முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

பொப்பிசைச் சக்கரவர்த்தி AE.மனோகரன்

ஒரு பாடல் நாற்பத்தைந்து வருட காலமாக ஒரு மனிதரை புகழின் உச்சியில் வைத்திருக்கிறது. இலங்கையில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகில் கூட இவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது என்றே சொல்லலாம். அவர் வேறு யாருமல்ல.. சுராங்கனி புகழ் பொப்பிசைச் சக்கரவர்த்தி AE.மனோகரன் அவர்களே...

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹிமாலயா கிரியேசன்ஸ் இனால் பொறுப்பேற்க்கப்பட்டு புனரமைக்கப்பட்டு வந்த திருமறைக் கலாமன்றத்தின் ஒளி, ஒலிக் கலைக்கூடத்தினை திறந்து வைப்பதற்காக இவரை அணுகியபோது சற்றும் தாமதிக்காமல் உடனேயே தனது சம்மதத்தினைத் தெரிவித்ததோடு மட்டுமல்லாது லிப்ட் இல்லாத அந்தக் கட்டடத்தின் இரண்டாவது மாடிக்கு தனது இயலாமையைக்கூட பொருட்படுத்தாது தனியனாக ஏறி வந்து தனது குரலில் ஓர் பாடலையும் பாடி திறந்து வைத்தார்.

நேற்று மாலை AE மனோகரன் அவர்கள், வீரகேசரி துணை எடிட்டர் அஷ்வின், ST.JOHNS கல்லூரியின் அதிபர் REV பாதர் NJ ஞான பொன்ராஜா, கார்கில்ஸ் மாவட்ட பொறுப்பதிகாரி, பழைய மாணவர் சங்கத் தலைவர் மற்றும் சில முக்கிய நபர்களுடன் கலந்துரையாடும் ஓர் அரிய சந்தர்ப்பம் கிடைத்தது. அன்று காலையில் தான் தனது வழமையான, வாரம் ஒருமுறை செய்யப்படும் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சையை முடித்துவிட்டு சற்றுமுன்புவரை மறுநாள் நடக்கவிருக்கும் பழைய மாணவர் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையையும் முடித்துவிட்டு சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார். 

அத்தகைய நிலையில் கூட தன்னைத் தேடி வந்தவர்களை சற்றேனும் முகம் கோணாமல் வரவேற்று புன்சிரிப்புடன் சுமார் மூன்று மணி நேரம் தொடர்ந்து அளவளாவினார். "அடுத்து வரவிருப்பது ஹிமாலயாவுடன் இணைந்து செய்யவிருக்கும் ஓர் படைப்பு என்று போடு" என்பதிலிருந்து அவரது ஒவ்வோர் பதிலும்/கருத்தும் நறுக்குத் தெறித்தாற்போல் இருந்தது. தவிர அங்கிருந்தவர்கள் அனைவரினதும் பேச்சுகளில் ஓர் எளிமை குடிகொண்டிருந்தது. 

சற்று நேரத்திற்கெல்லாம் அவரின் சொந்தங்கள் பலரும் வந்துவிடவே நாம் விடைபெற்று வெளியேறும் சமயத்தில் ST.JOHNS கல்லூரியின் அதிபர் தனது மனதில் தோன்றிய ஓர் சிறு யோசனையை நம்மிடம் கேட்டுக்கொண்டதர்க்கிணங்க மிகவும் குறுகிய நேரத்தில் செய்யப்பட்டு வெளிவரும் ஹிமாலயாவின் மற்றுமோர் அரிய படைப்பு இன்றைய நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட இருக்கிறது..
ஒருவரை ஒருவர் தூக்கிவிடும் மனப்பாங்கு, திறமையை அங்கீகரித்தல், பழமையைக் கொண்டாடும் அதே சமயம் புதுமையை வரவேற்றல், மன்னித்தல் மறத்தல் என்று பல அரிய பண்புகள் ஒன்று சேர நெகிழ வைத்த அந்த தருணத்தில் எனது மனதினில் தோன்றிய அந்த வரி...

Johnians always play the Game..!


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்