கோழி வந்தாதா முதலில் முட்டை வந்தாதா..?
சமீபத்தில் "The Big Bang" பற்றிய கட்டுரை ஒன்று வாசித்துக்கொண்டிருந்தபோது எழுந்த கேள்வி தான் இது.. யதார்த்தமாக பார்த்தால் இந்தக் கேள்விக்கு நான்கு பதில் சாத்தியக்கூறுகள் உள்ளன. A) கோழி B) முட்டை C) இரண்டுமே D) இரண்டுமேயில்லை. இதை தர்க்கரீதியாக ஆராய்ந்தால் " இரண்டுமேயில்லை" என்பது மட்டுமே பதிலாக அமைய முடியும். ஏனெனில் நித்தியம் என்பதில் ஆரம்பமோ இறுதியோ இருப்பதில்லை. இது வெறும் தர்க்க ரீதியான பதிலே தவிர கோட்பாடுகள் மற்றும் தத்துவங்கள் சார்ந்ததல்ல. இக்கேள்வியை "காரணம் மற்றும் விளைவு" என்பதின் அடிப்படையில் பார்த்தால் எப்போதுமே ஒன்றின் விளைவுக்கு எதுவோ ஒன்று காரணமாக அமையும் போது அதன் உருவாக்கத்திற்க்கு வேறெதுவோ காரணமாக அமைந்திருக்கவேண்டிய தேவையிருக்கிறது. ஒரு பேச்சுக்கு முட்டை தான் முதலில் வந்தது என்று எடுத்துக்கொண்டால், அப்போ முட்டை எங்கிருந்து வருகிறது? கோழியிலிருந்து தானே? இல்லை வேறேதாவது ஒரு உயிரினம் பல மில்லியன் ஆண்டுகளில் பரிணாமமடைந்து கோழியினது முட்டையை போட்டது என்றால் அது உருவாகிய முட்டையை இன்னோர் உயிரினம் போட எத்தனை மில்லி...