இடுகைகள்

Himalaya லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஹிமாலயா கிரியேசன்ஸ் 6

படம்
ஹிமாலயா கிரியேசன்ஸ் யாழ்ப்பாணத்தில் ஒரு தனியார் நிறுவனமாக உருவாக்கம் பெற்று சில நாட்களே ஆகியிருந்தன. முதலாவது நிகழ்ச்சி, AAA Movies International அனுசரணையில் Himalaya Creations Pvt Ltd  நிறுவனத்தினரால்  நடாத்தப்பட்ட " ignite : Empowering the short-filmmakers".. பட்டுத்துணி விரிக்கப்பட்ட வட்டமேசைகள்.. சுற்றிவர அழகிய நாற்காலிகள்.. மேடை விளக்குகள்.. சிறந்த ஒலியமைப்பு.. என்று களைகட்டிய அந்த இடம்.. யாழ்ப்பாணமும் பல வெளியிடங்களைப் போலவே அதி நவீன வசதிகளுடன் கூடிய conference halls உடன் அதிமுக்கிய நிகழ்வுகளைக் கொண்டு நடத்துவதற்குத் தயாராக இருக்கிறது என்பதைக் கட்டியம் கூறிற்று.  பல வளர்ந்துவரும் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்ட Himalaya Creations நிறுவனத்தின் இந்த முதலாவது ignite நிகழ்வில் தான் வடபகுதி திரைப்படக்கலை சார் கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சங்கம் ஒன்றை உருவாகுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டு அதன் தலைவராக ஈழத்தின் புகழ்பூத்த திரைப்பட இயக்குனர் திரு. ந.கேசவராஜன் அவர்களை ஹிமாலயா கிரியேசன்ஸ்...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

படம்
ரெண்டு வரியில் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று முடித்துவிடலாம் என்று தான் முதலில் நினைத்தேன். ஆனால் அதில் என்ன சுவாரசியம் இருக்க முடியும் என்று தோன்றவே கொஞ்சம் நீட்டி முழக்க அதுவே ஒரு பதிவாக வந்துவிட்டது.  2012, ஓஷோவின் The Art of Dying உடன் தொடங்கியது. பயணம் இலங்கையை நோக்கியது. கொடுக்கப்பட்ட விலை சற்று அதிகம் என்றாலும் தொலைந்துபோன பக்கங்கள் சில மீட்க்கப்பட்டன. பல கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கப் பெற்றன. அனந்தனுடனான இந்தியாவுக்கான இரண்டாவது ஆன்மீகப் பயணம் பல இனிய அனுபவங்களைப் பெற்றுத் தந்தது.  சாதனைகள் என்று சொல்லப்போனால், ராமர் பாலம்கட்ட அணில்குஞ்சும் உதவியதுபோல யாழின் வரலாற்றுச் சிறப்புமிக்க இரு பெரும் ஆரம்பங்களில் துணை நின்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. என்னதான் ஆயிரம் கனவு கண்டாலும் அதை திறமையாக செயல் படுத்துவதற்கு தகுந்த அணியும் தேவை. அந்தவிதத்தில் Yarl IT Hub மற்றும் Himalaya Creations Pvt Ltd இரண்டிலும் ஏதோவொருவகையில் ஊக்குவிக்கும் காரணியாக அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இவையிரண்டுமே இந்த குறுகிய காலத்தில் யாழில் இன்றைய சூழலில் என்னவெல...

ஹிமாலயா கிரியேசன்ஸ் 5

படம்
"பன்னிரெண்டோட முடிஞ்சிடுச்சா..? பதின்மூணு வருதில்லை..?" என்று ஒருவழியா மாயன்களிடமே கடன்வாங்கி ஒரு ஸ்டோரிபோர்ட் கொண்டுபோனா.. "இது ஓகே . ஆனா எனக்கு பஞ்சாங்க காலண்டருக்கு நிறைய importance குடுக்கணும். எனவே தனியாக வேறையா அதுக்கு இன்னொரு விளம்பரம் செய்யுங்க" என்றார். மெய்கண்டான் காலண்டர் எண்டு கேள்விப் பட்டிருகிறோம், ஆனால் யாரு எழுதுறா.. யாரு அடிக்கிறா என்று தெரியாததால் மெய்கண்டான வைத்து google பண்ணிப் பார்த்ததில் மெய்கண்டான் ஒரு சிவனடியார் எண்டு வந்துது. எனவே அவர் எழுதியிருக்க 99% வாய்ப்பில்லை. அப்பத்தான் சுஜன் அண்ணா சொன்னார் "கரிகணன் போன்று தான் மெய்கண்டான், அஷ்டலக்ஷ்மி போன்றவையும் பஞ்சாங்கத்தை வைத்துதான் அடிக்கினம். ஆனால் நாங்கள் யாழ்ப்பாணத்திலே புகழ்பெற்ற இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த காலண்டேரை பிரிண்ட் பண்ணி வெளியிடுறம் என்பது மக்களுக்கு தெளிவாக போய் சேரவேண்டும்" என்று.   இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கம் என்றவுடன் தான் பொறிதட்டியது. சிறுவயதுகளில் வாக்கிய பஞ்சங்கத்தின் முன்னால் அவரது பெயர் ...

ஹிமாலயா கிரியேசன்ஸ் 4

படம்
வருடக்கடைசி நெருங்கிக்கொண்டிருக்கின்றது. FBயில் பலர் இப்போதே countdown தொடங்கிவிட்டார்கள். மாயன் காலண்டர் வேற உலகம் அழியப்போகுது என்று பெரும் பீதியக்கிளப்பிக்கொண்டிருக்கும் சமயம் பார்த்து ஒரு போன்கால்.. "தம்பி.. 2013 பிறக்கப்போகுது, எனக்கு எங்கடை கரிகணன் காலண்டரை வைத்து ஒரு விளம்பரம் செய்ய வேணும்".  ஆறடி உயரமும் முகமேதெரியாதளவுக்கு தாடியுமாக சட்சாத் அவர் வேறுயாருமல்ல, முதன் முதலாய் நமது குறிக்கோள்களைப் புரிந்து பாராட்டி தூக்கிவிட்ட கரிகணன் பிரிண்டர்ஸ் முதலாளி திரு.ராஜ்குமார் அவர்கள் தான். என்னா ஒரு நம்பிக்கை.. தன்னம்பிக்கை..   நாளை நடக்கப் போகும் ஒன்றிற்காய் இன்று நமது முயற்ச்சியை கைவிட்டுவிட்டு சும்மாயிருப்பது சுத்த மடைத்தனம் அல்லவா? அந்தவகையில் 2013 பிறக்குதோ இல்லையோ அவர்களுடைய வேலை பெரிய பெரிய கம்பனிகளுக்கு ஆர்டர் எடுத்து கலண்டர், டயரி அடிப்பது. எமதுவேலை விளம்பரம் செய்வது.. யாரோ சொன்னார்கள் உலகம் அழியப்போகுதுதாம் என்றுவிட்டு வெறுமனே இருந்துவிடமுடியாது தானே? அதால..  ...

அடடே நாளைக்கு தீபாவளியில்ல?

படம்
ரசிகையின் முதல் பதிவு - புதன், அக்டோபர் 26, 2011  அடடே இன்னைக்கு தீபாவளியில்ல? அதுக்கு..  Thillakan  சொன்னது… இலவசம blog தாறன் எண்டதுக்ககாக 68 blog திறந்து வருசத்துக்கு ஒருக்க எழுதக்கூடாது ;) வாயில வரத தமிழ் எழுத்தில வருகுது :) 11:01 pm, அக்டோபர் 26, 2011  உண்மைதான் இன்றுவரை கிட்டத்தட்ட பத்து பன்னிரண்டு ப்ளாக் திறந்திருப்பேன். ஆனால் தொடர்ச்சியாக குறைந்தது மாதத்துக்கு ரெண்டு தடவையேனும் எழுத முடிந்தது இதில் மட்டும் தான். ஏனெனில் எழுதும்போது ஏனோ ஒருகட்டுக்குள் நின்று எழுதுவதென்பது என்னால் முடியாத காரியம். அந்த நேரத்தில் தோன்றுவது எதுவோ அதை அப்படியே எழுதி போட்டுவிடுவேன். திரும்பவும் பார்த்து திருத்துவதென்பது மிக மிகக் குறைவு.   ஒரு சிலர் சில பதிவுகளில் கேட்டிருக்கிறார்கள் 'இதன் மூலம் நீங்க என்ன சொல்லவாறீங்க' எண்டு. என்னதான் பேப்பர்ல போடும் அளவுக்கு ஏதோ கிறுக்கியிருந்தாலும்  சத்தியமா யாருக்கும் கருத்தோ அட்வைசோ என்று பண்ணுற அளவுக்கு நான் இன்னும் வளரலை.  அது மட்டுமல்லாது இங்கு எந்த இலக்...

ஹிமாலயா கிரியேசன்ஸ் 2

படம்
"இப்ப கண்டிப்பா போய்த்தான் ஆகணுமா?" மனைவி கேட்கும்போதே கணவனுக்கு அடிவயிற்றில் புளிகரைத்தது போலாகிவிடும். வேறென்ன? எங்கே தன்னையும் கூட்டிக்கொண்டு போகச் சொல்லிவிடுவாளோ எண்டு தான்.. :) செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை. என்பதெல்லாம் அந்தக்காலம். நீ ஆஸ்திரேலியா போறியா நான் ஸ்ரீலங்கா போறன். இது இந்தக் காலம். காலம் ரொம்ப மாறிப்போச்சுது இல்லை? எதிலும் வேகம். ஒரு ரெண்டு நிமிடம் நிண்டு நிதானமா துக்கப்படவோ வருத்தப்படவோ நேரமில்லை. பல சமயங்களில் அதற்க்கான அவசியங்களும் அர்த்தமற்றவையாகிவிடுகின்றன. சரி இப்ப நாம ஸ்டோரிக்கு வருவம்.  "இது எண்ட லைப்ஐயே மாற்றப்போற மீட்டிங்" என்று ஒருவழியா அவசர அவசரமாய் விடை பெற்ற கணவன் போற அவசரத்திலை இதயத்தை விட்டிடு போறத்துக்கு பதில் பைல்ஐ விட்டிடு போட்டார்.  ரொம்ப இம்போர்டன்ட் டாகுமென்ட்ஸ் எண்டு ஒரு மாசமா பாத்து பாத்து சேர்த்து வைத்தது. அப்பிடி லப்டோப்ல ஸ்கேன் பண்ணி கொண்டுபோக முடியாம என்ன திரவியமோ? இரவிலை தலாணிக்கு கீழை வைச்சுப் படுக்காத குறை. போன் பண்ணி கேக்கலாமேண்டால் ஒரே Engaged. மனுசிய விட்டு பிரிஞ்ச...

ஹிமாலயா கிரியேசன்ஸ்

படம்
பல தசாப்த காலமாக யுத்த மேகங்களால் சூழப்பட்டிருந்த யாழ் மண்ணிலிருந்து சற்றே நம்பிக்கையின் கீற்று தூரத்தே தெரிந்தாலும் இத்தகையாதொரு தரம் வாய்ந்த படைப்பு இவ்வளவு சீக்கிரமாய் வருமென நிச்சயமாக யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.  முதன் முதலாய் யாழ் மண்ணில் நிறுவனம் ஒன்று தொடங்க வேண்டுமென்ற எனது எண்ணத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட போது எல்லோருமே என்னை வினோதமாய்ப் பார்த்தார்கள். "யாழ் மண் இன்னும் அதற்க்கு தயாரில்லை", "ஒரு தனியார் நிறுவனத்தை நடாத்துவதற்கு தேவையான போதிய வளங்கள் எதுவும் அங்கே இல்லை" என்று பல அறிவுரைகள் வெகு சரளமாகவே எல்லாப் பக்கத்திலிருந்தும் வந்து குவிந்தன. அதிலுமே யாருமே எதிர்பாராதவாறு விளம்பர நிறுவனம் ஒன்றை உருவாக்கியபோது "யாழில் பெரிய நிறுவனங்களே இல்லையாம், பிறகு யாருக்கு போய் விளம்பரம் செய்யப் போகிறீர்கள்?" என்றே கேள்வி எழுந்தது. இதற்க்கான பதில் எனக்குமே தெரிந்திருக்கவில்லை. இருந்தும் எதுவோ ஓர் நம்பிக்கை.. கூட இருந்தவர்களின் திறமையில்.. அவர்களின் உழைப்பில்.. எமது கனவுகளில் .. முதன்முதலாக ஹிமலாயா குழுவினரை சந்தித்தபோது எனக்...

கன்னியும் கண்ணீர்ப் பூக்களும்

படம்
இதுவரை பாடல்களை மட்டுமே "வெட்டிவேலை" என்ற தொகுப்பின் கீழ் கிறுக்கின்டிருந்த நான், ஒரு கவிதைத் தொகுப்புக்கு விமர்சனம் எழுதுவதென்பது இதுவே முதல் தடவை. ஏன் உனக்கு இந்த தேவையில்லாத வேலை என்று புத்தி ஒருபுறம் எச்சரித்துக் கொண்டிருப்பதையும் மீறி இதை எழுதுகிறேன் என்றால் அதற்க்கு ஒருகாரணம் இருக்கிறது. அவள் தான் "சோமாலியத் தாய்"  வெளியில் இவ்வளவு காற்றிருக்க  எண்டா மகனே எனது முலையில் வாய்வைத்துக்  காற்றைக் குடிக்கிறாய்  ஏனடா அழுகிறாய் சத்தியமாய்த் தெரியாது எனக்கும் தாய்ப்பாலின் சுவை என்னவென்று  ஏனென்றால்  உன் பாட்டியின் முலைகளுடன்  பாலுக்காய்ப் போராடித்  தோற்றுப் போனவள் நான்.  சென்ற மாதம் ஹிமலாயா கிரியேசன்ஸ் ஒழுங்கு செய்திருந்த " ignite " நிகழ்வில் வளர்ந்துவரும் இளம் பாடலாசிரியர், கவிஞன் என அறிமுகப்படுத்தப்பட்ட உமாகரன் மேடையேறியபோது சில முகங்களில் தெரிந்த ஏளனம் "சோமாலியத் தாய்" என்ற இந்தக் கவிதையை அவன் வாசித்து முடித்ததும் ஆச்சரியத்தினால் வாய் பிளந்து நின்றது. ஒவ்வோர் வார்த்தைகளும் வாளாய் வந்து இதயத்தில் பாய்ச்சிச் சென்...

பதினாறு வயதினிலே

படம்
தலைப்பை பாத்தவுடனே பதினாறுவயசு ஸ்ரிதேவிதானே உங்க கண்முன்னாடி வெள்ளைப்  பாவாடை தாவணில " செந்தூரப் பூவே செந்தூரப் பூவே " எண்டு பாடிக்கொண்டு ஓடிவருவா இல்லையா? ஆனா நாம கொஞ்சம் புதுசா யோசிச்சு திரிஷாவ கொண்டுவந்து போட்டிருக்கிறம். அது எப்படின்னு பாக்கிறத்துக்கு முதல்லை... நாமெல்லாம் பதினாறு வயதிலை என்னத்தை கிழிச்சிட்டிருந்தம் எண்டு கொஞ்சம் rewind பண்ணிப் பாப்பமா..? இற்றைக்கு சுமார் பதினைந்து வருடங்களின் முன்பு ஒரு நாள்.. வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நேரம்.. அப்பெல்லாம் வாரம் ஒருமுறை உடல் பயிற்சி பாடம் இருக்கும். பக்கத்திலை இருக்கிற சர்ச் முன்றலில் (இப்போ Laughs இருக்கிற இடம் என்று நினைக்கிறேன்) தான் செய்வோம். அப்போதான் தாவணிக் கனவுகள் மாதிரி நம்ம "sweet sixteen" பற்றி பேச்சு வந்தது. நாம அப்பெல்லாம் பெரிதாய் கதைக்க மாட்டோம் (இப்பவும் தான். நம்புங்க ப்ளீஸ்..) ஆனாலும் அன்னிக்குத்தான் புதிதாய் இந்த சொற்பதத்தைக் கேள்விப்பட்டதால் கொஞ்சம் ஊன்றி அவர்களின் உரையாடல்களை கவனிக்கத் தொடங்கினேன். ஒவ்வொருவரும் இளமை, கனவுகள், பசங்க அப்பிடி இப்படி எ...

ஹிமாலய சாதனை!

படம்
மேடையில் மூவர் கைகளில் விருதுடன் ஹிமாலய சாதனையாம் அருகினில் இன்னும் நால்வர் பூஜையின் முன்பு பலியிடவேண்டுமாம் தானமாய்க் கொடுத்திருக்கிறோம் ரத்தத்தை கண்ணீர்த் துளிகளாக சிறுபிள்ளை வேளான்மையாம் - வலிகளை அறுவடை செய்து கொடுக்கிறோம் வாங்கிவந்த வரம் இதுவென்று வெறுமனே ஒதுங்கிவிடவில்லை வெற்றி இதுதானென்று வென்ற பின்பு தோன்றாது இன்னுமின்னும் சாதிக்கத் துடிக்கும் இளம் கன்றிவர்கள் பயமறியார்கள் காலச் சக்கரத்தில் அடிபட்டுப் போகையில் சுயத்தை நிலை நிறுத்துவதர்க்கான சமுதாய அக்கறையையும் தாண்டிய ஒருவித கடமையுணர்ச்சியின் வெளிப்பாடாம் தூற்றுவதற்கு சேரும் கூட்டம் போலவே போற்றுவதற்கும் சேரும் கணப்போழுதினிலே யார்மீதும் குறையில்லை எவரோடும் பகையில்லை இனியென்றும் தோற்ப்பில்லை இமயம் சென்று கொடிநாட்டுவர் அடர் காட்டில் தேனெடுத்து வருவர் அவன் ஆலயத்துக்கு!