இடுகைகள்

அற்புதத்தில் அற்புதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடலும் குட்டையும்

படம்
சில நேரம் எழுதுவதற்கு எதுவுமே தோன்றாது. ஏன் எழுதுகிறோம் என்றும் தெரியாது. ஆனால் எதையோ எழுதுகிறோம். அது எங்கிருந்து வருகின்றது, எதற்காய் வருகின்றது, யாரிடம் போய்ச் சேரப் போகிறது என்பதெல்லாம் தெரிவதில்லை. இன்றும் அப்படித்தான், நான் ரசித்த ஒருவருடன்.. புத்தக வாசிப்பு எனும்போது பலருக்கு பல ரசனையிருக்கும். எனக்கு அப்படி எந்த ரசனை என்று இன்னும் என்னால் வகைப்படுத்த முடிவதில்லை. கையில் கிடைக்கும் எந்தப் புத்தகத்தியுமே அதன் பூர்வீகம் பாராமல் வாசிக்கத் தொடங்கிவிடுவேன். ஆனால் ஒன்றிப்போய் வசித்து முடித்த புத்தகங்கள் வெகுசிலவே. பலவற்றை என்னால் முழுவதும் படிக்க முடிந்ததில்லை. விருப்பமின்மை என்று சொல்ல முடியாது. ஒருவேளை Steve Jobs சொல்லியதுபோல் "Focusing is saying 'NO' to all other things" ஆக இருக்கலாம். ஆனால் பலரைப்போலவே எனது தேடல் எதுவென்று பலநேரங்களில் புரிந்ததில்லை.  வாழ்க்கையின் தத்துவத்தை அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் சிறுவயதிலிருந்தே இருந்தது. அதற்காய் கண்ணில் பட்ட சமய சித்தாந்த, வேதாந்த நூல்களையெல்லாம் புரிந்தோ புரியாமலோ படித்துத் தொலைத்தபோது, இன்னும் குழப்பம...