சுவாதித்திருநாள் மகாராஜா
உலகத்திலை எத்தினையோ பேர் பாடுறாங்க. ஆனா எல்லாராலும் எல்லாரையுமே ரசிக்க முடிவதில்லை. சிலருக்கு குரலின் கம்பீரம் பிடிக்கும், சிலருக்கு நளினம் பிடிக்கும், இன்னும் சிலருக்கோ அதன் இனிமை பிடிக்கும். பலர் தாளக்கட்டை கவனிப்பார். வேருசிலருக்கோ சுருதி (கமலின்டை மகளில்லையப்பா) இம்மிபிசகாமல் இருக்க வேணும். இதையெல்லாம் தாண்டி எத்தனை பேர் ஆத்மார்த்தமாய் உணர்ந்து ரசித்திருப்பார்கள்? பொதுவாக கர்நாடக இசையை எடுத்துக்கொண்டால் இன்றுள்ளவர்களுக்கு Dr.பாலமுரளிக்ருஷ்ணா தான் எல்லாமே. ஒருமுறை ஊர்லை ராமக்ரிஷ்ணன் மடத்தில் நடந்த கச்சேரிக்கு போயிருந்தேன், அவர் தில்லானா பாடும் விதம் பிடிக்கும். ஆனாலும் ஏனோ முழுமனதாய் இருந்து ரசிக்க முடிந்ததில்லை. (பின்னையென்ன பின்னாலை யாரெல்லாம் வந்திருப்பாங்க எண்டு நோட்டம் விட்டிடிருந்தா பாட்டை எப்படியாம் ரசிக்கிறது?) இத்தனை வருடங்களின் பின் அவரின் ஒரு தில்லானா ஒளிப்பதிவை தேடிட்டிருந்தப்போ தற்ச்செயலாய் கண்ணில்பட்டவர் தான் நம்ம ராமவர்மா சார். அன்னிவரைக்கும் அவர் யாருன்னே எனக்கு தெரியாது. அதாலை எல்லா தில்லானாவையுமே போட்டிட்டு கடைசியா எதுக்கும் சும்மா போட்டுப் பாப்பம் எண்டு ...