கணக்கு வாத்தியார்
"இப்ப எதுக்கு சிரிச்சனீர்?" "ஒன்றுமில்லை சார்" "காரணமில்லாமல் சிரிக்க உமக்கு என்ன விசரே?" ........... "எனக்கிப்ப காரணம் தெரியோணும். அதுவரைக்கும் கிளாஸ் நடக்காது." ........... "நான் இத்தினை தரம் கேக்கிறன். ஒரு மாஸ்டர் எண்டு மரியாதையில்லாமல்.. எழும்பும் எழும்பும்.. எழும்பி வெளிய போய் நில்லும்." அவர் இப்போது கோபத்தின் உச்சியிலிருந்தார். ........... "இந்தப் பிள்ளை வெளிய போகாமல் நான் கிளாஸ் எடுக்க மாட்டன்." அதுவரை பேசாதிருந்தவள், கொப்பியை அடித்து மூடிவிட்டு எழுந்தாள். முன்னிருந்த நண்பியை மீண்டுமொருமுறை பார்த்தாள். அவள் உட்பட அனைவருமே தலையைக் குனிந்தபடி கொப்பியில் இல்லாத ஒரு கணக்குக்கு விடை தேடிக்கொண்டிருந்தனர். கோபத்தில் இரத்தம் கொதித்தது. கொப்பியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள், நிற்காமல் வேகமாக தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினாள். வகுப்பின் முதல் நாள் ஞாபகங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் நினைவுக்கு வந்தன. உயர் தரத்தில் என்ன படிப்பது என்று வீட்டில் அம்மாவும் அப்பாவும் வாக்குவாதப் பட்டுக்கொண்டிருக்க அவள்...