இடுகைகள்

wso2 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Yarl Geek Challenge - Season 1

படம்
சனிக்கிழமை (13-10-2012) விழா எண்டு சொன்னாங்களே இன்னும் மஞ்சப் பத்திரிக்கை அடிக்கலையே எண்டு பாத்தா, கன்னங்கரேல் எண்டு ஒரு backgroundல வெள்ளையா எதோ கிறுக்கியிருந்துது. ஒரு கரையிலை பல்பு வேறை. ஒருவேளை எடிசென்களையும் இவங்கதான் உருவாக்கிறான்களோ? Mind, Vision, Imagination, Idea.. எண்டு வேறை நிறைய ஏதேதோ இங்கிலிஷ்ல கிறுக்கியிருந்துது. பாதி புரியாவிட்டாலும் எதோ நம்ம பசங்க விவரமான ஆளுங்கதானே இந்தமுறை என்ன வித்தியாசமா பண்ணப்போறாங்க எண்டு ஆர்வமா சயந்தனுக்கு கால் போட்டு ரெண்டு வரி சொல்லுங்களேன் எண்டு கேட்டா.. சார் ஜெயின் கமிசன் ரேஞ்சுக்கு ஒரு அறிக்கை விட்டார். அதையெல்லாம் கிரகிச்சு நாம ஒரு article எழுதிரத்துக்குள்ள யாழ்ப்பாணம் நிஜமாகவே Silicon Valley ஆயிடும்.  நிற்க, வழமையா campus மாணவர்களையும் மற்றும் IT சார்ந்தோரையும் கூட்டி ரெண்டு மாசத்துக்கொருதடவை நடக்கும் ஒன்று கூடல் தானே.. இதிலை என்ன விசேசம் இருக்கப் போகுதெண்டு கேட்டீங்கன்னா.. இம்முறை சற்றே வித்தியாசமான பாணியிலமைந்த போட்டியொன்றை அறிமுகப்படுத்தப் போகிறோம். அதென்னன்னா "அமெரிக்காவில"...... அட திரும்பவுமா எண்டு கேக்க...