இடுகைகள்

BMICH லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

"அவள்" ஒரு தொடர் கதை ... : ஏமாற்றம்

பாகம் நான்கு : ஏமாற்றம்  படிப்புமுடிந்ததும்தான் எதையும் யோசித்துச் சொல்லமுடியும் என்று சுதா சொல்லிவிட்டபோது அவளுக்கு ஒரே குழப்பமாய் இருந்தது. வழமையாய் படங்கள்ல கலியாணத்துக்கு பெண்பார்க்கவந்து பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் சாப்பிட்டுவிட்டு கடைசியாய் வீட்டைபோய் யோசிச்சு பதில் சொல்லுறம் என்டுசொல்லும்போது அந்தப் பெண்ணின் முகத்தை close-upல் காட்டுவாங்கள். அதுவரை நாணத்துடன் நிலத்தையே பார்த்துக்கொண்டிருந்த அவளின் முகம் இப்போது முழுவதும் வெளிறிப் போய் இருக்கும். சுத்தி இருந்தவர்கள் எல்லாம் அவளைப் பரிதாபமாய்ப் பார்ப்பார்கள். அவமானம் தாளாமல் ஓடிச்சென்று அறைக்குள் கதவைப் பூட்டிக்கொண்டு குமுறிக் குமுறி அழுவாள். இத்தனைக்கும் அவளுக்கு மாப்பிளையை முன்ன பின்ன தெரிஞ்சிருக்காது. அப்பிடி இருக்கும்போதே அத்தனை நம்பிக்கையுடன் புடவைகட்டி அலங்காரம் பண்ணி நாணத்துடன் வந்திருப்பாள்.  அன்றுதான் அவர்கள் நிகழ்ச்சி BMICHஇல் அரங்கேறப்போகிறது. பெண்கள் எல்லோரும் புடவைகட்டி அலங்காரம் பண்ணி நாணத்துடன், சேச்சே.. என்ன பொம்பிளையா பாக்கவறாங்க இங்க? ஆனால் என்னமோ அவளுக்கு மட்டும் வெட்கம் பிடுங்கித்தின்றது. பூப்புனித நீராட...