ஈழமும் கவிராயர்களும்
"கவிராயர் எனப்படுப்படுபவர் யாரெனில், தமிழ் மொழியில் கவி இயற்றவல்ல தமிழ் அறிஞர் ஆவார்." என்று விக்கி சொல்லுது. அப்பிடி என்னத்தைத் தான் எழுதுவாங்களோ எண்டு பாத்தா முதலில் வந்தது கலிங்கத்துப்பரணி .. வித்துவான் பெ.பழனிவேல் பிள்ளை அவர்களின் விளக்கக் குறிப்புரையுடன் படித்தபோது, கேழல் மேழிகலை யாளி வீணைசிலை கெண்டை என்றினைய பல்கொடி தாழ மேருவிலு யர்த்த செம்பியர்த னிப் பு லிக்கொடி த ழைக்கவே. யம்மா.. ஒவ்வொரு வார்த்தையும் வாசிக்கும் போது சும்மா உடம்பெல்லாம் சிலிர்க்குது.. எப்பிடித்தான் இப்படியெல்லாம் எழுதுறாங்களோ? சரஸ்வதி வந்து நாவிலை குந்தியிருப்பாவோ? ஆனாலும் முழுசா அனுபவித்து வாசிக்க இப்ப எனக்கு பொறுமையில்லை பாருங்கோ.. நாமெல்லாம் கண்ணை மூடித் திறக்கி ற துக்குள்ளை கவிஞராகிடனும். அதுக்கேதாவது வழியிருக்குதா? வந்தார் எங்கள் வைரமுத்து. ' சுதந்திரம் ' என்னவென்று சொல்றார் பாருங்கோ.. எழுத மை வேண்டும் வானத்தின் நீலத்தில் சில குடங்கள் கேட்டேன் மசியவில்லை ஒ.. இவையெல்லாம் இன்னும் மை விட்டுத்தான் எழுதிட்டிருக்கினம் போல கிடக்குது. நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வ...