அக்க்ஷய திருதியை
ஐஸ்வர்யம் தேடிவரும் அக்க்ஷய திருதியை நன்னாளில்.. வரும் பன்னிரண்டாம் பதின்மூன்றாம் திகதிகளில் உங்களுக்காக.. ஸ்ரீ நதியா நகை மாளிகையில் மாபெரும் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.. அக்க்ஷய திருதியைக்கான விளம்பரம் நாற்பதாவது செக்கனில் தொடங்குகிறது. இதன் சிந்தனை உருவாக்கம் மட்டுமன்றி set-properties ஒழுங்கு செய்ததிலிருந்து மீன்களை நடிக்கவைத்தது வரை இந்த விளம்பரத்தின் முற்று முழுதான creditsம் எமது Creative Director பிருந்தாவனையே சாரும். தனது முதலாவது படைப்பை வெகுசிரத்தையெடுத்து கொடுக்கப்பட்ட பட்ஜெட்க்குள் திருப்திகரமாய் கொடுத்திருக்கிறார். தங்கக் கழுத்தில் ஜொலிக்கும் தங்கத்தை விட, தங்க மீன்கள் மத்தியில் ஜொலிக்கும் தங்கம் அழகாயிருக்கிறது. யார் கண்டார்? இதைப் பார்த்துவிட்டு இனி பணக்கார வீட்டு மீன்தொட்டிகளில் கற்களுக்குப் பதில் தங்கத்தைப் போட்டுவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை. அக்க்ஷய திருதியை நாளில் நகை வாங்கினால் செல்வம் கொழிக்கும் / தொழில் தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்பது ஒருசாரார் நம்பிக்கை. 2006 சித்திரைக் கடைசி. "ஒன்ப...