கன்னியும் கண்ணீர்ப் பூக்களும்
இதுவரை பாடல்களை மட்டுமே "வெட்டிவேலை" என்ற தொகுப்பின் கீழ் கிறுக்கின்டிருந்த நான், ஒரு கவிதைத் தொகுப்புக்கு விமர்சனம் எழுதுவதென்பது இதுவே முதல் தடவை. ஏன் உனக்கு இந்த தேவையில்லாத வேலை என்று புத்தி ஒருபுறம் எச்சரித்துக் கொண்டிருப்பதையும் மீறி இதை எழுதுகிறேன் என்றால் அதற்க்கு ஒருகாரணம் இருக்கிறது. அவள் தான் "சோமாலியத் தாய்" வெளியில் இவ்வளவு காற்றிருக்க எண்டா மகனே எனது முலையில் வாய்வைத்துக் காற்றைக் குடிக்கிறாய் ஏனடா அழுகிறாய் சத்தியமாய்த் தெரியாது எனக்கும் தாய்ப்பாலின் சுவை என்னவென்று ஏனென்றால் உன் பாட்டியின் முலைகளுடன் பாலுக்காய்ப் போராடித் தோற்றுப் போனவள் நான். சென்ற மாதம் ஹிமலாயா கிரியேசன்ஸ் ஒழுங்கு செய்திருந்த " ignite " நிகழ்வில் வளர்ந்துவரும் இளம் பாடலாசிரியர், கவிஞன் என அறிமுகப்படுத்தப்பட்ட உமாகரன் மேடையேறியபோது சில முகங்களில் தெரிந்த ஏளனம் "சோமாலியத் தாய்" என்ற இந்தக் கவிதையை அவன் வாசித்து முடித்ததும் ஆச்சரியத்தினால் வாய் பிளந்து நின்றது. ஒவ்வோர் வார்த்தைகளும் வாளாய் வந்து இதயத்தில் பாய்ச்சிச் சென்...