இடுகைகள்

JK லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒளிச் சுவடுகள்

படம்
நேரம் அதிகாலை ஏழு மணியிருக்கும். முந்தைய இரவின் அசதி இன்னும் தீரவில்லை. வெறுப்புடன் மெல்ல கண்களைத் திறந்து பார்த்தால் முன்னால் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு புத்தகம் கறுப்பு வெள்ளை நிறத்தில் தெரிந்தது. பத்தாதற்கு படங்களின் மேல் கோடு கோடாய் என்னமோ கிறுக்கினாப் போலிருந்தது. கண்களை நன்றாகக் கசக்கிவிட்டு மீண்டும் பார்த்தால் தற்போது படத்தின் கீழே சிறிதாய் சில எழுத்துக்கள் தெளிவாகத் தெரிந்தன. ஆனால் படத்தில் மட்டும் எந்த மாற்றமுமில்லை. குழப்பத்துடன் எழுந்து அடுத்த பக்கத்தை திருப்பினால் வெள்ளை நிறத்தில் சுற்றி சுற்றி கைவிரல் ரேகை போல பல கோடுகள். அருகே பாலைவனத்தின் நடுவில் பாழடைந்த கட்டடமொன்றின் மேல் எரிகற்கள் வந்து விழுவது போல்.. அழகாகவும் அதேசமயம் பயங்கரமாகவும் இருந்தது. "Are you interested in photography?" திடுக்கிட்டு நிமிர்ந்தவளை கைகளில் சுடச்சுட கோப்பியுடன் எதிர்கொண்டவனை ஒருகணம் தயக்கத்துடன் நோக்கிவிட்டு சிறிதாய் முறுவலித்தாள்.  படமெடுப்பதேன்றால் காமேராவிலுள்ள பட்டனை பிரஸ் பண்ணுவதுவரை தான் அவளது Photography அறிவு. அதை அவனிடம் சொல்லி முதல் நா...

மெமரி லீக்

படம்
வியாழமாற்றம் 03-01-2013 இந்தமுறை augmented reality சம்பந்தமானது. இப்பெல்லாம் நமக்கு கமெண்ட் போட்டு அலுத்துவிட்டது. எத்தனை நாளைக்குத் தான் நல்லா இருக்கு எண்டு போடுவது. அதனால் வெறும் like உடன் நிறுத்திவிடுவேன். ஆனால் அதையும் மீறி ரொம்பவே நன்றாக இருக்கிறது, கமெண்ட் போடுவம் எண்டு வெளிக்கிட்டால் நீண்டு நீண்டு பிறகு அதுவே ஒரு பதிவாகிவிடுகிறது. இம்முறை வியாழமாற்றம் வாசித்தபோது, முதலாவதாகத் தோன்றியது என்னய்யா ப்ரோக்ராம் பண்ணியிருக்கிறீங்க/றாங்க எண்டு தான். பலருக்கு இது ஒரு அர்த்தமில்லாத கேள்வியாகத் தோன்றும். ஆனால் நெட்வொர்க் அல்லது சிஸ்டம் சைடில் இருப்பவர்களுக்குத்தான் அதன் வலி புரியும்.  ஐந்து வருடங்களுக்கு முன்பு இப்படித்தான் ஒரு மேஜர் ப்ரொஜெக்டில் மாட்டுப்பட்டிருந்தபோது என்னதான் திருகுதாளம் பண்ணியும் அந்த சிங்கப்பூரின் முதலாவது சர்ச் என்ஜின் வெப்சைட் லோட் ஆவதற்கு 30s எடுத்தது. ஒரே query யை கூட சிறிது நேரத்தின் பின் இரண்டாவது முறை கொடுக்கும்போதும் கூட அதே நிலைமை தான். உடனே ப்ரோக்ராமேர்ஸ் எல்லோரும் ஒன்று சேர்ந்தாப்பல நெட்வொர்கில் த...

காடு பாலைவனமாகிறது

படம்
படித்ததும் (பிடித்ததும் ?!) அறிவுக்கெட்டியதும்..  முதல்ல இதைப் படிங்க.. காடு  பாலைவன மாகிறது  திறந்து கிடக்கிறது  By JK. முதன் முதலாக ஒரு விஷப் பரீட்சை.. அட நீ எழுதத் தொடங்கினதே அதுதானே என்பவர்கள் மட்டும் தைரியமாக மேலே வாசிக்கலாம்.. மற்றவர்களுக்கு நான் பொறுப்பாளியல்ல.. “நீ எப்போதாவது காதலித்திருக்கிறாயா?” சாதாரணமாகப் பார்த்தால் ஒரு மேலோட்டமான கேள்விதான். ஆனால் கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் பைத்தியம் பிடிக்க வைக்கும் கேள்வி. எங்கே தொடங்கியது, எங்கு சென்று கொண்டிருக்கிறது, இன்னும் எங்கே போய் முடியும் என்றெல்லாம் அறியமுடியாத கேள்வி இது. மேலும் மேலும் சிந்திதுகொண்டு போனால் 'சே நாம இத்தின்னாள் வரை பண்ணின்டிருன்தது காதலேயில்லை' என்றும் கூடத் தோன்றும். பின்பு காதல் பொய் என்று பேசவைக்கும். பின்பு திரும்ப 'அது காதலாய் இருக்ககூடாதா' என்று திடீரென அடிமனசில் ஓர் ஆசை கிளம்பும். சூடுகண்ட பூனை சற்றே யோசிக்கும். அடுப்பங்கரை கதகதப்பு சுகமாய் மீண்டும் ஓர் ஆனந்த சயனம், பின்பு திரும்பியும் சூடு வாங்கி.. வாங்கி.. சக்கரம் திரும்பவும் சுற்றுகையில்.. உணர்வுகள் படிப்பட...

காவோலைக் கனவுகள்

படம்
முதலாம் சந்திப்பாம் முன்வீதிதானாம்  போவதா விடுவதா  போய்த்தான் பாப்பமே தொடங்கமுன் ஒரு வானிலையறிவிப்பு மேகங்கள் கருக்கட்டியிருக்காம்   முதல் துளிக்கான காத்திருப்பில்  பட்டாம்பூச்சி பறக்குதாம்  ஐடிக்கும் பூச்சிக்கும் என்ன சம்பந்தம்? எங்கடா பிடிச்சீங்க இந்த ரசிகையை  சரியெண்டு குடையை எடுத்துக்கொண்டு போனால் சயந்தனாம் visionaryயாம் கென்யாவில கட்டின கோட்டை எங்கடை இடத்திலையும் சாத்தியம் என்றார் லக்க்ஷியா சேந்தன் என்று ரெண்டு இளம் தளிர்கள்  லட்சியம் கன வெ ன்றேல்லாம் ஏதேதோ பேசினார்கள்   மது வெ ன்றோருவர் வந்தார் ஐன்ஸ்டினையும் காந்தியையும் கிரேசி என்றார் அடுக்குமா சாமி உங்களுக்கு? சர்வேஸ், ஜக், விமலா எண்டு ஒரு பெரிய பட்டாளம்  சச்சினுக்கும் Could Computingக்கும்  என்ன தொடர்போ சதமடித்துவிட்டு அடிக்கடி மேலே பார்ப்பதாலோ    சத்தியமா விளங்கேல்லை எனக்கு கணனித்துறை கலாநிதியைக்கூட  துணைக்கு இழுத்திட்டான்கள்  தங்கக்கட்டியாம் நாள்கூலியாம் சும்மா ரீல்சுத்துறான்கள் உவங்கலேல்லாம...

காதல் முதல் கடவுள் வரை

படம்
இப்ப கொஞ்சநாளா எனது பதிவுகளில் பாடல்களுக்கு கொஞ்சம் விடுமுறை கொடுத்திருந்தேன். JK வேற  " உ ஊ மபதபாமா " வை மூடிடுறதா சொல்லிட்டார். அதால பல பாடல்களை இனி நானாத்தான் கஷ்டப்பட்டு யோசிச்சு கண்டு பிடிக்க வேண்டியிருந்தது. இப்ப வேறை யாழ்ப்பாணம் போய்ட்டு வந்ததிலையிருந்து ஒரே ஒம் சாந்தி பஜனை தான் வீட்லை. அனந்தனுக்கு கடுப்புன்னா ஒரே கடுப்பு. அதிலையும் நம்மட மூன்னு திடசங்கல்ப்பங்களை கேட்டிட்டு தலையிலை அடிச்சிண்டு உட்கார்ந்ததுதான்...  ஹ்ம்ம்.. அதையெல்லாம் பிறகொருநாள் பாப்பம். இப்ப நான் சொல்லவந்தது  இந்தவார வியழமாற்றத்தில்  வந்த  ஒரு பாடல் பற்றி.   இது நாம முன்பொருகாலம் பலதடவை போட்டுத் தேய்ந்த ஒருபாடல் தான். சும்மா சிவனேன்னு பாத்தீங்கன்ன வெளிப்படையா சந்தோசமான பாடல் போல கிடக்கும். ஆனால் பின்னால் ஒரு சோகம் நூலிழையாய் ஓடிட்டிருக்கும். ஒருவித இயலாமை இருக்கும். கெஞ்சல் இருக்கும். அதிலும் "மண்ணில் வீழ்ந்த பின்னும் மன்றாடுவேன்" என்ற வரிக்குப் பிறகு கேட்க்கவே தோன்றாது.   அப்படிப்பட்ட ஒரு பாடலை பொறுமையாய் இருந்...

கொலைவெறி!

படம்
தனுஷ் ' கொலைவெறிடி 'ன்னு சும்மா ஒரு பேச்சுக்கு தன்றை மனுசிட்டை சொல்லப்போய் ( ? ),  அவ அதைப் பிடிச்சு பாட்டாக்கசொல்ல ( சிம்புவைக் கடுப்பேத்தவோ? ),  மூணு பேர் சேர்ந்து சும்மா முசுப்பாத்திக்கு அடிச்ச மெட்டு youtubeல பிக்கப்பாக ( அட நாம Campus Trip போறப்போ அடிப்பாங்களே அது மாதிரித் தானுங்கோ ),  அதை தமிழ் பாட்டுக்கு முதலிடம் என்று BBC முதல் ஒபாமா வரை வாழ்த்துப் பாட ( தமிழ் பாட்டு??? அட இங்கைதான் போய்ண்டே ), இந்தியப் பிரதமர் தன் பங்குக்கு விருந்து வைக்க ( என்னமா அரசியல் பண்ணுறாங்க.. மாமனுக்கு தூது விட்டிருப்பாங்களோ ),  நம்ம பெடியள் சும்மா சிவனே எண்டு பாத்திட்டுப் போகாம தம்பங்குக்கு செம்மொழி பெருமை பேச ( ரெண்டு நாளைக்கு முதல் தான் நம்ம எழுத்தாளரும்  தெரியாத்தனமா இங்கிலிஷ்ல ஒரு ஈமெயில் பண்ணிட்டார்.. விட்டுடுங்க ப்ளீஸ்.. ),  நானும் தூக்கியதை  Facebookல  " தமிழை விற்று பதக்கம் வாங்கும் தமிழா கேள் கொஞ்சம்…   Danush " என்று பகிர ( விதி யாரை விட்டுது? பதக்கமெண்ட உடன புகை கிளம்புதில்லை..? ),  அதப்பாத்திட்டு ந...