இடுகைகள்

செப்டம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஹிமாலயா கிரியேசன்ஸ் 2

படம்
"இப்ப கண்டிப்பா போய்த்தான் ஆகணுமா?" மனைவி கேட்கும்போதே கணவனுக்கு அடிவயிற்றில் புளிகரைத்தது போலாகிவிடும். வேறென்ன? எங்கே தன்னையும் கூட்டிக்கொண்டு போகச் சொல்லிவிடுவாளோ எண்டு தான்.. :) செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை. என்பதெல்லாம் அந்தக்காலம். நீ ஆஸ்திரேலியா போறியா நான் ஸ்ரீலங்கா போறன். இது இந்தக் காலம். காலம் ரொம்ப மாறிப்போச்சுது இல்லை? எதிலும் வேகம். ஒரு ரெண்டு நிமிடம் நிண்டு நிதானமா துக்கப்படவோ வருத்தப்படவோ நேரமில்லை. பல சமயங்களில் அதற்க்கான அவசியங்களும் அர்த்தமற்றவையாகிவிடுகின்றன. சரி இப்ப நாம ஸ்டோரிக்கு வருவம்.  "இது எண்ட லைப்ஐயே மாற்றப்போற மீட்டிங்" என்று ஒருவழியா அவசர அவசரமாய் விடை பெற்ற கணவன் போற அவசரத்திலை இதயத்தை விட்டிடு போறத்துக்கு பதில் பைல்ஐ விட்டிடு போட்டார்.  ரொம்ப இம்போர்டன்ட் டாகுமென்ட்ஸ் எண்டு ஒரு மாசமா பாத்து பாத்து சேர்த்து வைத்தது. அப்பிடி லப்டோப்ல ஸ்கேன் பண்ணி கொண்டுபோக முடியாம என்ன திரவியமோ? இரவிலை தலாணிக்கு கீழை வைச்சுப் படுக்காத குறை. போன் பண்ணி கேக்கலாமேண்டால் ஒரே Engaged. மனுசிய விட்டு பிரிஞ்ச...

நானுமொரு ரசிகை தானுங்கோ

படம்
தொடங்கி ஒருவருடம் ஆகப் போகிறது இன்னும் 75 பதிவுகள் கூடத் தாண்டவில்லை தான். ஆனாலும் ரசனைகள் ஒன்றும் தீர்ந்து போய்விடவில்லை. இளையராஜாவின் "How to name it" இல் ஆரம்பித்தது இன்று நீ தானே என் பொன் வசந்தத்தில் வந்து நிற்கிறது. இத்தனைக்கும் நான் ஒன்றும் இளையராஜாவின் தீவிர ரசிகை இல்லை. இருந்தும் எதுவோ ஒன்று இன்னும் அவரை ரசிக்க வைக்கிறது. ஜேகே அளவுக்கு கம்போசிசனை  அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேயத்தெரிந்திருந்தால் ஒருவேளை கண்டு பிடித்திருக்கலாம்.  நீந்தி வரும் நிலாவினிலே ஓர் ஆயிரம் ஞாபகங்கள் நீண்ட நெடும் கனாவினிலே நூறாயிரம் தீ அலைகள் நெஞ்சமெனும் வினாக்களுக்கு என் பதில் என்ன பல வரிகள் சேரும் இடம் விலாசத்திலே உன் பார்வையின் முகவரிகள் தேடலில் நீ வரும் ஓசைகள் அங்கு போனது உன் தடம் இல்லையே பலமாதங்களின் பின்பு எதிர்பாராதவிதமாய் Singaporeஇல் ஓர் இனிய சந்திப்பு. தத் திரிகிடதக தித் தரிகிடதக தொம் தரிகிடதக நம் தரிகிடதக முதன் முதலாக என்னையும் தில்லானா பாட(வாசிக்க?)வைத்த  பெருமை மேதகு. ராமவர்மா அவர்களையே சேரும். கோடானுகோடி நன்றிகள...