இடுகைகள்

Singapore லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Y.Ananthan 3xCCIE #28365 (RnS, SP and Sec)

படம்
ஈழத்தின் முதலாவது (எனக்குத் தெரிந்தவரை) மொட்டை.. மன்னிக்கவும் முட்டை (3x) CCIE க்கு இன்னிக்கு முப்பத்து மூன்று வயசாகிறது. இவர் இன்று இந்த நிலைக்கு (உலகின் இத்தகைய மூன்று பட்டத்துடன் இருக்கும் முன்னூற்று சொச்சம் பேருள் ஒருவராய்) வருவதற்கு கடந்த மூன்று ஆண்டு காலமாக  பட்ட பாடுகளையும்  நிறைவேற்றிய சில சாதனைகளையும் முன்னைய இரட்டை CCIE என்ற பதிவிலேயே  குறிப்பிட்டிருந்தேன். பிறந்தநாள் அதுவுமாய் திரும்ப கலாய்த்து மனுசனை டென்ஷன் பண்ண விரும்பவில்லை. அதனால் ஏற்கனவே  படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி பார்த்துவிட்டு மேலே தொடரவும். ஒரு மனுஷன் எம்புட்டுத்தான்யா படிப்பான்? அப்பிடின்னு சலிச்சுக்கிற பேர்வழிகள் எண்டால் கவலைப் படாதீங்க நீங்களும் நம்மில் ஒருவர் தான். அவனவன் சின்கிள் CCIE கே மூச்சு வாங்குது, இவங்கல்லாம் எப்படி டபுள் ட்ரிபில் எண்டு போறாங்கன்னு கொஞ்சம் ஆச்சரியமாய் இருந்துச்சென்னா மேல படியுங்க. இல்லைன்னா.. சாரி Quad-CCIE க்கெல்லாம் நம்ம ப்ளோக்ல என்ன வேலை? சில மாதங்களுக்கு முன்...

போதையும் போதிமரமும்

படம்
நேரம் : இரவு பதினோரு மணி  இடம் : கிளார்க் கீ, சிங்கப்பூர் DJ இன்னும் வரவில்லைப் போலும். இடைவெளியை நிரப்ப Jennifer Lopaz இனது On the Floor பாடல் போய்க்கொண்டிருக்கிறது. உள்ளே ஓரிரண்டு மேஜைகளை பெண்கள் மட்டுமே நிறைத்திருக்கிறார்கள். ரெண்டு ஆண்கள் சற்றுத் தள்ளி கைகளில் house brand viskey உடன் pool விளையாடிக்கொண்டிருந்தனர். அவன் மட்டும் ஒரு மூலையிலிருந்த சோபாவில் உட்கார்ந்துகொண்டு நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.  இந்த இடத்துக்கு அவனொன்றும் புதிதல்ல என்றாலும் என்னமோ இன்று எல்லாமே வித்தியாசமாகவே பட்டது. அதிலும் அந்த இடத்துக்கு சற்றும் சம்பந்தமேயில்லாமல் மெல்லிய புன்னகையுடன் கண்களை அரைவாசி மூடியபடி முன்னாலேயிருந்த உருவத்தைப் பார்க்கப் பார்க்க அவனுக்குளும் ஏதோவோர் பரவசம் பரவுவதுபோல இருந்தது. "Sir, can I fill this?" திடுக்கிட்டு நிமிர்ந்தவன் தனது கையிலிருந்த குவளையில் வெறும் ஐஸ் கட்டிகள் மட்டுமே இருப்பதை அப்போது தான் கவனித்தான். அவனுக்கு எப்போதுமே raw அடிப்பது தான் பிடிக்கும். நண்பர்களின் தொந்தரவு தாங்காமல் தான் ஓரிரண்டு ஐஸ் கட்டியே போடுவது. ஆனால...