இடுகைகள்

ஜனவரி, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மெமரி லீக்

படம்
வியாழமாற்றம் 03-01-2013 இந்தமுறை augmented reality சம்பந்தமானது. இப்பெல்லாம் நமக்கு கமெண்ட் போட்டு அலுத்துவிட்டது. எத்தனை நாளைக்குத் தான் நல்லா இருக்கு எண்டு போடுவது. அதனால் வெறும் like உடன் நிறுத்திவிடுவேன். ஆனால் அதையும் மீறி ரொம்பவே நன்றாக இருக்கிறது, கமெண்ட் போடுவம் எண்டு வெளிக்கிட்டால் நீண்டு நீண்டு பிறகு அதுவே ஒரு பதிவாகிவிடுகிறது. இம்முறை வியாழமாற்றம் வாசித்தபோது, முதலாவதாகத் தோன்றியது என்னய்யா ப்ரோக்ராம் பண்ணியிருக்கிறீங்க/றாங்க எண்டு தான். பலருக்கு இது ஒரு அர்த்தமில்லாத கேள்வியாகத் தோன்றும். ஆனால் நெட்வொர்க் அல்லது சிஸ்டம் சைடில் இருப்பவர்களுக்குத்தான் அதன் வலி புரியும்.  ஐந்து வருடங்களுக்கு முன்பு இப்படித்தான் ஒரு மேஜர் ப்ரொஜெக்டில் மாட்டுப்பட்டிருந்தபோது என்னதான் திருகுதாளம் பண்ணியும் அந்த சிங்கப்பூரின் முதலாவது சர்ச் என்ஜின் வெப்சைட் லோட் ஆவதற்கு 30s எடுத்தது. ஒரே query யை கூட சிறிது நேரத்தின் பின் இரண்டாவது முறை கொடுக்கும்போதும் கூட அதே நிலைமை தான். உடனே ப்ரோக்ராமேர்ஸ் எல்லோரும் ஒன்று சேர்ந்தாப்பல நெட்வொர்கில் த...

ஹிமாலயா கிரியேசன்ஸ் 6

படம்
ஹிமாலயா கிரியேசன்ஸ் யாழ்ப்பாணத்தில் ஒரு தனியார் நிறுவனமாக உருவாக்கம் பெற்று சில நாட்களே ஆகியிருந்தன. முதலாவது நிகழ்ச்சி, AAA Movies International அனுசரணையில் Himalaya Creations Pvt Ltd  நிறுவனத்தினரால்  நடாத்தப்பட்ட " ignite : Empowering the short-filmmakers".. பட்டுத்துணி விரிக்கப்பட்ட வட்டமேசைகள்.. சுற்றிவர அழகிய நாற்காலிகள்.. மேடை விளக்குகள்.. சிறந்த ஒலியமைப்பு.. என்று களைகட்டிய அந்த இடம்.. யாழ்ப்பாணமும் பல வெளியிடங்களைப் போலவே அதி நவீன வசதிகளுடன் கூடிய conference halls உடன் அதிமுக்கிய நிகழ்வுகளைக் கொண்டு நடத்துவதற்குத் தயாராக இருக்கிறது என்பதைக் கட்டியம் கூறிற்று.  பல வளர்ந்துவரும் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்ட Himalaya Creations நிறுவனத்தின் இந்த முதலாவது ignite நிகழ்வில் தான் வடபகுதி திரைப்படக்கலை சார் கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சங்கம் ஒன்றை உருவாகுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டு அதன் தலைவராக ஈழத்தின் புகழ்பூத்த திரைப்பட இயக்குனர் திரு. ந.கேசவராஜன் அவர்களை ஹிமாலயா கிரியேசன்ஸ்...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

படம்
ரெண்டு வரியில் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று முடித்துவிடலாம் என்று தான் முதலில் நினைத்தேன். ஆனால் அதில் என்ன சுவாரசியம் இருக்க முடியும் என்று தோன்றவே கொஞ்சம் நீட்டி முழக்க அதுவே ஒரு பதிவாக வந்துவிட்டது.  2012, ஓஷோவின் The Art of Dying உடன் தொடங்கியது. பயணம் இலங்கையை நோக்கியது. கொடுக்கப்பட்ட விலை சற்று அதிகம் என்றாலும் தொலைந்துபோன பக்கங்கள் சில மீட்க்கப்பட்டன. பல கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கப் பெற்றன. அனந்தனுடனான இந்தியாவுக்கான இரண்டாவது ஆன்மீகப் பயணம் பல இனிய அனுபவங்களைப் பெற்றுத் தந்தது.  சாதனைகள் என்று சொல்லப்போனால், ராமர் பாலம்கட்ட அணில்குஞ்சும் உதவியதுபோல யாழின் வரலாற்றுச் சிறப்புமிக்க இரு பெரும் ஆரம்பங்களில் துணை நின்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. என்னதான் ஆயிரம் கனவு கண்டாலும் அதை திறமையாக செயல் படுத்துவதற்கு தகுந்த அணியும் தேவை. அந்தவிதத்தில் Yarl IT Hub மற்றும் Himalaya Creations Pvt Ltd இரண்டிலும் ஏதோவொருவகையில் ஊக்குவிக்கும் காரணியாக அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இவையிரண்டுமே இந்த குறுகிய காலத்தில் யாழில் இன்றைய சூழலில் என்னவெல...