ஹிமாலயா கிரியேசன்ஸ் 5

by - 11/20/2012 12:13:00 பிற்பகல்


"பன்னிரெண்டோட முடிஞ்சிடுச்சா..? பதின்மூணு வருதில்லை..?" என்று ஒருவழியா மாயன்களிடமே கடன்வாங்கி ஒரு ஸ்டோரிபோர்ட் கொண்டுபோனா.. "இது ஓகே . ஆனா எனக்கு பஞ்சாங்க காலண்டருக்கு நிறைய importance குடுக்கணும். எனவே தனியாக வேறையா அதுக்கு இன்னொரு விளம்பரம் செய்யுங்க" என்றார்.

மெய்கண்டான் காலண்டர் எண்டு கேள்விப் பட்டிருகிறோம், ஆனால் யாரு எழுதுறா.. யாரு அடிக்கிறா என்று தெரியாததால் மெய்கண்டான வைத்து google பண்ணிப் பார்த்ததில் மெய்கண்டான் ஒரு சிவனடியார் எண்டு வந்துது. எனவே அவர் எழுதியிருக்க 99% வாய்ப்பில்லை.

அப்பத்தான் சுஜன் அண்ணா சொன்னார் "கரிகணன் போன்று தான் மெய்கண்டான், அஷ்டலக்ஷ்மி போன்றவையும் பஞ்சாங்கத்தை வைத்துதான் அடிக்கினம். ஆனால் நாங்கள் யாழ்ப்பாணத்திலே புகழ்பெற்ற இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த காலண்டேரை பிரிண்ட் பண்ணி வெளியிடுறம் என்பது மக்களுக்கு தெளிவாக போய் சேரவேண்டும்" என்று.  

இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கம் என்றவுடன் தான் பொறிதட்டியது. சிறுவயதுகளில் வாக்கிய பஞ்சங்கத்தின் முன்னால் அவரது பெயர் பெரிதாய் போட்டிருப்பது பார்த்திருக்கிறேன். ஆனால் இதுவரை அவர் படத்தை இணையத்திலோ வேறெங்குமோ கண்டதில்லை. அதனால் இந்த விளம்பரத்தில் அவரது படத்தையும் உள்ளடக்கினால் நன்றாகவிருக்குமே என்று தோன்றவே எமது கருத்தை ராஜன் அண்ணா அவர்களிடம் சொன்னோம். நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகம் மகிழச்சியடைன்தது அவர்தான். "நல்ல ஐடியா.. நானே அவர்களிடம் கேட்டு சொல்கிறேன். நீங்களே நேரில் சென்று உங்களுக்கு தேவையான படத்தை எடுங்கள்" என்றார். இதை நாங்கள் சற்றுமே எதிர்பார்க்காததால் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. நம்மைப்போலவே இந்த விளம்பரத்தைப் பார்க்கும், திரு.இரகுனாதையரின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் அனைவருமே நிச்சயமாய் மகிழ்ச்சியடைவர் என்பதில் எமக்கு துளிகூட சந்தேகமில்லை. 


எமது ஒவ்வோர் படைப்பிலும் ஏதாவதொன்று புதுமையாக இருக்கவேண்டும் என்பதில் நாம் அதிக கவனம் எடுத்துக்கொள்கிறோம். இந்த இடத்தில் இவ்விளம்பரத்தின் ஒவ்வொரு Frameஐயும் அழகாக வடிவமைத்த நிஷகரனையும் அதை சரியாக நாம் விரும்பியதுபோலவே கொண்டுவந்த நமது மதிப்பிற்குரிய எடிட்டர் துசிகரனையும் Visualக்கு ஏற்றவாறு ஒன்றை நகைச்சுவையாகவும் மற்றொன்றை பிரமாண்டமாய்க் காட்டும்படியும் அட்டகாசமாக இசையமைத்த சுகன்யனையும் நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.

இம்முறை தீபாவளி சரவெடிதான்..
You May Also Like

0 comments