தேவதாசி: அங்கவர்ணனை

by - 1/09/2012 12:05:00 பிற்பகல்


எவரனி திருமனசே..!

அரனிடை நெடில் வந்து  
மயூரனிடை சேர்ந்திட  
உதித்ததோர் மோகினியாம்
உரைக்குமின் கதைகேளீர்!அங்கவர்ணனை 

அஷ்வதீப ஒளிதனில்   
மின்னிடும் வளர்னுதலாம்  
தாரை பதியோவென 
மயங்குமோர் தேவதாசி

கரும்திரையூடும் காந்தமென  
கவர்ந்துதிழுக்கும் கண்கள்
கண்ண னிவனோவென
மயங்குமோர் தேவதாசி 

பவளமோ முத்தோ 
பரிகசிப்பது வோவன்றி 
பச்சிளம் சிரிப்போவென 
மயங்குமோர் தேவதாசி

பட்டும் படாதுமே
தொட்டுச் செல்லுமிதழ்கள் 
முட்களை உரசிடத்தானோவென
மயங்குமோர் தேவதாசி

மிஞ்சிய இறகுகளில் 
இயற்கை வண்ணங்களில் 
குயிலோவிலை மயிலோவென 
மயங்குமோர் தேவதாசி

மேல்வருடும் மென்விரல்கள் 
மதுதரும் கரும்போவிலை  
மதுசூதனன் குழலோவென 
மயங்குமோர் தேவதாசி

திண்ணிய தோழ்களிலே
தாவிடும் மனசறிந்து
தழுவிடானோ வென
மயங்குமோர் தேவதாசி***** 
தொடரும்..

You May Also Like

2 comments