முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

Yarl IT Hub - To Make Jaffna the Next Silicon Valley..


Yarl IT Hub - இது
என்கனவல்ல
உன்கனவல்ல; நம் கனவு
நம் எல்லோரினதும் கனவு

வானம் பார்த்த பூமியில்லை
ஆழத்தோண்டி நீரெடுத்த பூமியிது
ஆழியலை தழுவிடினும்
எழுந்துநின்ற தேசமிது

வல்லமையிருந்தும் வாழாதிருந்து
பாழாய்ப் போனதல்ல யாழென்று
பாரிற்குரைப்போம்

ஊரெல்லாம் தார்போட்டான்
நமக்கு தண்ணிகாட்டினானா?
தண்ணிமீதிலும் தீயேற்றிக்கற்ற
கல்வியெங்கே போயிற்றுரிங்கு?

வீதிமேல் தாரிடமுன்
வீதியின்தேவையை உணரவைப்போம்
முற்றத்து மல்லிகையின்
மணம் வீசவைப்போம்

ஒருவரல்ல இருவரல்ல
உலகெல்லாமிருந்து வந்து
உங்கள் வாசல் படலைகளைத் தட்டி
வீட்டுக்கொரு அறிவாளியைக் கேட்கிறோம்

வானிலிருந்து சூரியன் விழினும்
சந்திரன் வர மறுப்பினும்
கோடிகோடி நட்சத்திரங்களின் அணிவகுப்பில்
ஒரு புதிய "Silicon Valley"ஐ உருவாக்குவோம் வாரீர்!

Yarl - IT - HUB
To Make Jaffna the Next Silicon Valley..கருத்துகள்

பிரபலமான இடுகைகள்