இடுகைகள்

அறிமுகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேவதாசி: இறைவணக்கமும் தன்னிலைவிளக்கமும்

படம்
இறைவணக்கம் சிறு மனக்கும்பி தனிகரோளிந்து வன்கூடி யான் கலை விழித்தெழுது கண்ட சோதியாம் கார்மேக வண்ண நிழலிலாம் வேறிலா சாந்த கோடி பதும நின் பாதம் தொழுதே தன்னிலைவிளக்கம் நின்பொருள் தேடி வந்திலோம் நாளை எங்கென்றும் அறிகிலோம் வழி ஏதுமறியா வெறுமையுடன் விதிவழி செல்லும் கால்கள் சூடியபின் மனம்சலித்து சாக்கடைதனிலே வீசிடினும் வலிகளைமறைத்தே புன்சிரிப்புடன் விலகிடுவாள் இந்தத்தேவதாசி உமையவள் கட்டளை உரைப்பதென் கடன் உவப்பிடின் நலம் உவர்த்திடினும் குறையிலா *****  தொடரும்..

அறிமுக மடல்

அறிமுகமெண்டு சொல்லப் போனா ஒண்டுமில்லைத் தான். இருந்தாலும் ஏதாச்சும் சொல்லவேணுமே எண்டதால ரெண்டு வரி சொல்றன் கேளுங்கோ. முன்னெல்லாம் இங்கை படைப்பாளிகள் வச்சதுதான் சட்டம். அவங்க என்ன எழுதுறாங்களோ அதை பாதி புரியாவிட்டாலும் நானும் ஒரு ரசிகை எண்டு ப்ரூப் பன்றத்துக்காண்டியாச்சும் ஆஹா ஓஹோ எண்டு சொல்லிக்கொண்டிருப்பானுங்க. ஆனா இந்த இன்டர்நெட் எல்லா வீட்டுக்கும் வந்தப்புறம் இப்பல்லாம் நாம வைக்கிறதுதான் சட்டம். அதால ஒரு ரசிகையாய் நான் ரசித்தவற்றை உங்களுடன் இங்க பகிர்ந்து கொள்ளப் போகிறேன். பிடிச்சிருந்தா நாலு வார்த்தை நல்லதாவோ இல்லை நாக்கை பிடுங்குற மாதிரியோ சொல்லிட்டு போங்க. நானும் ஒரு ரசிகை தானுங்கோ. சத்தியமா நம்புங்கோ!