சனிக்கிழமை (13-10-2012) விழா எண்டு சொன்னாங்களே இன்னும் மஞ்சப் பத்திரிக்கை அடிக்கலையே எண்டு பாத்தா, கன்னங்கரேல் எண்டு ஒரு backgroundல வெள்ளையா எதோ கிறுக்கியிருந்துது. ஒரு கரையிலை பல்பு வேறை. ஒருவேளை எடிசென்களையும் இவங்கதான் உருவாக்கிறான்களோ? Mind, Vision, Imagination, Idea.. எண்டு வேறை நிறைய ஏதேதோ இங்கிலிஷ்ல கிறுக்கியிருந்துது. பாதி புரியாவிட்டாலும் எதோ நம்ம பசங்க விவரமான ஆளுங்கதானே இந்தமுறை என்ன வித்தியாசமா பண்ணப்போறாங்க எண்டு ஆர்வமா சயந்தனுக்கு கால் போட்டு ரெண்டு வரி சொல்லுங்களேன் எண்டு கேட்டா.. சார் ஜெயின் கமிசன் ரேஞ்சுக்கு ஒரு அறிக்கை விட்டார். அதையெல்லாம் கிரகிச்சு நாம ஒரு article எழுதிரத்துக்குள்ள
யாழ்ப்பாணம் நிஜமாகவே Silicon Valley ஆயிடும்.
நிற்க, வழமையா campus மாணவர்களையும் மற்றும் IT சார்ந்தோரையும் கூட்டி ரெண்டு மாசத்துக்கொருதடவை நடக்கும் ஒன்று கூடல் தானே.. இதிலை என்ன விசேசம் இருக்கப் போகுதெண்டு கேட்டீங்கன்னா.. இம்முறை சற்றே வித்தியாசமான பாணியிலமைந்த போட்டியொன்றை அறிமுகப்படுத்தப் போகிறோம். அதென்னன்னா "அமெரிக்காவில"...... அட திரும்பவுமா எண்டு கேக்காதீங்க. வேற வழி? சிலிகான் வாலி எண்டு சொல்லியாயிற்று அதால இனி அடிக்கடி அமெரிக்கா போகவேண்டி இருக்கும். கொஞ்சம் பொறுத்துக்கோங்க. எங்க விட்டேன்?? ஆ.. அமெரிக்காவில Apprentice அப்பிடின்னு ஒரு டிவி சீரியல். ரியாலிட்டி ஷோ எண்டும் சொல்லலாம். அதே பணியில் competition ஒன்றை யாழ்ப்பணத்தில் நடத்தப் போகிறோம். இதில் பங்குபெறும் அணிகளுடனான அறிமுக நிகழ்வு வருகிற சனி (13-10-2012) மதியம் ஒரு மணியளவில் சர்வோதயா ஹால் இல் நடைபெற இருக்கிறது.
Proposal Round, Requirements Gathering, Design, Algorithm, Product strategy round என ஐந்து சுற்றுகளாக நடைபெறவுள்ள போட்டிகளில் கொழும்பு, பேராதெனிய மற்றும் மொரடுவா மாணவர்களும் பங்குபற்ற வசதியாக அக்டோபர் 26 முதன் 29 வரையான நீண்ட விடுமுறையில் நாட்களிலேயே ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. முதலாவது சுற்றான Proposal Round குழுக்கள் அறிமுக நாளான 13-10-2012 அன்று நடைபெறும். எனவே குழுக்களுக்கான பதிவுகள் நாளைய தினத்துடன் முடிவடைகின்றது. இந் நிகழ்வு தொடர்பான மேலதிக விபரங்களை
http://yarlithub.org/geekchallenge.php இல் பெற்றுக்கொள்ளலாம்.
இதில் highlight ஆனா விடயம் என்னவென்றால் இந் நிகழ்விற்கு இலங்கையின் பிரபல IT நிறுவனங்களான
Virtusa,
hSenid மற்றும்
WSO2 என்பன அனுசரணை வழங்குகின்றன. இம்மூன்று நிறுவனங்களுள் ஏதாவதொன்றில் இணைந்துகொள்வதே பெரும்பான்மையான கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களின் கனவாகும். இப்பேர்ப்பட்ட நிறுவனங்கள் முதன் முதலாய் எமது Yarl Geek Challenge! இன்மூலமாய் யாழில் காலடிஎடுத்துவைக்கின்றன. எனவே இத்தகையதொரு அரிய சந்தர்ப்பத்தை எந்தவொரு திறைமைசாலி மாணவனும் தவற விடக்கூடாதென்பதே எமது ஆசை. அதனால் முடிந்தளவு உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் இந்நிகழ்வு பற்றியும் அதன் மூலம் ஏற்படப்போகும் வாய்ப்புக்கள் பற்றியும் எடுத்துச்சொல்லுங்கள். நாளைய தகவல் தொழிநுட்பப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும்படியாக எமது இளைய தலைமுறையை வளர்த்தெடுப்பதில் நீங்களும் பங்காளியாகுங்கள்..!
இந்நிகழ்வுகள் அனைத்திலுமே IT சம்பந்தப்பட்டோர் மட்டுமல்லாது ITயில் ஆர்வமுள்ள எவரும் பார்வையாளர்களாக கலந்துகொள்ள முடியும். மொத்தத்தில் இவை திறமைகளுக்கான தேடல் என்பதையும் தாண்டி ஓர் சந்தோசமான ஒன்றுகூடல், கலந்துரையாடல், அறிவுப்பகிர்தல், கருத்தரங்கு.. எனவே உங்கள் அனைவரையும் அன்புடன் எதிர்பார்க்கிறோம்.
Yarl Geek Challenge - An event not to be missed!
Yarl Geek Challenge Prospectus
Related Posts
கருத்துகள்