வியாழன், பிப்ரவரி 21, 2013

Behind the "BLIND LOVE" (குருட்டுக் காதலின் பின்னால் )

நேற்று முழுவதும் ஏனோ தூக்கம் வரவில்லை. ஹிமாலயா கிரியேசன்ஸ் இனது அடுத்த கட்ட நகர்வுக்கான திட்டமிடல்கள் ஓரளவு பூர்த்தியடைந்த நிலையிலும் எதுவோ ஒன்று மனதுக்குள்ளிருந்து குடைந்து கொண்டிருந்தது.

வெற்றியடைந்ததர்க்கான காரணங்களைவிட தோல்வியடந்ததர்க்கான காரணங்களை அறிந்து வைத்திருப்பது மீண்டும் அந்தப் பிழையை விடாமல் அவதானமாயிருக்க உதவிசெய்யும் அல்லவா? அந்த வகையில் ஹிமாலயாவின் முதலாவது சொந்தப் படைப்பான "Blind Love" அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டினைப் பெற்றிருந்தும் ஏனோ நாம் நினைத்தளவுக்கு பெரும்பாலோனோரை இன்னும் சென்றடையவில்லை.


அதற்க்கு முக்கியமாய் நமது Marketing அணுகுமுறை சரியாக இல்லாமலிருக்கலாம். அதற்காக SunTV போல மூச்சுக்கு முந்நூறு தடவை விளம்பரம் போட முடியாது. குறைந்தது FB/YouTubeலயாவது pay பண்ணி promote பண்ணலாம். ஆனால் அவை எல்லாவற்றிட்க்கும் மேல் உண்மையான திறமைக்கு (இருந்தால்) கிடைக்கும் அங்கீகாரத்தினை முதலில் அறிந்துகொள்ள விரும்பினோம். அந்தவகையில் மைந்தன் சிவா, கவிஞர் அஸ்மின் போன்றவர்களின் கருத்துக்கள் தனித்துவமானவை. 


இன்னுமோர் ரசிகர் இவ்வாறு எழுதியிருந்தார்.

" Nobody in the world could believe that this Album was produced, directed, & performed with the native men from Jaffna, a war torn area for more than two decades without electricity, medicines, poor rations when Dhal was treated as a delicious cooking itinerary.

We are really amazed to see an Album like this superior quality produced from Jaffna as We are proud to be a native man from this wonderful land.

The hard works of the team is always commendable and the credit goes to himalaya creations and the parents of these youngsters. "

இபோதெல்லாம் நாம் எழுதிக் கொடுப்பது தான் பல இடங்களில் செய்தியாக்கப்படுகிறது. நடுநிலையான விமர்சனனகளை முன்வைப்பதற்கு பதிவர்களையும் ரசிகர்களையும் தவிர யாரும் முன்வருவதில்லை. அதனால் தான் JK யைக் கூட ஒரு விமர்சனம் எழுதும்படி கேட்டிருந்தேன். ஆனாலும் படலையில் போடுமளவுக்குக் கூட இதன் தரம் பத்தவில்லை போலும். சகோதர மொழிப் பதிவர் ஒருவர் மட்டும் தான் தனது யாழ் பயணம் பற்றிய பதிவில் குறிப்பிட்டிருந்தார். 


இத்தகைய சூழ்நிலையில் தான் தாமரையில் இன்று காலையில் படித்த ஓர் விமர்சனம் மனதை சற்றே நெகிழ வைத்துவிட்டது.

தவிர பல தளங்களிலும் இவ்வாறு போஸ்ட் பண்ணியிருந்தார்கள்.

‎"Blind Love - Addarkaaddil Thaane" is a new Tamil song that has been put together by a talented group based in Jaffna, Sri Lanka.

We love how they have managed to put together a moving visual for the song, even though they had access to limited resources! Watch it here: http://thamarai.com/news-details/450885450/blind-love-adarkaaddil-thaane-music-video.htmlஇவர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

யாழில் இருந்து தரமான படைப்பொன்று வரவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை மட்டுமே பயன்படுத்தி எடுக்கக் கூடியவாறு எப்படி செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்த போது இருட்டில் spotlightsஐ மட்டுமே பயன்படுத்தி எடுக்கும் வகையில் ஷூட்டிங் ஸ்கிரிப்ட்ஐ ஒரே இரவில் தயார் செய்த நிஷாகரன் முதல் கொண்டு, Jesus இனது ரம்யமான மெலடிக்கு ஆடியோ மிக்ஷிங்க், mastering மூலம் மெருகூட்டிய சுகன்யன், மற்றும் சிறு சிறு ஒலி/ஒளி மாற்றங்களைக் கூட துல்லியமாகக் கணித்து இந்த படைப்பு நேர்த்தியுடன் முழுமை பெற முக்கிய காரணிகளில் ஒன்றாகவிருந்த எடிட்டர் துசிகரன், மெட்டுக்கேற்றவாறு கருத்து மாறாமல் பாட்டெழுதுவதிலுள்ள சிரமத்தை எனக்கு உணரவைத்த பாடலாசிரியர் துவாரகன் மற்றும் பல மொழியியல் வல்லுனர்களே கைவிட்ட நிலையில் தனது தொலைதூரப் பயணத்தின் நடுவிலும் ஒருசில மணித்துளிகள் எமக்காய் ஒதுக்கி அழகான முறையில் மொழிபெயர்ப்பைச் செய்துதவிய Sam Hensman, இரவு எட்டு மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை நான்கு மணிக்குள் இந்தப் பாடலின் காட்ச்சியமைப்பை எடுத்து முடிப்பதற்கு கூடநின்று உதவிய பிருந்தாவன், பிரணவன், Justin Jocks, Tony Thomson, James Ushan, Makeup Artist Andrew  மற்றும் நடனவமைப்பில் உதவிய வாகீசன், Himalaya Group of Dance வரை அனைவரினதும் இரவு பகல் பாராத கடுமையான உழைப்பில் வெளிவந்த ஒரு படைப்பிற்கு தகுந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா என்று தெரியவில்லை.இந்த சமயத்தில் நலன்விரும்பி நண்பர் ஒருவர் இந்தப் பாடலை தென்னிந்தியத் திரையுலகின் கவனத்திற்க்கு எடுத்துச் செல்வதற்காய் மேற்க்கொண்ட முயற்ச்சிகள் அனைத்தும் இறுதியில் தோல்வியிலேயே முடிந்தது. உங்கள் குரல் ச்சூ ச்வீட்.. உங்கட கூந்தல் ரொம்ப அழகாயிருக்கு.. என்று தம்மைப் பற்றி ரசிகர்கள் கூறும் இன்னோரன்ன செய்திகளை தேடிப்பிடித்து re-tweet செய்யும், இலங்கைத்தமிழர்கள் எமது கூடப்பிறந்த/பிறக்காத சகோதரர்கள் என்று மூச்சுக்கு ஆயிரம் முறை சொல்பவர்கள், புலம் பெயர்ந்த தமிழர்களை மட்டுமே நம்பி படமெடுப்பவர்கள் என்று யாரினது கண்ணிலும் தப்பித் தவறிக்கூடப் பட்டுவிடவில்லை. தென்னிந்தியப் பின்னணிப் பாடகர் கிரீஸ் மட்டுமே re-tweet பண்ணியிருந்தார். 

இதைச் சொன்னபோது அனந்தன் கேட்டுது "ஏன் அவர்களின் அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்று நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள்?" என்று. உண்மைதான். இன்னும் சொல்லப் போனால் ஓரிரு வருடங்களில் நாம் வெளியிடவிருக்கும் திரைப்படத்திற்கான முன்னோட்டம் தான் இந்தப் பாடல். அதனால் இதற்க்கான வரவேற்ப்பை/விமர்சனங்களைப் பொறுத்தே அடுத்த கட்ட நகர்வினை மேற்கொள்ள முடியும்.

இன்று வரைக்குமே ஈழத்திலிருந்து வரும் படைப்பு என்றால் அது சார்ந்த வலிகளையும் பதிவுசெய்தே ஆகவேண்டும் என்றதொரு எதிர்பார்ப்பு ஒருசாரர் மத்தியில் இன்னும் அழுத்தமாக குடிகொண்டிருக்கு. அதையெல்லாம் தாண்டிப்போய் ஒரு சிறந்த தரமான படைப்பைக் கொடுப்பதென்பது சாதாரணமான காரியமில்லை. 

தவிர, தனது பேருக்காகவும் புகழுக்காகவும் அல்லது அதீத கொள்கைப் பற்றிற்காவும் படமேடுப்போரைத்தவிர வேறு எந்தவொரு தயாரிப்பாளரும் இலாபத்தினை நோக்கமாகக் கொண்டே களத்தில் இறங்குவார்கள். அவர்களுக்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்கிக் காட்டவேண்டியது நமது கடமை என்பது மட்டுமல்ல. இன்று பார்க்குமிடமெல்லாம் கண்களில் கனவுகளுடனும் கைகளில் காமேராவுடனும் வீதிகளில் திரிபவர்களின் எதிர்காலமும் கூட.

அவர்களுக்கு நீங்க ஏதாவது செய்ய விரும்பினால் பணத்தை வெறுமனே வாரியிறைப்பதை விட்டுவிட்டு அவர்களின் படைப்புகளுக்கு தகுந்த அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுங்கள். பிடிக்கவில்லையா? நாக்கைப் பிடுங்கிரமாதிரி நாலு கேள்வி கேளுங்கள். ஒரு ஆரோக்கியமான சினிமா நாளை யாழில் வளர இருப்பதும் / முளையிலேயே கருக்கப் படுவதும் / தவறான முன்னுதாரணங்களை நாளைய தலைமுறை ஏற்று வழிநடக்க இருப்பதும் உங்களது அனைவரினதும் கைகளிலே தான் இருக்கிறது.

புதன், பிப்ரவரி 13, 2013

அடர்காட்டில் தானே

இற்றைக்கு சுமார் ஒரு வருடத்திற்க்கு முன்னர் வந்து சக்கை போடு போட்ட பாடல் கொலைவெறி பாடல். அதற்க்கு யாழிலிருந்து நம்ம பசங்க எதிர்ப்பாட்டு அடிச்சு விட அதுவும் Youtubeல பிச்சிக்கிட்டு போக அப்போ அதுக்கு சில மேதாவிப் பெரியவங்க சொன்னாங்க உங்களுக்கு திறமையிருந்தா நீங்களே சொந்தமா  Compose பண்ணி ஒரு பாட்டு வெளியிடுறது தானே எதுக்காண்டி அதே tuneஐ  copy பண்ணி பதில் பாட்டு கொடுக்கணும்னு..

அதுக்கு நான் சொன்னேன் இதே செந்தமிழ் வரிகளை நாம என்னதான் கடுமையாக உழைச்சு why this kolaiveri original songஐ விடவுமே நன்றாக இசையமைத்து வெளியிட்டாலுமே ஏனெண்டு ஒரு நாதியும் கேட்டிருக்காதெண்டு. காரணம் popularity.. அது தனுஷ்க்கு இருந்தது. ட்வீட் பண்ணிய அமிதாப்புக்கு இருந்தது. அதேபோல் தமிழ் மேல் பற்றுக்கொண்டோருக்கும் அதனை வாழ(?) வைப்போருக்கும் இருந்தது. 

இன்று Himalaya Creations இனது தயாரிப்பில் எமது மண்ணிலிருந்து, அவர்கள் கேட்டது போல் எமது சொந்த Composing  இல் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை மட்டுமே பயன்படுத்தி எமது இளைஞர்களின் கடுமையான உழைப்பில் வெளிவந்திருக்கும் இந்தப் பாடலுக்கு அவர்கள் வைத்திருக்கும் பதிலை நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.


சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது என்று சொல்வார்கள். ஆனால் இருபது தொடக்கம் இருபத்தியைந்து வயதுகளிலேயே இருக்கும் இவர்களின் படைப்புகளில் இருக்கும் technical முதிர்ச்சி கண்டங்களைத் தாண்டி நிற்கிறது. 

This is a love letter to the most beautiful girl in this world.. Babe you meant everything to me..... I love you.....

அடர்காட்டில் தானே தொலைந்தேனே 
உந்தன் கூந்தல் இருட்டிலே 
இன்னும் காணவில்லையே 
I'm lost in the deep forest,
in the darkness of your hair,
and not yet found

நேற்று நான் இருந்தேன் இன்று இறந்தேன் 
உன் வார்த்தைகள் மெல்ல என்னைத் தீண்டுதே 
I was alive yesterday, and lifeless today
Your words touches me tenderly

கண்களோரம் காதல் பேசும் (2)
உன் பெண்மை என்னைத் தூண்டுதே 
Love speaks along the side of your eyes 
Your feminity urges me

கண்கள் உள்ளே விழுந்து 
நெஞ்சின் உள்ளே நுளைந்து 
மெல்ல மெல்ல என்னைக் கொன்று 
போகும் தென்றல் நீயே 
You are a tender breeze,
that falls in my eyes
Enters through my heart, 
and kills me slowly and softly

உன்னோடு நானும் போகையில் 
நாணம் போகையில் 
நாளும் போதல வாடினேன் 
When I walk with you, shyness goes away
Days are not enough, I'm fading..

நட்சத்திரம் அள்ளித்தான் 
நிலவைத் துண்டாய் வெட்டித்தான் 
உந்தன் கூந்தல் சூட்டுவேன் 
I will adore your plaits,
by grabbing the stars from the sky
And slice the moon up in the high

தேகம் எல்லாம் பஞ்சாகும் 
நீயும் நானும் ஒன்றாகும் 
மஞ்சத்தில் தேன் சிந்தும் 
கொஞ்சல்கள்தான் மிஞ்சும் 
Bodies become soft like cotton, 
When you and I become one.
Bed disseminates with honey drops,
And Left with sweet kisses

ஏதோ உந்தன் நினைவுகள் தினம் 
ஏதோ சின்னக் கனவுகள் 
இரவாக மெல்ல இனிமை சேர 
அந்த வானில் பூப்பூக்குதே 
Everyday, I think of you and my dreams are you
When the sun sets, the sweetness emerges
And Flowers bloom in the sky

கண்கள் முன்னே நீயும் வர 
நெஞ்சம் உந்தன் பின்னால் செல்ல 
ஐயையையோ காதல் பூக்குதே 
When you appear, my heart follows you
Oh God! Love blooms

உள்ளே வைத்த காதல் இன்று 
வெளியே வந்து உன்னைத் தேட 
பூமிப்பந்து என்னை சுற்றுதே 
The untold love kept in my heart revealed this day
and searches you
The world revolves around me

If Love is Blind, I'll Find My Way With You


Music : Jesus Yuvaraaj (https://www.facebook.com/jesus.yuvaraaj)
Audio Mixing Engineering & Mastering Engineering : S. Suganyan (https://www.facebook.com/sukanyan.sun...)

Lyrics : R. Thuwaragan (https://www.facebook.com/r.thuwaragan)
Singer, Actor & Director : R. Nishaharan (https://www.facebook.com/nishaharan.r...)
Cinematography & Editing : SR. Thusikaran
Choreography : ST. Vakeesan
நிற்க, இத்தருணத்தில் ஊக்கத்தினையும் பாராட்டினையும் வழங்கிய அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திங்கள், பிப்ரவரி 04, 2013

பொப்பிசைச் சக்கரவர்த்தி AE.மனோகரன்

ஒரு பாடல் நாற்பத்தைந்து வருட காலமாக ஒரு மனிதரை புகழின் உச்சியில் வைத்திருக்கிறது. இலங்கையில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகில் கூட இவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது என்றே சொல்லலாம். அவர் வேறு யாருமல்ல.. சுராங்கனி புகழ் பொப்பிசைச் சக்கரவர்த்தி AE.மனோகரன் அவர்களே...

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹிமாலயா கிரியேசன்ஸ் இனால் பொறுப்பேற்க்கப்பட்டு புனரமைக்கப்பட்டு வந்த திருமறைக் கலாமன்றத்தின் ஒளி, ஒலிக் கலைக்கூடத்தினை திறந்து வைப்பதற்காக இவரை அணுகியபோது சற்றும் தாமதிக்காமல் உடனேயே தனது சம்மதத்தினைத் தெரிவித்ததோடு மட்டுமல்லாது லிப்ட் இல்லாத அந்தக் கட்டடத்தின் இரண்டாவது மாடிக்கு தனது இயலாமையைக்கூட பொருட்படுத்தாது தனியனாக ஏறி வந்து தனது குரலில் ஓர் பாடலையும் பாடி திறந்து வைத்தார்.

நேற்று மாலை AE மனோகரன் அவர்கள், வீரகேசரி துணை எடிட்டர் அஷ்வின், ST.JOHNS கல்லூரியின் அதிபர் REV பாதர் NJ ஞான பொன்ராஜா, கார்கில்ஸ் மாவட்ட பொறுப்பதிகாரி, பழைய மாணவர் சங்கத் தலைவர் மற்றும் சில முக்கிய நபர்களுடன் கலந்துரையாடும் ஓர் அரிய சந்தர்ப்பம் கிடைத்தது. அன்று காலையில் தான் தனது வழமையான, வாரம் ஒருமுறை செய்யப்படும் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சையை முடித்துவிட்டு சற்றுமுன்புவரை மறுநாள் நடக்கவிருக்கும் பழைய மாணவர் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையையும் முடித்துவிட்டு சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார். 

அத்தகைய நிலையில் கூட தன்னைத் தேடி வந்தவர்களை சற்றேனும் முகம் கோணாமல் வரவேற்று புன்சிரிப்புடன் சுமார் மூன்று மணி நேரம் தொடர்ந்து அளவளாவினார். "அடுத்து வரவிருப்பது ஹிமாலயாவுடன் இணைந்து செய்யவிருக்கும் ஓர் படைப்பு என்று போடு" என்பதிலிருந்து அவரது ஒவ்வோர் பதிலும்/கருத்தும் நறுக்குத் தெறித்தாற்போல் இருந்தது. தவிர அங்கிருந்தவர்கள் அனைவரினதும் பேச்சுகளில் ஓர் எளிமை குடிகொண்டிருந்தது. 

சற்று நேரத்திற்கெல்லாம் அவரின் சொந்தங்கள் பலரும் வந்துவிடவே நாம் விடைபெற்று வெளியேறும் சமயத்தில் ST.JOHNS கல்லூரியின் அதிபர் தனது மனதில் தோன்றிய ஓர் சிறு யோசனையை நம்மிடம் கேட்டுக்கொண்டதர்க்கிணங்க மிகவும் குறுகிய நேரத்தில் செய்யப்பட்டு வெளிவரும் ஹிமாலயாவின் மற்றுமோர் அரிய படைப்பு இன்றைய நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட இருக்கிறது..
ஒருவரை ஒருவர் தூக்கிவிடும் மனப்பாங்கு, திறமையை அங்கீகரித்தல், பழமையைக் கொண்டாடும் அதே சமயம் புதுமையை வரவேற்றல், மன்னித்தல் மறத்தல் என்று பல அரிய பண்புகள் ஒன்று சேர நெகிழ வைத்த அந்த தருணத்தில் எனது மனதினில் தோன்றிய அந்த வரி...

Johnians always play the Game..!


Recent Posts

Labels

விமர்சனம் அனுபவம் Himalaya Creations ஈழம் "அவள்" ஒரு தொடர் கதை கவிதைகள் Jaffna இசை பாரதி கண்ணம்மா Himalaya சிறுகதை Ananthan சிங்கப்பூர் YIT yarl IT Hub JK உங்கள் பார்வைக்கு இளையராஜா campus harikanan printers கொலைவெறி NEP Ramavarma Steve Jobs bk srilanka இயற்கை கவிதை ஜெயமோகன் தேவதாசி யோகநாதன் அனந்தன் 2013 7ஆம் அறிவு Birthday CCIE Chundikkuli Girls College Dhanush Osho Singapore calendar harikanan kamal maayan calendar nishaharan sridevi suganyan thusikaran vijay அறிமுகம் அவள் ஒரு தொடர் கதை காலம் ஜனனி தமிழ் இனி தில்லானா நட்பு நிலவு நீ தானே என் பொன்வசந்தம் புகைப்படம் யுகபாரதி 2012 48HFP 48HFP Jaffna 50 shades of grey AE Manoharan AR Rahman Anu Art of Dying Australia Avon BMICH Barathiyar Blind Love Changing Seasons Chicago David Cameron Deepawali Film HDB Happy New year Homebrew Computer Club India’s Daughter JD JPL Jaffna University Jeyachandran Kaayam Karate Kaun Banega Crorepati Kung Fu Leena Manimekalai MGR Mariah Carey Mayan Mr. Harith Kariapper Naan Varuven National Geographic Nov 27 OGA PT Rajesh vaithiya Rajini Ricky Martin Rosy Senanayake Saraswathi Ranganthan Shaolin Spanish Eyes St. Johns College Sudha raguram The Big Bang Trailer Uduvil Girls college Vigil for Sivayoganathan Vidhiya Vigil for Vidhiya Zen are you in it bk gowri chundikkuli cup of life hsenid incredible india jam just a minute kumki songs lift logo love makeup march 8 meditation moorthy digital color lab moorthy guest house network panchangam poet thamarai pokkiri post office ragunaathaiyar samantha silicon valley simbu sitharth song soorya soul step up stretching room effect swan system thirisha thuppakki veena virtusa vishwaroopam wanted why this kolaiveri women's day wso2 yarl zulustyle அக்க்ஷய திருதியை அங்கவர்ணனை அம்பி குரூப் அற்புதத்தில் அற்புதம் இறுதிப்போர் இலங்கை முஸ்லிம் எம்.ஜி.ஆர் எஸ். ராமகிருஷ்ணன் ஏசுநாதர் கடிதம் கலிங்கத்துப்பரணி சகோதரத்துவம் சிவகுமார் சிவபுராணம் சீமான் சுவாதித்திருநாள் செங்கடல் ஜெயச்சந்திரன் தங்க மீன்கள் தனுஷ் தமிழ் தலை முடி திரிசங்கு சொர்க்கம் திருவாசகம் தீபாவளி நத்தார் நந்தகுமார் நந்திக்கடல் நல்லூர் நாக. இளங்கோவன் பண்டிகை பழைய மாணவர் சங்கம் பாரதி பிடித்தபத்து புன்னகை மன்னன் புரட்சித் தலைவர் மாணிக்கவாசகர் முள்ளிவாய்க்கால் மே 2009 மேதினம் வெண்முரசு வைரமுத்து
 
Copyright © ரசிகை. Design By New Blogger Templates
Support IE 7, On Sales, Best Design