வில்லாடிய களமெங்கே?
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஒருநாள். St. Johns' கல்லூரி மைதானத்தின் நடுவே உச்சி வெயில் மண்டையப் பிளக்க ஆண்கள், பெண்கள் என்று பல நூற்றுக்கணக்கான இளையோர் வேர்க்க விறுவிறுக்க ஆள் மாறி ஆள் அணி மாறி அணிகள் என்று பல்வேறு வீர சகாசச் செயல்களை அரங்கில் நடாத்திக் காட்டிக் கொண்டிருந்தனர். தீமூட்டிய வளையங்களுக்குகூடாகப் பாய்தல், ஹிட்லர் மார்ச்சிங் (நாம் வைத்த பெயர்) என்று ஆண்கள் ஒருபக்கத்தில் தமது ஆற்றலை நிரூபித்துக் கொண்டிருக்க அவர்களுக்கு சற்றும் சளைக்காமல் பெண்கள் அணிகளும் (தீமூட்டாத) வளையங்களுக்கூடாகப் பாய்தல், tiger மார்ச்சிங் என்று தாமும் தமது ஆற்றலை நிரூபித்துக் கொண்டிருந்தனர். ஒரே சமயத்தில் கிட்டத்தட்ட ஆறு ஏழு அணிகளின் சாகாச நிகழ்வுகளை நடத்தக் கூடியளவுக்கு அந்த மைதானம் சற்று விஸ்தீரணமாகவே இருந்தது. நம்மளை கண்டுபிடியுங்க பாக்கலாம்? அங்கு தான் அனன்சியா அக்காவின் தலைமையில் களமிறங்கிய எமது அணி மிகச்சிறப்பாகவே களமாடி மாவட்ட அளவில் இரண்டாமிடத்தை தட்டிச் சென்றது. முதலாமிடத்தை வழமை போலவே வேம்படி மகளிர் கல்லூரி பெற்றுக்கொண்டது. அதற்க்கு அடுத்த ...