இடுகைகள்

தேவதாசி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Martin and Me!

படம்
இப்பெல்லாம் ஒழுங்கா ஒருமனதா இருந்து ஒரு தொடர் எழுதுறதே பெரிய கஷ்டமா இருக்குது. அதாலை தான் முகப்புத்தகத்தை வேறை மூடிட்டு, கன நாளைக்குப்பிறகு  தேவதாசி ன்னு ஒரு தொடர் தொடங்கி ரெண்டு பதிவு போட்டிருக்க மாட்டம்.. கப்ல வந்து நம்ம மன்மதக்குஞ்சு எமி ஜச்சொனை இழுக்க நமக்கு Ricky Martin ஞாபகம் வந்து (நிற்க, இவர்கள் இருவருக்கும் என்ன சம்பந்தம் எண்டு என்னை கேக்காதீங்க), தேவதாசி இண்டைக்கு மார்டின் தாசியாகி இப்படியொரு பதிவு போடவேண்டியதாப் போயிட்டுது.  மு.கு: இங்கு மார்டின் என்பது ரிக்கி மார்டினை மட்டுமே குறித்து நிற்கிறது. நம்ம மார்டின் சாரை பெரும்பாலும் எல்லோருக்குமே தெரிஞ்சிருக்குமேண்டதால, நான் பெருசா அறிமுகமேண்டு குடுக்கப்போய், எனது அலட்டலை நீங்க கஷ்டப்பட்டு ஜீரணிக்க வேண்டியிருக்காது. தெரியாதவங்க விக்கி ல படிச்சுக்கோங்க. நான் இங்கை சொல்ல வந்தது, நான் எப்படி மார்டின் ரசிகையானோமெண்டு மட்டும் தான்.  இற்றைக்கு சுமார்.. வேணாம் இது பழைய வசனமாப்போட்டுது.. சரி.. பல வருடங்களுக்கு முந்தி எண்டைக்கோ ஒருநாள் பம்பலப்பிட்டி MC ல மைத்து.. மைத்து.. எண்டு ஒரு(கவனியுங்க ஒ...

தேவதாசி: அங்கவர்ணனை

படம்
எவரனி திருமனசே..! அரனிடை நெடில் வந்து   மயூரனிடை சேர்ந்திட   உதித்ததோர் மோகினியாம் உரைக்குமின் கதைகேளீர்! அங்கவர்ணனை   அஷ்வதீப ஒளிதனில்    மின்னிடும் வளர்னுதலாம்   தாரை பதியோவென  மயங்குமோர் தேவதாசி கரும்திரையூடும் காந்தமென   கவர்ந்துதிழுக்கும் கண்கள் கண்ண னிவனோவென மயங்குமோர் தேவதாசி  பவளமோ முத்தோ  பரிகசிப்பது வோவன்றி  பச்சிளம் சிரிப்போவென  மயங்குமோர் தேவதாசி பட்டும் படாதுமே தொட்டுச் செல்லுமிதழ்கள்  முட்களை உரசிடத்தானோவென மயங்குமோர் தேவதாசி மிஞ்சிய இறகுகளில்  இயற்கை வண்ணங்களில்  குயிலோவிலை மயிலோவென  மயங்குமோர் தேவதாசி மேல்வருடும் மென்விரல்கள்  மதுதரும் கரும்போவிலை   மதுசூதனன் குழலோவென  மயங்குமோர் தேவதாசி திண்ணிய தோழ்களிலே தாவிடும் மனசறிந்து தழுவிடானோ வென மயங்குமோர் தேவதாசி *****  தொடரும்..

தேவதாசி: இறைவணக்கமும் தன்னிலைவிளக்கமும்

படம்
இறைவணக்கம் சிறு மனக்கும்பி தனிகரோளிந்து வன்கூடி யான் கலை விழித்தெழுது கண்ட சோதியாம் கார்மேக வண்ண நிழலிலாம் வேறிலா சாந்த கோடி பதும நின் பாதம் தொழுதே தன்னிலைவிளக்கம் நின்பொருள் தேடி வந்திலோம் நாளை எங்கென்றும் அறிகிலோம் வழி ஏதுமறியா வெறுமையுடன் விதிவழி செல்லும் கால்கள் சூடியபின் மனம்சலித்து சாக்கடைதனிலே வீசிடினும் வலிகளைமறைத்தே புன்சிரிப்புடன் விலகிடுவாள் இந்தத்தேவதாசி உமையவள் கட்டளை உரைப்பதென் கடன் உவப்பிடின் நலம் உவர்த்திடினும் குறையிலா *****  தொடரும்..