நீ தானே என் பொன்வசந்தம்
எல்லோருமே ஒண்டு சேந்தாப்பல ப்ளோக்ல, fbல எண்டு திட்டித் தீர்க்கிறான்களே.. அவ்ளோ மோசமாவா இருக்கும் என்ற பயத்துடன் தான் பார்க்கத் தொடங்கியது. முதல் பாட்டு "புடிக்கலை மாமு". தொடக்கமே சொதப்பல், முக்கியமாக சந்தானம் இந்தப்பாட்டில் வலுக்கட்டாயமாக சொருகப்பட்டது போன்றொரு உணர்வு வருவதைத் தடுக்க முடியவில்லை. வழமையாக படங்களில் சந்தானத்தினது காட்சிகள் கலகலப்பை உண்டுபண்ணும். இதில் என்னமோ அது மிஸ்ஸிங். ஒரு கட்டத்துக்குப் பின் விவேக்குக்கு நடந்ததுதான் நடக்கப் போகிறதோ தெரியவில்லை. Collegeஇல் சமந்தாவை ஜீவா பல வருடங்களின் பின்பு முதன்முதலாக பார்க்கும் காட்சிகள் (அசடு வழிவது முதல் கொண்டு) வசனங்கள் அனைத்தும் அருமை. படத்துக்கே " நீ தானே என் பொன்வசந்தம் " எண்டு பேரை வைச்சிட்டு அந்த அருமையான பாடலை அவ்ளோ சுமாரா பாடியிருக்க வேணாம். தவிர நீண்டநாள் அமுங்கியிருந்த உணர்வுகளை மீண்டும் எழுப்பிக் கொண்டுவருமளவுக்கு, காயத்துக்கு மருந்திடுமளவுக்கு அந்த குரலில் வசீகரம் இல்லை என்று தான் சொல்லவேணும். பல இடங்களில் பார்த்த மேடைக்காட்சி என்றாலும் என்னமோ விசேடமாக இந்தப் படத்தில் இன்னும் சிறப்பாக இ...