• Home
  • About
  • Articles
  • Books
    • Kanavukalaith Thedi
    • Peyarili
    • Testimonies of Silent Pain
    • Reviews
  • Blog
    • Aval Oru Thodar Kathai
    • Bharathi Kannamma
    • Short Stories
    • Others
  • 48HFP
  • Guest Talks

Gowri Ananthan

Writer | Social Entrepreneur | Ambassador of Peace | Counsellor | Psychotherapist | Traveler | FreeThinker

facebook google twitter instagram linkedin
மரண வாசலில்
மலர்ந்த காதல்
மறுஜென்மம் வேண்டாம்
முடித்துவிடு இங்கேயே..!



முதல் பார்வையிலே
மூச்சை நிறுத்தியவன்
முகவரி அறிந்ததும்
முகம் திருப்பினான்

அவளுக்குக் கோபம் வரவில்லை

நம்பியிருந்தாள்
முன்வந்து நின்றான்
முகம் பார்த்தான்
முத்தம் கொடுத்தான்

முதல் காதல்
முதல் முத்தம்
மூன்றே நிமிடங்கள்
முதல் பிரிவு

அவளுக்குக் கோபம் வரவில்லை

மறுபடி வந்தவன்
முகம் காட்டாது
முகவரியும் சொல்லாது
மறந்துவிடென்று

மறைமுகமாய்ச் சொல்லியனுப்பி
மண்வாசம் போதையேற்ற
முல்லை மயக்கியிளுக்க
முரசம் கொட்டினான்

அவளுக்குக் கோபம் வரவில்லை

வேறிடம் செல்கிறான்
விரைவில் சொல்கிறோம்
வந்துபார் என்றவர்கள்
வழிமாறினார்கள்

மூச்சுள்ளவரை போராடினான்
மரண வாசலில் நின்றும்கூட
மறந்தும் கேட்க்கவில்லை
மங்கையவள் எங்கேயென்று

அவளுக்குக் கோபம் வரவில்லை

இத்தனை வருடங்களில்
எத்தனை காதல்
எத்தனை காமம்
எத்தனை ஏமாற்றம்

அத்தனை வலிகளையும்
தாங்கித் தாங்கியின்று
இதயம் எரிமலையாய்க்
கொதிக்கின்ற போதிலுமே

அவளுக்குக் கோபம் வரவில்லை

அமைதியாயிருந்தான் அவனன்று
கொள்கை கலைந்துவிடுமென்று 
அழாதிருக்கிறாள் அவளின்று
முகப்பூச்சு கலைந்துவிடுமென்று

மற்றபடி அன்று மட்டுமல்ல
இன்றும்.. ஏன் என்றுமே 
அவளுக்குக் கோபம் வராது  
யார்மீதுமே..!

Share
Tweet
Pin
Share
1 comments

உலகத்திலை எத்தினையோ பேர் பாடுறாங்க. ஆனா எல்லாராலும் எல்லாரையுமே ரசிக்க முடிவதில்லை. சிலருக்கு குரலின் கம்பீரம் பிடிக்கும், சிலருக்கு நளினம் பிடிக்கும், இன்னும் சிலருக்கோ அதன் இனிமை பிடிக்கும். பலர் தாளக்கட்டை கவனிப்பார். வேருசிலருக்கோ சுருதி (கமலின்டை மகளில்லையப்பா) இம்மிபிசகாமல் இருக்க வேணும். இதையெல்லாம் தாண்டி எத்தனை பேர் ஆத்மார்த்தமாய் உணர்ந்து ரசித்திருப்பார்கள்? பொதுவாக கர்நாடக இசையை எடுத்துக்கொண்டால் இன்றுள்ளவர்களுக்கு Dr.பாலமுரளிக்ருஷ்ணா தான் எல்லாமே. ஒருமுறை ஊர்லை ராமக்ரிஷ்ணன் மடத்தில் நடந்த கச்சேரிக்கு போயிருந்தேன், அவர் தில்லானா பாடும் விதம் பிடிக்கும். ஆனாலும் ஏனோ முழுமனதாய் இருந்து ரசிக்க முடிந்ததில்லை. (பின்னையென்ன பின்னாலை யாரெல்லாம் வந்திருப்பாங்க எண்டு நோட்டம் விட்டிடிருந்தா பாட்டை எப்படியாம் ரசிக்கிறது?)

இத்தனை வருடங்களின் பின் அவரின் ஒரு தில்லானா ஒளிப்பதிவை தேடிட்டிருந்தப்போ தற்ச்செயலாய் கண்ணில்பட்டவர் தான் நம்ம ராமவர்மா சார். அன்னிவரைக்கும் அவர் யாருன்னே எனக்கு தெரியாது. அதாலை எல்லா தில்லானாவையுமே போட்டிட்டு கடைசியா எதுக்கும் சும்மா போட்டுப் பாப்பம் எண்டு நினைச்சு RVசாரின் வீடியோவை கிளிக் செய்தால் முன்பொருநாள் RMஇனது குரல் எப்படி செவிப் பறையில் மோதி உயிர்கொடுத்ததோ அதே போல மீண்டும் புதிதாய் பிறந்ததுபோல ஒரு உணர்வு. ஆனா இந்தமுறை காட்டுக் கத்தல் எல்லாம் இல்லை. தென்றலைப் போல மெலிதாய் வருடிச் சென்றது.


பிறகென்ன மார்டினுக்கு நடந்ததுதான் வர்மா சாருக்கும் நடந்துது. youtubeல இருந்த அவரது முக்கால்வாசி பாட்டுகளுக்கு மேல கேட்டு முடிச்சாச்சு. என்ன கேட்டென்ன? அவர் ஒரு சிறந்த குருவாக இருக்கலாம். ஆனாலும்  நாமெல்லாம் போய் ஏகலைவன் ஆகமுடியாது சரியோ?

சரி சரி.. அதை விட்டுத்தள்ளுங்க. ஆனா அதென்ன இளவரசர் RV எண்டு இருக்குது எண்டு விக்கில தேடிப் பாத்தால், சார் நம்ம சுவாதித்திருநாள் மகாராஜாவின் வம்சாவழி என்டிருந்துதா ஒருகணம் பகீர் எண்டு ஆயிடுச்சு. அது ஏன்னா, முன்னம் ஒருக்கா சங்கீதம் மூன்றாம் தரம் எழுதிட்டிருந்தப்போ சுவாதித்திருநாள் மகாராஜாவைப் பத்தி எழுதச் சொல்ல நாம போயி சியாமா சாஸ்திரிகளை பற்றிஎல்லே எழுதிட்டு வந்தனாங்கள். (அது பாருங்கோ, அப்ப உந்த இயக்கப் பாட்டுகளை தீவிரமா வாசிச்சிட்டிருந்த காலம். ஹிஹி.. விளங்கினாச் சரி). அன்னிலையிருந்து நம்ம மகாராஜா கிட்டத்தட்ட ஒரு எனிமி ரேஞ்சுக்கு வந்திட்டார். ஆனாலும் பிறகு நமக்காகவேன்டியே சில மாயமாளவகௌளை கீர்த்தனங்களையுமே இயற்றியிருக்கிறார் என்று தெரிய வந்தப்போ அட நம்ம கஷ்டங்களைப் புரிந்துகொண்ட ஒரு மகாராஜா எண்டு ஒரு மரியாதை வந்திருந்துது. ஆனாலும் அப்பெல்லாம் அவருக்கும் சுந்தரவல்லிக்கும் இருந்த தொடர்பெல்லாம் ஆராய நேரமிருக்கவில்லை. தேவையும் இருக்கவில்லை.

சில வருடங்களுக்கு முன்பு தான் ஒரு முறை தென்இந்தியாவை சுத்திப் பார்க்கப் போயிருந்தப்போ நம்ம டிரைவர் மகாராஜாவின் குதிரமாலிகா மாளிகை பக்கத்திலைதான் இருக்கு போய் பார்க்கச் சொன்னார். நாமதான் பத்மநாதபுரம் மாளிகையே பாக்கிறமே இது எதுக்கு என்று தோன்றியது. ஏற்கனவே பத்மநாதசுவாமி கோவிலுக்குள்ளை போறத்துக்கு மேலை கீழை எண்டு ரெண்டு வேட்டிய சுத்தி அனுப்பியவர்கள் மேலை இன்னும் கடுப்பு போனபாடில்லை. இருந்தும் எதுவோ ஒன்று போகச்சொல்லி உந்த விருப்பமின்றியே உள்ளே செல்வதற்கு காலடி எடுத்து வைக்கையில் இதயம் ஏனோ படபட வென்றது. அதன் பின் உள்ளே என்ன நடந்தது, என்ன பார்த்தேன் என்பதெல்லாம் இன்றுவரை எவ்வளவோ முயன்றும் ஞாபகப்படுத்த முடியவில்லை. எதோ time machineல போட்டு வந்தாப்ல இருந்துது.

கிட்டத்தட்ட நெப்போலியன் பிரமிட்டுக்குள்ளை போய்ட்டு வந்தது போலத்தான். வெளியாலை வந்து பிரம்மை பிடிச்சாப்போல இருந்தப்போ, அவர்கள் மாளிகையை மூடும் நேரம் தாண்டியிருந்ததால் சீக்கிரமே வெளியேறச் சொன்னார்கள். மனமில்லாமல் வந்தது, இப்போ வெளியேற மனமில்லாமல் இருந்தது. இத்தனைக்கும் அதொன்றும் பத்மநாதபுரம் மாளிகை போல் ஆடம்பரமாயிருக்கவில்லை. முதலில் பார்ப்பவர்களை உடனே ஈர்க்கக்கூடிய எந்தவிதமான அம்சமும் அதனிடம் இல்லை. இருந்தும் ஏதோவொரு இசை காற்றில் கலந்து வந்துகொண்டிருந்தது. அதை என்னால் கேட்க முடியவில்லை, ஆனால் உயிர்வரை சென்று தொட்டது. பிறகு, ஒவ்வொரு வருடமும் சுவாதித் திருநாளுக்கு இந்த மாளிகையில் தான் இசை நிகழ்ச்சி நடக்கும் என்று கேள்விப்பட்டபோது எப்படியும் ஒருமுறையாச்சும் போகவேண்டும் என்றொரு ஆசை. இந்தமுறையும் முடியவில்லை. பார்க்கலாம்..

நிற்க, ஏன் உலகத்தில் இத்தனை பேர் இருக்க ஒருசிலரின் குரல்/பார்வை மட்டும் உயிர்வரை தொடுகின்றது என்று நம்ம பாஸ் கிட்டை கேட்டேன். அவர் ஏதும் பேசாமல் குசினிக்குள்ளை போனார். இதென்னடா வம்பாப் போச்சு நம்மை சமைக்கச் சொல்லப் போறாரோ எண்டு பாத்தா ரெண்டு கரண்டியை எடுத்து ஒன்றைத் தட்டி மற்றதின் அருகில் கொண்டு சென்றார். அடடே நம்ம பரிவுத் தத்துவம்.



Share
Tweet
Pin
Share
6 comments


இன்னிக்கு திடீரெண்டு ஏனோ இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே எண்டு பாடிட்டு இருந்தப்போதான் அட நம்ம JDயை  மன்னிக்கவும் JC சாரைப் பத்தி கொஞ்சம் எழுதலாமே எண்டு தோணிச்சுது. SPB, யேசுதாஸ் ஹரிஹரன் என்று இத்தனை ஜாம்பவான்கள் இருக்க உனக்கு ஏன் சாரைப் பிடிச்சுது என்று நீங்க கேட்டா கொஞ்சம் இந்தப் பாட்டைப் பாருங்க.


சத்தியமா இது ஜெயச்சந்திரன் சார் பாடினதெண்டே நம்ப முடியலைங்க. குரல்லை இன்னும் என்ன இளமை எண்டு பாருங்க? இதப் பார்க்கும் போது தாலாட்டுதே வானம் என்ற பாடலின் ஞாபகம் வருவதை ஏனோ தடுக்க முடியவில்லை. இசையப் பத்தியெல்லாம் எனக்கு ஒண்டும் தெரியாதுங்கோ.. ஆனா எதோ ஒரு பீலிங்க்சு.. சே என்னாச்சு உனக்கு? வாரத்தில போடுறதே ரெண்டு பதிவு.. அதிலையும் இப்பிடி சொதப்பினா எப்படி? ஹ்ம்ம்.. நெக்ஸ்ட்டு..


இது கொஞ்சம் மனதை சற்றே ஆழமாய் வருடிச்செல்லும் பாடல். ஆங்கிலத்தில் சொல்வதானால் "Where have you been all my life?". டோய்.. இது இப்ப தேவையா உனக்கு? நிச்சயமா RM வந்து உண்டை ப்ளாக்ஐ வாசிக்கப் போவதில்லை. ஆனால் Mr.JD தற்ச்செயலாய் தடுக்கி விழுந்து வந்து வாசிச்சாலும் வாசிக்கலாம் யார் கண்டது? ஆனாலும் கவனம் நம்ம ஜெயச்சந்திரன் சாருக்கு கொலைவெறி பாட்டே ஆகாதேண்டு எழும்பி போய்ட்டார். நீவேறை அதிகமா உண்டை அரைகுறை ஆங்கிலப் புலமையைக் காட்டப் போய் மாட்டிக்காதை சரியோ?


நிற்க, என்னதான் சாரின் வைதேகி காத்திருந்தாள் பாடல்கள் வெகுவாக ரசிகர்கள் மத்தியில்  பிரபலமாகியிருந்தாலும், என்னை தீவிர ரசிகையாக்கியது தேவராகம் படத்திலிருந்து ஷிஷிரகால என்ற பாடல் தான். உலகத்திலை எத்தினையோ விதமான உறவுகள் இருக்கு. வெளிப்படையாய் சொல்ல முடியாத சில உறவுகள், கானல்நீராய்ப் போன உறவுகள், பிரிவு நிச்சயம் என்று தெரிந்தும் தொடரும் உறவுகள்.. உள்ளே ஏதோ வலிக்கும். ஆனாலும் அந்த வலிகூட ஒரு சுகம் தானே. அந்த சுகமான வலியை எப்படியெல்லாம் ஜெயச்சந்திரன் சார் பாட்டிலை கொண்டந்திருக்கிறார் பாருங்கோ.

அடுத்து ஒரு situation song.(?!) பெண்கள் பிள்ளை பெற்றால் மட்டும் தான் தாயாக முடியுமேன்றில்லை (சிலர் பெற்றாலுமே தாயாக முடியாது.. அது வேறை, அதை பிறகு பாப்பம்.) தவிர, உண்மையான அன்பு கூட யாரும் அறியாமலே அவளைத் தாயாக்கிவிடும்.  தலைகோதி தூங்க வைக்க, குளிப்பாட்டிவிட, உடையணிவித்து  காலணிமாட்டிவிட இன்னும் எத்தனைவோ.. இந்தப் பாடலில் ராதிகாவின் அன்புகூட அத்தகையதே.. ஆனாலும் விஜயகாந்தின் இளமைத்தேடலால் அதனை அறிந்துகொள்ள முடியவில்லை. முடியவில்லை என்பதைவிட முயலவில்லை என்றே சொல்லலாம். ஒரே வரிகளை இருவேறு உணர்வுகளுடன் கொண்டுசெல்லும் இந்தப் பாடலில் ஜெயச்சந்திரன் சார் நிஜமாகவே குரலால் காதலிக்க வைத்திருக்கிறார்.


பாதைகள் ஒன்றெனினும் 
பயணங்கள் எதிர்த் திசையிலே.. 
தேடல்கள் ஒன்றாயினும் 
தேடியடைந்ததன் அர்த்தங்கள் வேறே.. 
உணர்வுகள் ஒன்று சேருமிடத்தில்.. 
உறவுகளின் விருப்பங்கள் வேறு 
இனிய பொழுதுகள் சுகம் தரினும்
இனியென்றும் வராதென்று புத்தி சொல்கையில்  
இதையமே நீ கேட்க்கத்தான் வேண்டும்.





சரி சரி ரொம்ப serious ஆய்டாதேங்கோ.. என்னதான் நம்ம பாஸ் கொஞ்சம் சீரியஸ் பேர்வழின்னாலும், அவரும் சிரிக்க வைச்சிருக்கிறார்.. எப்பிடின்னா..


அட, சிங்கபூரில காதலிக்க இப்படி கூட இடங்களிருக்குதா என்ன? (மு.கு: சீனரி மற்றும் பாட்டை மட்டும் ரசிங்க. முன்னாலை ரெண்டுபேர் போடுற கூத்தைப் பற்றி நான் மூச்..)


உங்கள் கவனத்துக்கு: "In Zoo, They Feed panthers with Horse meat" 

Share
Tweet
Pin
Share
No comments


பதிவு எழுவதை நிறுத்திவிடலாம் என்று பலநேரங்களில் நினைத்திருக்கிறேன். அப்போதெல்லாம் யாரோ ஒருவர் வந்து இல்லையில்லை தொடர்ந்து எழுதுங்கள் என்று சொல்வார்கள். நேற்று கூட ஒரு நண்பர் கதைக்கும்போது "ஏன் பதிவு எழுதுவதை நிறுத்திவிட்டீர்கள்" என்று கேட்கையில் "ஜனனிக்கு உடம்பு சரியில்லை அதுதான்" என்று ஒரு சாக்கு சொன்னேன். எழுத வேண்டுமென்று ஒரு நினைப்பு இருந்தால் என்ன தடங்கல் வந்தாலும் ஒரு ரெண்டு வரியாவது எழுதிவிட முடியாதா என்ன? ஆனால் இசைக்க முடியுமா?



"மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே
சில மனிதர்களை அறிந்துகொள்ளும் அறிவை வைத்தானே


அறிவைவைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அழகை கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே "




என்ன நீயும் பெண்ணியம் பேச வெளிக்கிட்டியா எண்டு கேக்காதேங்கோ. எது எவ்வாறு வேண்டுமானாலும் இருக்கட்டும். நான் அதப்பற்றிஎல்லாம் இப்ப கதைக்கிறதா இல்லை. அதால இண்டைக்கு நான் எடுத்துக்கொண்ட விடையம் என்னவென்றால் "பெண்களும் வீணையும்" என்பது மட்டும்தான். பெண்களை வீணைக்கு ஒப்பிட்டாலும் ஒப்பிட்டார்கள் போறவன் வாறவன் எல்லாம் என்னமா படுத்திஎடுக்கிரான்கள். அதிலும் திரையில் வீணை எவ்வாறெல்லாம் பாடாய்ப் படுத்தியிருக்கிறார்கள் என்று கொஞ்சம் பார்ப்பமா?

முதலில், அதோ மேக ஊர்வலத்தில் வீணையை தூக்கி மேலை, கீழை என்று என்னமா எறிகிறார்கள் என்று பாருங்க. நான் வெகுவாக ரசித்துப் பார்த்த பாடல்களில் இதுவும் ஒன்று. அதற்குக் காரணம் மோகினியின் நளினமா, மனோவின் குரலின் காந்தாரமா என்று தெரியாது. ஆனால் காட்சியமைப்பில் ஒவ்வொரு தடவையும் வீணையை தூக்கிப் போடும்போது நெஞ்சுக்குள் 'பக் பக்' என்றிருக்கும். முந்தி ஒருதடவை வீணையை வைக்கும் போது சற்று கவனக்குறைவா வைத்துவிட்டேன். மெல்லிய சத்தம் தான் கேட்டது, அதற்கே எத்தனை திட்டு வாங்கியிருப்பேன்?  இசைக்கருவிகள் எல்லாம் தெய்வத்துக்கு சமானம், அதனை வெகு அவதானமாக கையாளவேண்டும் என்று சொல்வார்கள். 

நிற்க, அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்று கிறங்கிய கண்களாலும், மிதமான குரலிலும் KR.விஜயா பாடும்போது விரல்கள் மட்டும் உச்சஸ்தாயியில் இருக்கும். ஸ்வரத்துக்கும் அவர் கையசைவுக்கும் சம்பந்தமேயிருக்காது. ஆனாலும் மீண்டும் கோகிலாவில் சின்னஞ்சிறு வயதினில் எனக்கோர் சித்திரம் தோன்றுதடி என்று தவிக்கும் மனதுடன் தயங்கித் தயங்கி கமலைப் பார்க்கும் ஸ்ரீதேவியிடம் மட்டும் ஏனோ கோபம் வரவில்லை. 

இடையில் ஸ்ரீதேவி 'உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர் ஊமையைப் போலிருந்தேன்' என்றுவிட்டு  வரிகளை மறந்துபோய் முழிக்க, உடனே கமல் சுதாகரித்து 'கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு' என்று அவரைக் காப்பது மட்டுமில்லாது தனது சம்மதத்தையும் மறைமுகமாகவே சொல்லிவிடுகிறார். 

இருவருக்குமிடையில் பட்டும் படாமலும், தெரிந்தும் தெரியாமலும், புரிந்தும் புரியாமலும் என்னவொரு chemistry பாருங்க..




சே.. வீணையைப் பத்தி தொடங்கீட்டு கடைசில கமலும் ஸ்ரீதேவியும் எப்படியெல்லாம் திரையில் romance பண்ணினார்கள் என்ற ஆராய்ச்சிப் பதிவாயிடும் போல கிடக்குது. அதால அதைப்பத்தி பிறகொருநாள் விரிவா சொல்றன். இப்ப நம்ம வீணையைக் கொஞ்சம் பாப்பமா?

அகத்தியர் படத்தில் வென்றிடுவேன் என்ற பாடலில் பாருங்கள். அரசனும், முனிவரும் கையிலை வீணையை வைத்துக்கொண்டு என்னமா போட்டி போடுவார்கள். அது பாவம் சும்மா சிவனே என்று மடியிலை கிடக்கும். கடைசிலைதான் இருவருக்கும் தன்முனைப்பு/போட்டி அதிகமானவுடன் ஆவேசமாய் எடுத்து 'டங்கு டங்கு' என்று அடிப்பார்கள். அது என்ன செய்யும் பாவம்? ஒவ்வொரு நரம்பாய் அறுந்துகொண்டு போகும். ஆனாலும் விடமாட்டார்கள். இறைவனை மகிழ்விக்கும் போட்டியில் வீணை பாவம் நடுவில் கிடந்தது தவிக்கும். வெல்லவேண்டும்.. போட்டியில் வெல்லவேண்டும்.. இசைப்போட்டியில்.. வாழ்க்கைப் போட்டியில்.. அதற்கிடையில் வீணையைப் பத்தி, பெண்ணைப் பத்தி, வீணையின் நரம்புகள் போன்ற அவளின் மெல்லிய உணர்வுகளைப் பத்தியெல்லாம் கவலைப்பட யாருக்கு நேரமிருக்கு? 

சரி சரி புலம்பலை நிறுத்திறுயா?? போதும்..

திருவிளையாடல்ல பாட்டும் நானேவில் சிவாஜியை விட(பிக்ஸ் வந்தாப்பல எல்லாம் வாசிக்கப்படாதுங்கோ. வீணை! அது பெண்ணு மாதிரி. புரியுதுங்களா?!) இல்லாததொன்றில்லை என்று T.R.மகாலிங்கம் தம்புராவை ஓரளவு நல்லாவே வாசித்திருப்பார். எனக்குத்தெரிந்து வெள்ளித்திரையில் வீணையை வீணையாய் (பெண்ணாய் நினைத்து?) ஆசையுடன், ஒருவித நளினத்துடன் அழகுற தழுவியது(வாசித்தது?) என்றால் அது சிவகுமார் மட்டும் தான்.



சின்னத்திரையிலை நாடகமேண்டு நான் பெரிசா பாக்கிரதில்லையென்டாலும் "உருதிர வீணை" ஒழுங்கா பாத்திருக்கிறன். அதிலும் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் முதல்ல ஒரு அஞ்சு நிமிசத்துக்கு ருட்ரவீனையிலை ஒவ்வொரு ராகம் வாசிப்பார்கள். அப்பிடியே செத்திடலாம் போல கிடக்கும். என்னவொரு அதிர்வு, உருக்கம். அமிர்தவாஹினி பாடி மழை வந்தது என்று சொல்லும்போது நான் நம்பவில்லை. ஆனாய் இந்த தொடரில் இந்த ராகத்தை வீணையில் வாசிப்பதைக் கேட்டதும்.. சந்தேகமேயில்லை.. மழையென்ன.. அமிர்தமே வானிலிருந்து பொழியுமே..

சின்னத்திரை, பெரியதிரை எல்லாத்துக்கும் வெளியால போய்ப்பாத்தா சரஸ்வதி, ராமவர்மா என்று பலர் இருந்தாலும் நாம ரசித்தது ராஜேஷ் வைத்தியாவை மட்டும் தான்.. 'அழகே.. அழகே' என்று என்ன அழகா  வாசிப்பார் பாருங்க. சான்சே இல்லை.. He is really Great!

அவரின் நிகழ்ச்சிகள் எல்லாமே அற்புதமான நடையில் கொண்டுசெல்வார். அது அவரது பாடல் தெரிவுகளா, அல்லது அவற்றை நளினமாய் கையாளும் அவரது அசாத்திய திறமையா என்று தெரியவில்லை. ஒன்றிலிருந்து மற்றதற்கு தாவும் விதமே ஒரு தனியழகாயிருக்கும்.

பெண்கள் பெரும்பாலும் ஆண்களிடம் எதிர்பார்ப்பதுகூட இவ்வகையான அன்பை, காதலை/காமத்தைத்தான் போலும்!







Share
Tweet
Pin
Share
No comments


இப்பெல்லாம் ஒழுங்கா ஒருமனதா இருந்து ஒரு தொடர் எழுதுறதே பெரிய கஷ்டமா இருக்குது. அதாலை தான் முகப்புத்தகத்தை வேறை மூடிட்டு, கன நாளைக்குப்பிறகு தேவதாசின்னு ஒரு தொடர் தொடங்கி ரெண்டு பதிவு போட்டிருக்க மாட்டம்.. கப்ல வந்து நம்ம மன்மதக்குஞ்சு எமி ஜச்சொனை இழுக்க நமக்கு Ricky Martin ஞாபகம் வந்து (நிற்க, இவர்கள் இருவருக்கும் என்ன சம்பந்தம் எண்டு என்னை கேக்காதீங்க), தேவதாசி இண்டைக்கு மார்டின் தாசியாகி இப்படியொரு பதிவு போடவேண்டியதாப் போயிட்டுது. 
மு.கு: இங்கு மார்டின் என்பது ரிக்கி மார்டினை மட்டுமே குறித்து நிற்கிறது.

நம்ம மார்டின் சாரை பெரும்பாலும் எல்லோருக்குமே தெரிஞ்சிருக்குமேண்டதால, நான் பெருசா அறிமுகமேண்டு குடுக்கப்போய், எனது அலட்டலை நீங்க கஷ்டப்பட்டு ஜீரணிக்க வேண்டியிருக்காது. தெரியாதவங்க விக்கில படிச்சுக்கோங்க. நான் இங்கை சொல்ல வந்தது, நான் எப்படி மார்டின் ரசிகையானோமெண்டு மட்டும் தான். 

இற்றைக்கு சுமார்.. வேணாம் இது பழைய வசனமாப்போட்டுது.. சரி..

பல வருடங்களுக்கு முந்தி எண்டைக்கோ ஒருநாள் பம்பலப்பிட்டி MCல மைத்து.. மைத்து.. எண்டு ஒரு(கவனியுங்க ஒண்ணுதான்) நண்பியுடன் சுத்திட்டிருந்தப்போ.. ஒரு மியூசிக்ஷாப்க்கு கூட்டிடுப்போனா. அவ ஒரு ஆங்கிலப்பாட்டுப் பைத்தியம். நாமக்கோ அப்பெல்லாம் ஆங்கில அறிவு ரொம்ப கம்மி (இப்பமட்டும் என்னவாம்? சும்மா தெரிஞ்ச ரெண்டு வார்த்தையை வைச்சு பீத்திட்டிருக்கிரம். உடுவில்லையோ கோன்வேன்ட்லையோ படிச்சம் எண்டு யாரிட்டையும் சொல்லிடாதீங்கப்பா).. ஆனா மைத்து சும்மா ஆங்கிலத்தில நல்லா வெளுத்து வாங்கும். அதால அவள் வாங்குவதுக்கேண்டு பொறுக்கிய CD எல்லாத்தையுமே ஒருவித பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான், என்னிடம் 'எதுவுமே வாங்கவில்லையா?' எண்டு கேட்டாள். எனக்கு ஒருமாதிரியாப்போச்சுது. கடைக்காரன் வேறை ஏளனமாப் பாக்கிராப்போல இருந்திச்சுதா.. ஏதாச்சும் எடுத்தே ஆகணும் என்கிற நிலைமை. தோழியிடமே suggestion கேட்டேன். அப்போ தற்ச்செயலா கண்ணில பட்டவர்தான் இந்த திருவாளர் மார்டின் அவர்கள்.. அவர் யாருன்னே அப்போ எனக்கு தெரியாது. ஆனா அந்தக் கண்ணு மட்டும் இருக்கே.. சே. இங்கயும் கண்ணா.. வேணாம் விட்டிடலாம்.

நமக்கெல்லாம் ஆங்கிலத்தில, கதைச்சாவே புரியிரத்துக்கு ரெண்டு நிமிஷமாகும், இதிலை பாடினா கேக்கவா வேணும்? கொண்டு வந்து போட்டுப் பாத்தா.. முதலாவது பாட்டு 'Livin’ La Vida Loca' சுத்தம்..  என்னயிது வொட்காவோ லொக்காவோ எண்டு எரிச்சலாப் போய் அகராதிய தூக்கி கிட்டத்தட்ட அம்பதுவாட்டி புரட்டியிருப்பன். ஆனா பொருளையே காணோம். இவங்களையெல்லாம் பாடச்சொல்லி யார் அழுதது? தூக்கி ஒரு மூலைல போட்டாச்சு. ஆனாலும் அந்தக் கண்கள் மட்டும் ஏனோ என்னை கேள் கேள் எண்டு சொல்லிட்டே இருந்திச்சுது.

ஒரு ரெண்டு நாளைக்குப் பிறகு திருப்பி எடுத்துப் போட்டன். இந்த தடவை வரிசைல போகாம இடைக்கில பாப்பம் எண்டுபோட்டு பாத்தா கண்ணில பட்டது 'The Cup Of Life (Spanglish Version)'. வரிகளே கவித்துவமா இருக்குதே கொஞ்சம் கேட்டுப் பாப்பம் எண்டு பிளே பண்ணினா.. காதுக்குள்ளை டமார் எண்டு விழுந்த முதல் வார்த்தை 'Do you really want it? ' அஹ்.. கேக்கலை எகெயின்? Do you really want it? (yeah) 



ஒரே குரலில் போதையும் உற்சாகமும் கலந்தே இருக்குமா? அதிலும் ஆங்கிலப்பதிப்பில் 'I see it in your eyes' எனும்போது குரல்ல ஒரு குழைவு இருக்குமே பாருங்க.. யம்மாடிவோவ்.. பிறகென்ன மைத்துவிடம் இருந்த மிச்ச மீதி ரிக்கி CDகள், கணனியில் சேர்த்து வைத்திருந்ததென எல்லாத்தையுமே தூக்கிட்டுவந்து போட்டுபோட்டு கொஞ்சக்காலமா வீட்ல இல்லையில்லை என்ரை காதிலை மட்டும் ரிக்கி மார்டின் non-stopபா காட்டுக்கத்தல்.

இன்னிக்கு 'Life, MAS, Unplugged' என்று அவரின் எத்தனையோ தொகுப்புகள் வந்துவிட்டன. அதெல்லாம் எப்பவாவது இருந்திட்டு ஞாபகம் வந்தா போட்டுப் பாக்கிறது. ஆனாலும் எப்ப போட்டாலுமே 'Sound loaded' இலிருந்து 'Are You In It' என்ற பாட்டை எப்படியும் குறைந்தது ஒருமுறையாச்சும் கேட்டே ஆகவேண்டும். 
Are you in it for love
Are you in it for money
If I lost everything
Would you be there in the morning 
ரொம்பவே நொந்து போயிருப்பாரோ? ஒருக்கா நம்ம தேவதாசியை யாராச்சும் வாசிச்சுக் காடுங்க அவருக்கு.. அப்படிப்பட்ட பெண்களில் இப்படிப்பட பெண்களும் இருக்கிறார்கள் என்று.. ஒரு ஆணைவிட ஒரு பெண்ணால் தான் அவரை அதிகமாய் ரசிக்க, நேசிக்க முடியுமென்று.. (டபுள் மீனிங் எல்லாம் இல்லை..)

நிற்க, பாடல் தொடர்கிறது. மார்டின் margarita அடிச்சா எப்படி இருக்கும்? 
Ay mama, you're my sweet mamacita
You've gone to my head, like too many margaritas... heh 
(நிறுத்துடி.. நாளைக்கு யாரோ ஒரு பதிவர்கிட்ட நார் நார கிழிவாங்க போறா எண்டு மட்டும் தெரியுது..)

Are you in it for kicks,
Private jets and Armani
When the ride's over will you even bother to call me 

எளிமையான வரிகளுக்குள்ளும் எத்தனை ஆழமிக்க உணர்வுகள்? 

Are you in it for more than a minute
'Cause too much is never enough
Are you in it for you, are you in it for me 

இசைக்காக வரிகளை விட்டுக்கொடுக்காத ஒரு மனிதர். He is really Great!


'Spanish Eyes' முதலில் கேட்க்கும் போது பெரிதாய் கவரவில்லை. ஆனால் பலவருடங்களுக்குப் பிறகு ஒருநாள் சல்சா வகுப்பில் இந்தப் பாட்டுக்கு ஆடினபோது 'Just felt something'. He really touched my soul!
You say that you sing, that you're some kind of dancer
But the stars in your eyes never reveal the answer
One fine day you'll be walking out that door
I hope you'll find just what you're looking for

பிற்குறிப்பு: இத்தனை வருடங்களின் பின் இண்டைக்கு ஒருமாதிரி அந்த வரிகளின் அர்த்தம் கண்டு பிடிச்சிட்டமில்லை. "என்ன கிறுக்குத்தனமான வாழ்க்கை?" சே..




Share
Tweet
Pin
Share
4 comments

எவரனி திருமனசே..!

அரனிடை நெடில் வந்து  
மயூரனிடை சேர்ந்திட  
உதித்ததோர் மோகினியாம்
உரைக்குமின் கதைகேளீர்!



அங்கவர்ணனை 

அஷ்வதீப ஒளிதனில்   
மின்னிடும் வளர்னுதலாம்  
தாரை பதியோவென 
மயங்குமோர் தேவதாசி

கரும்திரையூடும் காந்தமென  
கவர்ந்துதிழுக்கும் கண்கள்
கண்ண னிவனோவென
மயங்குமோர் தேவதாசி 

பவளமோ முத்தோ 
பரிகசிப்பது வோவன்றி 
பச்சிளம் சிரிப்போவென 
மயங்குமோர் தேவதாசி

பட்டும் படாதுமே
தொட்டுச் செல்லுமிதழ்கள் 
முட்களை உரசிடத்தானோவென
மயங்குமோர் தேவதாசி

மிஞ்சிய இறகுகளில் 
இயற்கை வண்ணங்களில் 
குயிலோவிலை மயிலோவென 
மயங்குமோர் தேவதாசி

மேல்வருடும் மென்விரல்கள் 
மதுதரும் கரும்போவிலை  
மதுசூதனன் குழலோவென 
மயங்குமோர் தேவதாசி

திண்ணிய தோழ்களிலே
தாவிடும் மனசறிந்து
தழுவிடானோ வென
மயங்குமோர் தேவதாசி



***** 
தொடரும்..
Share
Tweet
Pin
Share
2 comments

இறைவணக்கம்
சிறு மனக்கும்பி தனிகரோளிந்து
வன்கூடி யான் கலை விழித்தெழுது
கண்ட சோதியாம் கார்மேக
வண்ண நிழலிலாம் வேறிலா சாந்த
கோடி பதும நின் பாதம் தொழுதே





தன்னிலைவிளக்கம்
நின்பொருள் தேடி வந்திலோம்
நாளை எங்கென்றும் அறிகிலோம்
வழி ஏதுமறியா வெறுமையுடன்
விதிவழி செல்லும் கால்கள்


சூடியபின் மனம்சலித்து
சாக்கடைதனிலே வீசிடினும்
வலிகளைமறைத்தே புன்சிரிப்புடன்
விலகிடுவாள் இந்தத்தேவதாசி


உமையவள் கட்டளை
உரைப்பதென் கடன்
உவப்பிடின் நலம்
உவர்த்திடினும் குறையிலா











***** 
தொடரும்..
Share
Tweet
Pin
Share
No comments


பெரும்பாலும் எனது பதிவுகளில் பாத்திங்கன்ன எப்பிடியும் ஒரு பாட்டாச்சும் இருக்கும். ஆனா அதன் வரிகளைப் பத்தியோ இசையமைப்பப் பத்தியோ எதுவுமே கிலாகிச்சுச் சொல்லியிருக்க மாட்டன். அதை வாசகர்களின் பார்வைக்கே விட்டிருப்பன். (அப்பிடியே சொல்லிட்டாலும் இவ பெரிய சுப்புடு சிஷ்யை பாருங்கோ?)

இண்டைக்கு ஒரு கேள்வி வந்திச்சுதா..

"இசையை பாடல்களை ரசிக்கிரன் என்று சொல்லுறியே.. ஆனா ஏன் அதைப்பத்தி அதன் அழகான வரிகளைப் பத்தியெல்லாம் எழுதிறதில்லை.." என்று.

விட்டமா இண்டைக்கு எப்படியாச்சும் ஒரு பாட்டை எடுத்து அக்குவேறு ஆணிவேறாக ஆக்கிடனும் எண்டு போட்டு, iTuneல அதிகமா கேட்ட ஒரு பாட்டிலையே விநாயகர் சுழி போட்டு தொடங்கலாம் எண்டு தேடினா.. வந்தது Dr.பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் பிருந்தாவனி ராகத்திலமைந்த இந்தத் தில்லானா.. என்னமா ரெண்டெரிங் பண்ணியிருப்பார் பாருங்கோ.. ஏதாச்சும் புரியுதுங்களா..?
dhIm na na na tillillana tillAna nAdiri dhIm dhIm nAdiri dhIm nAdiri dhIm nAdiri
dhIm na na na tillillana tillAna nAdiri dhIm dhIm nAdiri dhIm nAdru dhIm nAdiri
dhIm nanA dhIm nanA tadingiNatOm takiTa jham tajham tajhanta tajhantarijham tarita jham tarita nAdiri
sogasulUra hOyalu kOri nIdari jEritini nIra kSIra nyAyamai maimaraci sakala carAcaramella pulakince tIyani hyani pincu ciru ravaLi nI muraLI mAdhurI nAdhiri 

ஆனா ஒன்னு, இத்தினை வருசமா எத்தினை வாட்டி கேட்டும் சத்தியமா ஒரு வரி கூட எனக்கு விளங்கேல்லை. விளங்க வேணும் எண்டும் நினைக்கேல்லை.

இண்டைக்குத் தான் நம்ம ஈகோவை கிளறி விட்டச்செல்லே.. எப்படியாச்சும் கண்டு பிடிச்சே ஆகணும் எண்டுசொல்லி கூகிள் பண்ணினா.. கிடைக்கவேயில்லை. விட்டிடுவமா? விக்கிரமாதித்தனின் வேதாளமில்லை? கடைசியா ஒரு வழியா பல விதத்திலை எழுத்துகளை மாத்திமாத்தி (உயர்தரத்தது கணிதத்திலை வரிசைமாற்றம் மற்றும்.. என்னமோ எண்டு சொல்லுவாங்களே? அதை) ட்ரை பண்ணினதில்லை, நம்மப் போல ஒரு ரசிகாஸ்ல கண்டு பிடிச்சம்.
'nI (un/your/Ap kE) dAri (vazhi/path/rAh par) jEritini/cEritini (SErvEn/will join/milUngA)'.
'sogasulUra hoyalu kOri'  'Seeking (kOri) your beauty-soaked (sogasulUra) charm (hoyalu), I have come to your path'.....
என்ன தலை சுத்திற மாதிரி இருக்கா? அதான் சொல்றது இசைய ரசிக்க வேணும் சும்மா சும்மா ஆராச்சிஎல்லாம் பண்ணப்படாது எண்டு..


ஆனாலும் பாருங்கோ இவ்வளவு கஷ்டமான வரிகளை கூட இந்தப் பிஞ்சுகளுக்கு அவரின் சிஷ்யன் திருவன்கூர் இளவரசர் ராமவர்மா அவர்கள் எவ்வளவு எளிமையா சொல்லிக்குடுக்கிறார் எண்டு. He is really Great!

ஹ்ம்ம் நமக்கும் இப்படியொரு குரு வாய்ச்சிருந்தா..? 'கிழிச்ச்சிருப்ப.. கூரையேறி சேவல் பிடிச்சனி எண்டதுக்காட்ன்டி வானமேறி வைகுந்தம் போக ஆசைப்படக்கூடாது சரியோ?'







நிற்க, கவிதை/பாட்டு வரிகள் எண்டு வந்திட்டா நாம அணுவணுவாய் ரசித்துக் கேட்டது பாரதியை மட்டும் தான். ஒவ்வொரு வரிக்குள்ளும் அவர் மறைத்து வைத்திருக்கும் ஆயுதங்கள் சிலசமயம் ஈட்டியாய் குத்திச் செல்லும். பல சமயம் பூவாய் தென்றலாய் மயிலிறகாய் வருடிச் செல்லும். அதுவும் இசையுடன் சேர்ந்தால் கேட்கவா வேண்டும்? அந்தவகையில் பாரதியின் பாட்டுகளுக்கு மெருகு கூட்டி, என்னை மயக்கிச் சென்றது சுதா ரகுநாதனின் குரல்தான்.


மிக்க நலமுடைய மரங்கள்,-பல
விந்தைச் சுவையுடைய கனிகள்,-எந்தப்
பக்கத்தையும் மறைக்கும் வரைகள்,-அங்கு
பாடி நகர்ந்து வரு நதிகள்,                         


நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள்,-எங்கும்
நீளக் கிடக்குமலைக் கடல்கள்,-மதி
வஞ்சித் திடுமகழிச் சுனைகள்,-முட்கள்
மண்டித் துயர்கொடுக்கும் புதர்கள்,                   


ஆசை பெறவிழிக்கும் மான்கள்-உள்ளம்
அஞ்சக் குரல் பழகும்,புலிகள்,-நல்ல
நேசக் கவிதைசொல்லும் பறவை,-அங்கு
நீண்டே படுத்திருக்கும் பாம்பு,



பெரும்பாலுமே எல்லோரும் எல்லாவற்றைப் பற்றியும் எழுதியிருக்கிறாங்க. ஆனா காட்டைப்பத்தி இவ்வளவு அழகாய் அணுவணுவாய் ரசித்து சொல்லியது என்றால் எனக்குத் தெரிஞ்சு பாரதி மட்டும் தான்.

அட.. இந்த வரிகளைப் பாருங்க.. எனக்கென்னவோ இது எங்கடை நாட்டிலை, காட்டுக்கு வெளில நடக்கிறதை சொல்ற மாதிரிக்கிடக்குது.
தன்னிச்சை கொண்டலையும் சிங்கம்-அதன்
சத்தத் தினிற்கலங்கும் யானை-அதன்
முன்னின் றோடுமிள மான்கள்-இவை
முட்டா தயல்பதுங்குந் தவளை 
சே.. எவ்ளோ உயிர்த்தன்மை நிறைந்த ஒரு இடத்தைப் போய் இன்று எவ்வளவு அசிங்கப்படுத்தி வைச்சிருக்கிறம். ஆனாலும் என்னமோ இன்னிக்கிருக்கிற நாடு நகரத்தை விட உயிர் பறித்தாலும் அடர் பெருங் காட்டினடுவே அதன் அழகை ரசித்துக்கொண்டே போய்ச் சேந்திடலாம் போல கிடக்குது.

ரொம்பவே அறுக்கிறேனோ? கவலைப் படாதேங்கோ, நிறுத்திடலாம்.. ஆனா ஒண்டு இனிமே யாரும் இசை/பாடல்/கவிதை வரிகளைப் பத்தி என்கிட்ட அபிப்பிராயம்/விளக்கம் கேக்கப்படாது விளங்கிச்சுதோ? ஆனாலும் பாருங்கோ, இந்த சரஸ்வதி ரங்கநாதன் அவங்க இருக்கிறாங்களே.. என்னமா வீணையிலை தில்லானா வாசிக்கிறாங்க.. சரி சரி. நா மூடிட்டு போரம்பா..


Share
Tweet
Pin
Share
5 comments
தனுஷ் 'கொலைவெறிடி'ன்னு சும்மா ஒரு பேச்சுக்கு தன்றை மனுசிட்டை சொல்லப்போய் (?), 
அவ அதைப் பிடிச்சு பாட்டாக்கசொல்ல (சிம்புவைக் கடுப்பேத்தவோ?), 
மூணு பேர் சேர்ந்து சும்மா முசுப்பாத்திக்கு அடிச்ச மெட்டு youtubeல பிக்கப்பாக (அட நாம Campus Trip போறப்போ அடிப்பாங்களே அது மாதிரித் தானுங்கோ), 
அதை தமிழ் பாட்டுக்கு முதலிடம் என்று BBC முதல் ஒபாமா வரை வாழ்த்துப் பாட (தமிழ் பாட்டு??? அட இங்கைதான் போய்ண்டே),
இந்தியப் பிரதமர் தன் பங்குக்கு விருந்து வைக்க (என்னமா அரசியல் பண்ணுறாங்க.. மாமனுக்கு தூது விட்டிருப்பாங்களோ), 
நம்ம பெடியள் சும்மா சிவனே எண்டு பாத்திட்டுப் போகாம தம்பங்குக்கு செம்மொழி பெருமை பேச (ரெண்டு நாளைக்கு முதல் தான் நம்ம எழுத்தாளரும்  தெரியாத்தனமா இங்கிலிஷ்ல ஒரு ஈமெயில் பண்ணிட்டார்.. விட்டுடுங்க ப்ளீஸ்..), 
நானும் தூக்கியதை Facebookல "தமிழை விற்று பதக்கம் வாங்கும் தமிழா கேள் கொஞ்சம்… Danush" என்று பகிர (விதி யாரை விட்டுது? பதக்கமெண்ட உடன புகை கிளம்புதில்லை..?), 
அதப்பாத்திட்டு நம்ம பாஸ் தன்ர படலைல சிங்கை எழுத்தாளர் (ஒருவழி பண்ணுறதா இருக்கிறீங்க?)  கருத்தெண்டு கலாய்க்க, 
வேறை வழியில்லாம நானும் இண்டைக்கு கொலைவெறிக்கு ஆளாக வேண்டியதாப்போச்சுது.

ஷ்ஹ்ஹ்ப.. கொஞ்சம் இருங்க வாறன்.. கண்ணைக்கட்டுமாப் போல கிடக்கு..
ஓகே ரெடி.. 
start camera action .. (தமிழ் படம் எடுக்கும் போதும் இப்படித்தானே சொல்லுறவங்க..? சரிசரி விடுங்கப்பா..)


எழுத்தாளர் பன்னிசாமி: சிங்கர் எழுத்தாளர் கௌரியா?  யாரடா அது சைக்கிள் காப்ல சிங்கர் எல்லாம் எழுத்தாளர் ஆனது?
ரசிகை: அடடே நம்மையும் சிங்கர் எண்டு சொல்லுறத்துக்கு ஊர்ல ஆளுங்க இருக்காங்களா.. உச்சி குளிர்ந்து போச்சு போங்க..

எழுத்தாளர் பன்னிசாமி: ஏண்டா நாட்டு பெயரை எல்லாம் ஷார்ட்டா எழுதுறீங்க? அப்ப இந்தியாவ இந்தி எண்டு எழுதுவீங்களா? அப்புறமா இந்தி எதிர்ப்பு போராட்டம் எல்லாம் தனிநாடு போராட்டமா?
ரசிகை: நா கேட்டனா? இதுக்குபோயி போராட்டம் அதிதேண்டு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிட்டு .. எல்லாம் இந்த மன்மதக்குஞ்சு செய்த வேலை. நாம பாட்டுக்கு ரசிகைன்னு சொல்லி தானே கிறுக்கிட்டிருந்தம். சும்மா விருது குடுக்கிறன் பேர்வழி எண்டு இப்ப பாருங்க உலக மகா எழுத்தாளர்களிடமேல்லாம் கடி வாங்க வேண்டி இருக்குது. 

எழுத்தாளர் பன்னிசாமி: "இற்றைக்கு பல்லாயிரம் வருடங்களின் முன்பு தோன்றிய ஒரு மொழியை, நேத்து வந்த அஞ்சு நிமிச சினிமாப்பாட்டு என்ன செய்துவிடும்?" 

ரசிகை: என்னைக் கேட்டால் இதொண்டும் பெருசா தமிழால் வந்த வினையாய் தெரியவில்லை, தமிழ் மனங்களால் வந்த வினை. அன்று AR ஆஸ்கார் விருது வாங்கியபோது தமிழில் ரெண்டு வார்த்தை பேசியதால் தமிழ் மனங்கள் குளிர்ந்து போனது. ஆனால் அதே சமயத்திலை ஈழத்துப் பிரச்சினையைப் பற்றியும் ஏதாவது இருவார்த்தை சொல்லியிருக்ககூடாதா என்று ஏங்கிய மனங்களும் இல்லாமலில்லை.

தம்மிலோருவன் உயர்ந்து நிற்க்கும் போது, அவனது தனித்தன்மையைக்கு கிடைக்கும் அங்கீகாரத்தில் தமது பிரதிநிதித்துவத்தை தேடுகின்றனர். அது சரியா தவறா என்று என்னால் சொல்லத் தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக தவறென்று சொல்லும் எந்த சினிமாக் கலைஞும் துண்டைப் போட்டுக்க வேண்டியதுதான். அதனாலேயே ஒரு கட்டத்துக்குப் பிறகு எல்லாக் கலைஞர்களும் விரும்பியோ விரும்பாமலோ சமுதாய எதிர்பாப்புகளையும் சேர்த்தே சுமக்கத் தொடங்கிவிடுகின்றனர். 

எழுத்தாளர் பன்னிசாமி: ஜேகே வுக்கு சவால் சிறுகதை போட்டில ரண்டாம் இடம் கிடச்சுதே? எவனாவது சீந்தினிங்களாடா? 
ரசிகை: Gapல சொருகிட்டீங்க.. அதானே உங்களுக்கு ஸ்பெஷல் டெலிவரி (பரிசைச் சொன்னன்) வருதாமே? நாமளும் தான் ஸ்கிரிப்ட் எழுதணும் ஸ்க்ரீன்ப்ளே பண்ணனும்னு கேக்கிறன். யாரு கண்டுக்கிறா?

எழுத்தாளர் பன்னிசாமி: கொலைவெறி பாட்டில தமிழ கொலை செய்து இருக்கிறாங்களாம் .. அவங்க பொங்கிட்டாங்க… பொங்கலுக்கு தான் இன்னும் ரெண்டு வாரம் இருக்கே?
ரசிகை: பொங்கவேல்லாம் இல்ல பாஸ். வெறும் அவியல் தான். இதிலை ஒரு சின்ன துவையல். நம்ம சமையல் அறிவு அவ்ளோதான். ஹிஹி.. :)


நிற்க, ஆங்கிலத்தால் தமிழ் சாகுதெண்டு ஏன் தான் எல்லாரும் சும்மா புலம்புறாங்கன்னு எனக்கும் தெரியேல்லை. நம்ம கதையில கூட கடைசில பாரதியே ஆங்கிலத்தில் தான் காலை வணக்கம்  சொல்லியிருப்பார். (அந்தர் பல்டிங்கிறது இதுதான். தெரிஞ்சுக்கோங்கோ..) 


கடைசியாய் நிஜமான கொலைவெறிங்கிறது என்னவென்றால்..

எனக்கு எதுவும் தெரியாதுப்பா.. நாம வெறும் ரசிகை மட்டும் தான்.. நீங்க நடத்துங்கோ..



Share
Tweet
Pin
Share
4 comments
கண்ணீர்த் தேசம் நரகமாகி   
கங்காருதேசம் சொர்க்கமாக  
அக்கரைப்பச்சைநாடி
சிங்கபுரியிலின்று 
சிக்கித் தவிக்கையில் 

இதுவொரு திரிசங்கு சொர்க்கம் 

அழுதழுது காதலிக்க 
அடுத்தவர்தான் பெரிதென்று  
பேசாதே கொன்றுவிட்டு   
போதுமென்று விலக நினைக்க 
செல்லாதே நீயென்று 
வருடமொரு வரம் கேட்க்க

இதுவொரு திரிசங்கு சொர்க்கம்

தனக்கான அவளதுணர்வுகள்   
தெளிவற்றவை என்றவன்   
அவளுக்கான தனதுணர்வுகளை
ஆங்காரமாய் வார்த்தைகளின் நடுவில்  
மூடி மறைத்து மழுப்பி நிற்கையில் 

இதுவொரு திரிசங்கு சொர்க்கம்

மலைமேல் பனியாகி
நதியாகி கடல்சேருமுன் 
நடுவே அணைகட்டி வழிமறித்தால் 
கதவுகள் வழியே கசிந்திடும் 
நீர்தான் நீ பார்ப்பது - அது   
செயற்கையாய்த் தேங்கிட   

இதுவொரு திரிசங்கு சொர்க்கம்

சபிக்கப்பட்டபின்  
எந்தக் கடவுளும் மனமுவந்து  
வரம் தருவதில்லை  
பிச்சை வேண்டாம் 
நாயைப்பிடி 
நரகமொன்றும் இத்தனை 
கொடிதல்ல..!



Share
Tweet
Pin
Share
No comments
சில நேரம் எழுதுவதற்கு எதுவுமே தோன்றாது. ஏன் எழுதுகிறோம் என்றும் தெரியாது. ஆனால் எதையோ எழுதுகிறோம். அது எங்கிருந்து வருகின்றது, எதற்காய் வருகின்றது, யாரிடம் போய்ச் சேரப் போகிறது என்பதெல்லாம் தெரிவதில்லை. இன்றும் அப்படித்தான், நான் ரசித்த ஒருவருடன்..

புத்தக வாசிப்பு எனும்போது பலருக்கு பல ரசனையிருக்கும். எனக்கு அப்படி எந்த ரசனை என்று இன்னும் என்னால் வகைப்படுத்த முடிவதில்லை. கையில் கிடைக்கும் எந்தப் புத்தகத்தியுமே அதன் பூர்வீகம் பாராமல் வாசிக்கத் தொடங்கிவிடுவேன். ஆனால் ஒன்றிப்போய் வசித்து முடித்த புத்தகங்கள் வெகுசிலவே. பலவற்றை என்னால் முழுவதும் படிக்க முடிந்ததில்லை. விருப்பமின்மை என்று சொல்ல முடியாது. ஒருவேளை Steve Jobs சொல்லியதுபோல் "Focusing is saying 'NO' to all other things" ஆக இருக்கலாம். ஆனால் பலரைப்போலவே எனது தேடல் எதுவென்று பலநேரங்களில் புரிந்ததில்லை. 

வாழ்க்கையின் தத்துவத்தை அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் சிறுவயதிலிருந்தே இருந்தது. அதற்காய் கண்ணில் பட்ட சமய சித்தாந்த, வேதாந்த நூல்களையெல்லாம் புரிந்தோ புரியாமலோ படித்துத் தொலைத்தபோது, இன்னும் குழப்பம் தான் எஞ்சியது. அத்தகைய குழப்பமிக்க நாட்களிலோருநாள், என் வாசல்வந்து  தனது காந்தக் கண்களால் வசீகரித்துச் சென்றவர் தான் ரஜனீஷ் என்கிற ஓஷோ அவர்கள். 

வழமையாய் எனக்கு புத்தகம் பரிசளிப்பதேன்றால் அது அப்பாவாகத்தானிருக்கும். ஆனால் என்ன ஒன்று எப்போதுமே சமயப் புத்தகங்களை மாத்திரமே தருவார். கதைப் புத்தகங்கள் அவருக்கு கண்ணிலையும் காட்டக்கூடாது. அப்படித்தான் கிட்டத்தட்ட பத்து வருடங்களின் முன்பு ஒருநாள், அவர் தந்த  புத்தகத்திலிருந்த அந்த மனிதரைப் பார்த்ததும் முதலில் எனக்கு எதுவுமே புரியவில்லை. எதோ ஒரு சாமியாராக்கும் என்றுவிட்டு வைத்துவிட்டேன். எனக்கு அன்றுவரை துறவறம் என்பதில் ஒரு குழப்பமான நிலைப்பாடே இருந்து வந்தது. எல்லாவற்றையும் துறந்துவிட்டுப் போவது என்பதை ஒரு Challenge என்ற ரீதியில் மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. Challenge என்று சொல்லும்போதே அதில் வெல்லவேண்டும் என்ற நியதியும் வந்துவிடுகிறது. ஒருவேளை தோற்றுப்போனால் அதுவே காலம் காலமாய் வைத்திருந்த நம்பிக்கைகளை, கொள்கைகளை அசைத்துப் பார்த்துவிடுமோ என்ற பயமும் கூடவேயிருந்தது. 

வாழ்க்கை எதைத்தேடி ஓடிக்கொண்டிருக்கிரதென்று புரிந்துவிட்டால் தேடலை நிறுத்திவிடலாம், ஆனால் இயக்கம் இருந்துகொண்டுதானிருக்கும். அதை நிறுத்துவதற்கு இறப்பென்பது வழியாகாதென்று புரிந்துகொண்ட நிமிடம், ஓஷோவின் கண்கள் என்னை முழுவதுமாய் தனக்குள் இழுத்துக்கொண்டுவிட்டது. அன்றிலிருந்து கையில் கிடைத்த அவரின் புத்தகங்கள் அத்தனையையுமே படித்தேன், ஆனால் எதுவுமே சரிவரப் புரியவில்லை. ஒருசமயம் எல்லாமே விளங்கியது போலிருக்கும், மறுகணமே எதுவுமே விளங்கவில்லை என்பது போலிருக்கும். ஆனால் என்னமோ அந்த இரண்டு extreem மத்தியில் புலப்பட்ட ஒருவெறுமையை என்னால் சற்றே உணரமுடிந்தது. அதுவே என்னையும் ஓஷோவை ரசிக்கும்படி செய்துவிட்டது.

தியானமெண்டால் சும்மா கண்ணை மூடிக்கொண்டிருந்தால் ஒளிவட்டம் தெரியுமாம் தாமரை பூக்குமாம் என்றெல்லாம் கனவுகண்டுகொண்டிருந்த எனக்கு, ஓஷோவின் 108 வகை தியான முறைகளை வாசித்தபோது கொஞ்சமில்லை நிறையவே மலைப்பாயிருந்தது. இன்னும் கோவில்கள், சம்பிரதாயங்கலென்று இந்து தர்மத்தின் தொன்மையும், அதனுள் மறைந்திருக்கும் விஞ்ஞான ரகசியங்கள் இவற்றின் ஆதாரபூர்வமான விளக்கங்களுடன் மறைந்திருக்கும் உண்மைகளில் சற்றே வித்தியாசமான கோணத்தில் சொன்னது பிடித்துக்கொண்டது. 

பைபிள் வாசித்தபோது மனதிலெழுந்த பல கேள்விகளுக்கு ஓஷோவின் "அற்புதத்தில் அற்புதம்" என்ற நூல் விடைதந்தது. இன்று பலருக்கு போதிதர்மர் பற்றித் தெரியவந்ததே ஏழாம் அறிவுக்குப் பிறகுதான். ஆனால் அதில் அவரின் மருத்துவம், தற்காப்புக் கலை பற்றி விலாவரியாகச் சொன்னவர்கள் Zen பற்றி நன்றாகவே இருட்டடிப்புச் செய்திருந்தனர். அது அவர்களது வியாபாரத்துக்கு உதவாது என்று நினைத்திருப்பார்கள் போலும். ஆனால் Zenஐ  அழகாக, அமைதியாக ஆனால் ஆழமாக ஓஷோ ரசிக்கச் செய்தார். இப்படி அவர் சொல்லியது, ரசிக்கவைத்தது இன்னும் எத்தனையோ.. 

நிற்க, என்ன இண்டைக்கு திடீர் ஞானோதையம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதேன்னண்டால் இன்று 2012 பிறக்கிறதாம். அதாலை முகப்புத்தகத்தை திறந்தால் ஒரே புத்தாண்டு சபதங்களால் நிறைஞ்சிருக்குது. எனக்கு உந்த சபதமெல்லாம் சரிப்பட்டு வராது. அதாலை வேறைஎதாவது புத்தகத்தைப் படிப்பம் எண்டு தேடினா தற்ச்செயலாக எனது பார்வையில் பட்டது ஓஷோவின் "The Art of Dying".
WHEN RABBI BIRNHAM LAY DYING, HIS WIFE BURST INTO TEARS.
HE SAID, 'WHAT ARE YOU CRYING FOR?
MY WHOLE LIFE WAS ONLY THAT I MIGHT LEARN HOW TO DIE.'
மாயர் கணக்குப்படி இந்தவருடம் உலகம் அழிந்துவிடும் என்பதெல்லாம் உண்மையோ இல்லையோ, என்றோ ஒருநாள் வரப்போகும் சாவை அமைதியான முறையில் ஏற்கும் பக்குவத்தை நாம் தான் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் இல்லையா?  



"When a man lives with thousands of shoulds and should-nots he cannot be creative." - Osho 


பிற்குறிப்பு: குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க பலருக்குத் தெரியும். ஆனால் எனக்கு ஓஷோ தான் மீன்பிடிக்க வேணுமெண்டால் முதல்லை குட்டைய குழப்ப வேணுமெண்டு சொல்லித்தந்தார். (ரொம்ப சின்னப் பிள்ளையாவே இருந்திருக்கிரமோ??)

Share
Tweet
Pin
Share
3 comments
Newer Posts
Older Posts

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)...

Blog Archive

  • ►  2017 (5)
    • ►  நவம்பர் (5)
  • ►  2016 (2)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
  • ►  2015 (5)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2014 (8)
    • ►  டிசம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2013 (27)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (3)
  • ▼  2012 (43)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (4)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (3)
    • ▼  ஜனவரி (11)
      • மரண வாசலில் மலர்ந்த காதல்
      • சுவாதித்திருநாள் மகாராஜா
      • ஜே ஜே
      • பெண்களும் வீணையும்
      • Martin and Me!
      • தேவதாசி: அங்கவர்ணனை
      • தேவதாசி: இறைவணக்கமும் தன்னிலைவிளக்கமும்
      • இசையும் பாடல்வரிகளும்
      • கொலைவெறி!
      • திரிசங்கு சொர்க்கம்
      • கடலும் குட்டையும்
  • ►  2011 (43)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (10)
© 2013 Gowri Ananthan. Blogger இயக்குவது.

Popular Posts

  • கௌரி அனந்தனின் "கனவுகளைத் தேடி" நாவல் வெளியீடு
  • கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்
  • இரண்டாமவரே முதன்மை பெறுவர்
FOLLOW ME @INSTAGRAM

Created with by BeautyTemplates