இடுகைகள்

காலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குற்றவுணர்வு

படம்
கடந்த காலங்களின் நினைவுகளை  அழித்துவிட்டதாய் அவை தந்த ரணங்களை ஆற்றிவிட்டதாய்  ஆறுதல்கொள்ளும் ஒவ்வொருமுறையும்  ஏதோவோர் புகைப்படம்..  நினைவுகளை கிளறி விடலாம்  ரணங்களை மீண்டும் கிண்டிப் பார்க்கலாம்  ஏன் எதற்கு என்று அறியாத வலிகள்  ஏதோவோர் குற்றவுணர்வு  பாடசாலை விட்டுவரும் நேரங்களில் மிதிவண்டியில் லாவகமாக காவல்துறைக்குப் போக்குக்காட்டி  அருகருகே வரும் சில நிமிடங்களில்  பலவற்றை பேசியிருக்கிறோம்  எதுவும் நினைவிலில்லை  ஒன்றைத் தவிர.. போவது பற்றி விவாதிக்கையில்  உன் விருப்பம் உரைக்காமலே  நீ போய்விட்டாய்   நினைத்ததை முடிக்காமல்  நான் மட்டும் உயிருடன் இருக்கிறேன் நம் புகைப்படத்தைப் பார்த்தபடி  அழக்கூடத் தெம்பில்லாமல்..

அறுபடும் காலம்

படம்
ஓர் வெளியில் ஓடும் எண்ணங்கள் புத்தி பிரிக்கின்றது வேறுவேறாய்.. புரியாதபுதிர்கள் புரிபடத்தொடங்க பல்லாயிரம் புதிர்கள் பின்னிற்கின்றன சங்கிலித்தொடராய் அடிகொடுத்து அடிவாங்கி அலுத்து எதற்கும் அர்த்தமில்லாது இருந்தாலும் எடுபடாது எதிலும் பிடிபடாது எத்தனை பரிமாணங்களில் எண்ணங்களின் பரிணமிப்புக்கள் வியக்க வெறுக்க விரட்ட எதுவுமில்லாது நாகத்தின் கடைசித் தலையும் அறுபடும் காலம் கெஞ்சுதலோ கொஞ்சுதலோவன்றி விடுபடும் உறவுகள் இறுதியாய் வேறென்னவேண்டும்? விரட்டவிரட்ட ஓடிய காலம்போய் கால்தேய காலம் பின்னால் இழுபட்டுவருகையில் இன்னும் எத்தனை தூரமென்று அதற்க்கும் தெரியாது என்னைப்போலவே..!