையில் (யாழ்FM) முக்கிய அறிவிப்பாளர்களில் ஒருவரான PX.கலிஸ் அவர்களும் "வாடா போடா", "புழல்", "அழுக்கன் அழகாகிறான்" போன்ற தென்னிந்தியத் திரைப்படங்களில் பாடியவருமான "சிலோன் ஜெகனி" அவர்களும் இம்முறை தமது இனிய குரல்களால் விளம்பரத்திற்கு மெருகூட்டியிருக்கின்றனர். 

நாம் எம்மாலியன்ற எமது சிறந்த படைப்பை முன்வைக்க விரும்பும் போது, அதற்காய் நம்மை சார்ந்தோரும் தம்மாலியன்ற முழு ஆதரவையும் தந்து கூடவே நின்றுளைப்பதில் இருக்கும் மகிழ்ச்சி எல்லையற்றதே.

முதல் முறையாய்.. பணம் சேர்க்கிறமோ இல்லையோ ஆனால் நல்ல மனிதர்களை சேர்த்திருக்கிறோம் என்ற ஒரு திருப்தியைத்தந்த படைப்பு இது. 


உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.


Recent Posts

Labels

விமர்சனம் அனுபவம் Himalaya Creations ஈழம் "அவள்" ஒரு தொடர் கதை கவிதைகள் Jaffna இசை பாரதி கண்ணம்மா Himalaya சிறுகதை Ananthan சிங்கப்பூர் YIT yarl IT Hub JK உங்கள் பார்வைக்கு இளையராஜா campus harikanan printers கொலைவெறி NEP Ramavarma Steve Jobs bk srilanka இயற்கை கவிதை ஜெயமோகன் தேவதாசி யோகநாதன் அனந்தன் 2013 7ஆம் அறிவு Birthday CCIE Chundikkuli Girls College Dhanush Osho Singapore calendar harikanan kamal maayan calendar nishaharan sridevi suganyan thusikaran vijay அறிமுகம் அவள் ஒரு தொடர் கதை காலம் ஜனனி தமிழ் இனி தில்லானா நட்பு நிலவு நீ தானே என் பொன்வசந்தம் புகைப்படம் யுகபாரதி 2012 48HFP 48HFP Jaffna 50 shades of grey AE Manoharan AR Rahman Anu Art of Dying Australia Avon BMICH Barathiyar Blind Love Changing Seasons Chicago David Cameron Deepawali Film HDB Happy New year Homebrew Computer Club India’s Daughter JD JPL Jaffna University Jeyachandran Kaayam Karate Kaun Banega Crorepati Kung Fu Leena Manimekalai MGR Mariah Carey Mayan Mr. Harith Kariapper Naan Varuven National Geographic Nov 27 OGA PT Rajesh vaithiya Rajini Ricky Martin Rosy Senanayake Saraswathi Ranganthan Shaolin Spanish Eyes St. Johns College Sudha raguram The Big Bang Trailer Uduvil Girls college Vigil for Sivayoganathan Vidhiya Vigil for Vidhiya Zen are you in it bk gowri chundikkuli cup of life hsenid incredible india jam just a minute kumki songs lift logo love makeup march 8 meditation moorthy digital color lab moorthy guest house network panchangam poet thamarai pokkiri post office ragunaathaiyar samantha silicon valley simbu sitharth song soorya soul step up stretching room effect swan system thirisha thuppakki veena virtusa vishwaroopam wanted why this kolaiveri women's day wso2 yarl zulustyle அக்க்ஷய திருதியை அங்கவர்ணனை அம்பி குரூப் அற்புதத்தில் அற்புதம் இறுதிப்போர் இலங்கை முஸ்லிம் எம்.ஜி.ஆர் எஸ். ராமகிருஷ்ணன் ஏசுநாதர் கடிதம் கலிங்கத்துப்பரணி சகோதரத்துவம் சிவகுமார் சிவபுராணம் சீமான் சுவாதித்திருநாள் செங்கடல் ஜெயச்சந்திரன் தங்க மீன்கள் தனுஷ் தமிழ் தலை முடி திரிசங்கு சொர்க்கம் திருவாசகம் தீபாவளி நத்தார் நந்தகுமார் நந்திக்கடல் நல்லூர் நாக. இளங்கோவன் பண்டிகை பழைய மாணவர் சங்கம் பாரதி பிடித்தபத்து புன்னகை மன்னன் புரட்சித் தலைவர் மாணிக்கவாசகர் முள்ளிவாய்க்கால் மே 2009 மேதினம் வெண்முரசு வைரமுத்து
 
Copyright © ரசிகை. Design By New Blogger Templates
Support IE 7, On Sales, Best Design