"a journey through a century" Documentary Film
"சிங்கம் சிங்கம்" என்று மூச்சுக்கு முன்னூறு தரம் டிவியில அலறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலை, ஒரு ஆவணப் படத்துக்கு ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு ஆர்ப்பாட்டம் பண்ணியது இவங்களாத்தான் இருக்கும். குறுந்தட்டு வெளியீட்டிற்கு இந்திய சினிமா ஆடியோ ரிலீஸ் போலவே ஐந்தடி உயரத்தில் கவர் மாதிரியுரு செய்திருந்தனர். Trailer பற்றி சொல்லவே தேவையில்லை. வழமைபோல் Music இல் சுகன்யன் பிரித்து மேய்ந்திருக்கிறார். இந்த ஆவணப் படமானது வடக்கின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான Himalaya Creations (Pvt) Ltd இனால் மிகவும் குறுகியகாலப்பகுதியில் உருவாக்கப் பட்டுள்ளது. இதற்க்கான இசையினை Thunderknight Music இனுடைய டைரக்டர் S sukanyan அமைத்துள்ளதோடு, யாழில் முதன் முறையாகபிரமாண்டமான முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கும் College Hymn இற்கான Mastering இனை ஹாலிவுட்டின் பிரபல "Universal Mastering Studio" செய்திருக்கிறது. உள்ளூர், வெளிநாடுகளில் உள்ள திறமையான வல்லுனர்களையும், தரமான நிறுவனங்களையும் ஈடு படுத்தியதநூடாக Himalaya Creations (Pvt) Ltd மிகத்தரமான படைப்பினை வழங்கியிருக...