12.12.12
"புலிக்கும் பெரும் புயலுக்கும் பிறந்த ஒருவர் பூகம்பத்தை திருமணம் செய்துகொண்டால் அவருக்குப் பிறப்பதை ‘ரஜினிகாந்த்’ எனலாம்" -'நியூயார்க் டைம்ஸ்' Photo Credit: Diraj சூப்பர் ஸ்டாரின் மறக்க முடியாத பிறந்த நாளாக மலருகிறது வரும் 12.12.12. ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை மட்டுமே அமையும் அபூர்வ தேதி இது. உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்கள், இந்தப் பிறந்த நாளை தங்களால் முடிந்த அளவு சிறப்பாகக் கொண்டாட தயாராகி வருகின்றனர். தமிழ் சினிமா உலகமும், ரஜினிக்கு மரியாதை செய்யும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நேரத்தில் இன்னொரு ஆச்சரியமான தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிக்கு இந்த ஆண்டு வருவது 63 வது பிறந்த நாள். அவரது பிறந்த நாள் அமையும் தேதி 12.12.12. இந்த மூன்றையும் கூட்டினால் 36 வருகிறது (12+12+12). ரஜினி சினிமாத் துறைக்குள் காலடி வைத்து 36 ஆண்டுகள் ஆகின்றன! இந்த 36-ஐ திருப்பிப் போட்டால், அவரது வயது 63 வந்துவிடுகிறது. இது ஒரு தன்னிச்சையான ஒற்றுமையாக இருந்தாலும், வேறு எந்த நடிகருக்கும் அல்லது தலைவருக்கும் அமையாத ஒரு அபூர்வ விஷயம் என்பதால், இதனை ...