கமலின் விஸ்வரூபம்
விஸ்வரூபத்தில் ஒருபாடல். துப்பாக்கி எங்கள் தோளிலே .. கேட்கையில் தொண்ணூறுகளுக்கு எம்மையறியாமலே இழுத்துச்செல்கிறது. போரை நாம் தேர்ந்தெடுக்கவில்லை போர்தான் எம்மை தேர்ந்தெடுத்துகொண்டது எங்களின் கையில் ஆயுதங்கள் இல்லை ஆயுதத்தின் கைகளில் எங்கள் உடல் உள்ளது அன்று கேட்க்கையில் புல்லரிக்கவைத்த வரிகள். இன்னும் எத்தனை முறை தான் என்று சலிக்க வைக்கிறது இப்போது. ஊரைக்காக்கும் போரிற்க்கு ஒத்திகை செய்கின்றோம் சாவே எங்கள் வாழ்வு என்று சத்தியம் செய்கின்றோம். கண்ணீர் குளம்கட்டவில்லை. வெறுமை மனதை பிசையவில்லை. துக்கம் தொண்டைக்குழிக்குள் நின்று அழுத்தவில்லை. துப்பாக்கி எங்கள் தோழனே தோழ் கொண்ட வீரன் தெய்வமே எப்போதும் எங்கள் கோப்பையில் தேநீர் பருகும் மரணமே இதற்குமேல் கேட்டத் தோன்றவில்லை. சிறுவயதிலிருந்தே நமக்கு என்று இருந்த ஒரே துணை மௌனம். அதீத உணர்வுகள் அலை மோதும்போது மௌனத்துக்குள் முடங்கிக்கொள்வதில் இருக்கும் ஆறுதலே ஒருசுகம் தான். யாரினதும் அணைப்போ ஆறுதல் படுத்துதல்களோ தேவையிருப்பத...