இடுகைகள்

அக்டோபர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஹிமாலயா கிரியேசன்ஸ் 3

படம்
சில நிகழ்வுகள் எதற்காய் நடக்கின்றன என்பது பலசமயம் புரிவதில்லை. அதிலும் எறும்புகளாய் ஊர்ந்துகொண்டிருக்கும்போது முன்னாலிருக்கும் இரை மட்டுமே கண்ணுக்கு தெரியும். அதுவே ஒரு பறவையாய் வானிலுயரப்பரக்கும்போது எல்லாப்புள்ளிகளும் ஒன்று சேர்ந்து ஓர் அழகிய ஓவியமாய்த் தெரியும். தெரிந்து எந்தப் பிரயோஜனமும் இல்லை. அதை சரியான முறையில் செதுக்கி எடுப்பதற்கு ஒரு திறமையான டீமும் தேவை. அதிலும் இந்த விளம்பரத்திற்காக கொடுக்கப்பட்ட படங்களை மட்டுமே வைத்துக்கொண்டு கான்செப்ட் (Concept) எடுப்பதென்பது மிகவும் சிரமம். ஒருகட்டத்தில் கான்செப்ட் இல்லாமலே செய்வோம் என்று முடிவெடுத்து rough-cut உம் முடித்தாயிற்று. அதைப்பார்த்துவிட்டு திருவாளர் அனந்தன் சொன்னவை, இனி இந்த ஜென்மத்தில் கான்செப்ட் இல்லாமல் செய்வோம் என்று ஒருபோதுமே எம்மை நினைக்க வைக்காது. கம்பெனி பெயரையும் குறையவிடக்கூடாது அதே சமயம் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்பவும் கொடுக்க வேண்டும். அந்தவகையில் நீண்ட வாதப் பிரதிவாதங்களின் பின் இறுதியாய் ஒருவாறு முடித்து அனுப்பி தற்போது சிங்கப்பூர் Sony Entertainment Television இல் மிகவும் பிரபல்யமான...

கோழி வந்தாதா முதலில் முட்டை வந்தாதா..?

படம்
சமீபத்தில் "The Big Bang" பற்றிய கட்டுரை ஒன்று வாசித்துக்கொண்டிருந்தபோது எழுந்த கேள்வி தான் இது.. யதார்த்தமாக பார்த்தால் இந்தக் கேள்விக்கு நான்கு பதில் சாத்தியக்கூறுகள் உள்ளன. A) கோழி  B) முட்டை C) இரண்டுமே D) இரண்டுமேயில்லை. இதை தர்க்கரீதியாக ஆராய்ந்தால் " இரண்டுமேயில்லை" என்பது மட்டுமே பதிலாக அமைய முடியும். ஏனெனில் நித்தியம் என்பதில் ஆரம்பமோ இறுதியோ இருப்பதில்லை. இது வெறும் தர்க்க ரீதியான பதிலே தவிர கோட்பாடுகள் மற்றும் தத்துவங்கள் சார்ந்ததல்ல.  இக்கேள்வியை "காரணம் மற்றும் விளைவு" என்பதின் அடிப்படையில் பார்த்தால் எப்போதுமே ஒன்றின் விளைவுக்கு எதுவோ ஒன்று காரணமாக அமையும் போது அதன் உருவாக்கத்திற்க்கு வேறெதுவோ காரணமாக அமைந்திருக்கவேண்டிய தேவையிருக்கிறது. ஒரு பேச்சுக்கு முட்டை தான் முதலில் வந்தது என்று எடுத்துக்கொண்டால், அப்போ முட்டை எங்கிருந்து வருகிறது? கோழியிலிருந்து தானே? இல்லை வேறேதாவது ஒரு உயிரினம் பல மில்லியன் ஆண்டுகளில் பரிணாமமடைந்து கோழியினது முட்டையை போட்டது என்றால் அது உருவாகிய முட்டையை இன்னோர் உயிரினம் போட எத்தனை மில்லி...

Drink Bottle

படம்
"அப்பா எனக்கு Drink Bottle ஒண்டு வாங்க வேணும்" "ஹ்ம்ம்.." ஆறு மாதங்களின் பின்பு நேற்று தான் வந்திருந்தார். கொஞ்சநேரம் கண்ணை மூடி ரெஸ்ட் எடுக்கலாமேண்டால் அதற்குள் அவள் தன் நச்சரிப்பைத் தொடங்கி விட்டிருந்தாள். "ஒரு இருநூறு ரூபா வருமெண்டு நினைக்கிறன்.." முடிக்கவில்லை.. "இருநூறா.. அதெல்லாம் வேண்டாம். இப்ப கொண்டு போறதுக்கு என்ன வந்தது..? " அம்மா குசினியிளிருந்தவாறே தன் பல்லவியைத் தொடங்கி விட்டிருந்தார். "அது பாரமம்மா.. அதோடை திறந்து குடிக்கிரதேல்லாம் கரைச்சலா இருக்கு. இதிலைஎண்டா ஸ்ட்ரா மாதிரி இருக்கும். அப்பிடியே வைச்சு குடிக்கலாம்.." அவள் விடுவதாயில்லை. "உப்பிடித்தானே எத்தினை வாங்கி பழுதாக்கி வைச்சிருக்கிறே? உதெல்லாம் கொஞ்ச காலத்துக்குத்தான். பிறகு பளுதாப்போடும்.." அவள் அம்மாவும் விடுவதாயில்லை. "இது வேறை மாதிரி.. கெதியிலை உடையாது. எண்டை friends எல்லாம் வங்கியிருக்குதுகள்.. எனக்கும் வேணும்.." சற்று அழுத்தமாகவே முடித்தாள். "சரி. சரி சண்டை பிடிக்காதேங்கோ. நாளைக்கு சுன்னாகத்துக்கு போறன். பாத்து வங்க...

Yarl Geek Challenge - Season 1

படம்
சனிக்கிழமை (13-10-2012) விழா எண்டு சொன்னாங்களே இன்னும் மஞ்சப் பத்திரிக்கை அடிக்கலையே எண்டு பாத்தா, கன்னங்கரேல் எண்டு ஒரு backgroundல வெள்ளையா எதோ கிறுக்கியிருந்துது. ஒரு கரையிலை பல்பு வேறை. ஒருவேளை எடிசென்களையும் இவங்கதான் உருவாக்கிறான்களோ? Mind, Vision, Imagination, Idea.. எண்டு வேறை நிறைய ஏதேதோ இங்கிலிஷ்ல கிறுக்கியிருந்துது. பாதி புரியாவிட்டாலும் எதோ நம்ம பசங்க விவரமான ஆளுங்கதானே இந்தமுறை என்ன வித்தியாசமா பண்ணப்போறாங்க எண்டு ஆர்வமா சயந்தனுக்கு கால் போட்டு ரெண்டு வரி சொல்லுங்களேன் எண்டு கேட்டா.. சார் ஜெயின் கமிசன் ரேஞ்சுக்கு ஒரு அறிக்கை விட்டார். அதையெல்லாம் கிரகிச்சு நாம ஒரு article எழுதிரத்துக்குள்ள யாழ்ப்பாணம் நிஜமாகவே Silicon Valley ஆயிடும்.  நிற்க, வழமையா campus மாணவர்களையும் மற்றும் IT சார்ந்தோரையும் கூட்டி ரெண்டு மாசத்துக்கொருதடவை நடக்கும் ஒன்று கூடல் தானே.. இதிலை என்ன விசேசம் இருக்கப் போகுதெண்டு கேட்டீங்கன்னா.. இம்முறை சற்றே வித்தியாசமான பாணியிலமைந்த போட்டியொன்றை அறிமுகப்படுத்தப் போகிறோம். அதென்னன்னா "அமெரிக்காவில"...... அட திரும்பவுமா எண்டு கேக்க...