முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

நூறுகோடி வானவில்

"அய்யய்யோ ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே நூறுகோடி வானவில் மாறி மாறி சேருதே " 

சித்தார்த் மேடையில் தோன்றியதுமே நீ.பொ.வ வில் கௌதம்மேனன், தான் பாடவேண்டும் என்பதற்காய் ஒரு அழகான பாட்டை சொதப்பியது தான் ஞாபகத்துக்கு வந்தது. நல்லகாலமாய் சித்தார்தின் குரல்/சுருதி அந்தளவுக்கு மோசமாயில்லை. ஆனாலும் ஜீவா அளவுக்கு stage performanceல இம்ப்ரெஸ் பண்ணலைன்னு தான் சொல்லணும்.

இருந்தாலும் அந்தப்பொண்ணு மட்டும் ரொம்பவே வெட்கப்பட்டுது.. 
"ஏதோ ஒரு ஆசை, வா வா கதை பேச" (சமந்தா மைண்ட் வாய்ஸ்ஐ கேட்ச் பண்ணிட்டமில்ல?)

அப்புறமென்ன கட் பண்ணி ஓபன் பண்ணினா.. பச்சைப் பசேலென ஒருகாட்டின் நடுவே சமந்தாவும் சித்தார்த்தும் டூயட் பாடுறாங்க..


சமந்தா: "கண்கள் இருப்பது உன்னை ரசித்திட என்று சொல்ல பிறந்தேன்"
சித்தார்த் :"கைகள் இருப்பது தொட்டு அணைத்திட அள்ளிக் கொள்ளத் துணிந்தேன்"

ஆமா.. இது சோலோ சாங் தானே female வாய்ஸ் எப்பிடின்னு கேட்டிங்கன்னா.. 1. அதானே முதல்லையே கனவுக் காட்சின்னு சொல்லியாச்சு.. 2. ஆனானப்பட்ட (?) சித்தார்த்தே பாடும் போது நம்ம சமந்தாப் பொண்ணு பாடமாட்டுதா என்ன?

அப்புறமா காடெண்டு சொன்னனில்ல.. அப்பால அருவி நீர்த்தேக்கம் எல்லாம் இருக்கும்லே? அங்கதான் நம்ம சித்தார்த் தம்பி சமந்தா பொண்ண பார்த்திண்டே போய் தவறி விழுந்திட்டாராம்..

சித்தார்த் : "உன்னை முதல் முறை கண்ட நெடியில் தண்ணிக்குள்ளே விழுந்தேன்"

தண்ணில விழுந்தா சீக்கிரமே எழும்பிடனும். இல்லன்னா மனுசங்களா இருந்தா ஜன்னி பிடிக்கும். அதுவே சக்கரைக் கட்டின்னா..?
"அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல மெல்ல மெல்ல கரைந்தேன்"
அப்புறமா இந்த இடம் தான் கொஞ்சம் இடிக்குது.. சக்கரை தண்ணிக்கு (கட்டி கூட இல்லை) எப்போ உயிர் வந்திச்சு? ஒருவேளை உயிர் வாறத்துக்குத் தான் 
"கரை சேர நீயும் கையில் ஏந்த வா உயிர் காதலோடு நானும் நீந்தவா" அப்பிடின்னு கேக்கிறான்களோ?
எப்பிடியோ அவனுங்க சேர்ந்திட்டாங்க எண்டு மட்டும் புரிஞ்சுது. சீக்கிரமே கண்ணாலமும் பண்ணிக்கப் போறாங்களாம்.
"எதர்க்காக கால்கள் கேள்வி கேட்கிறேன் துணை சேர்ந்து போக தேதி பார்க்கிறேன்"
"நெற்றியில் குங்குமம் சூட இள நெஞ்சினில் இன்பமும் கூட மெதுவா... வரவா... தரவா..."
இப்படியாக பல முன்னணி பதிவர்களின் (கவனியுங்க 'முன்னணி'.. நம்மதில்லை) வைத்தெரிச்சலையும் கொட்டிக்கொண்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக (அட வாரத்தில ஏன் ஏழு நாளெண்டு இப்பதானே விளங்கிச்சு) வளர்ந்த இவர்களது காதல் எங்க ஜெர்க்காகி நிக்கும்கிறீங்க..?
"கண்களில் கண்டது பாதி வரும் கற்பனை தந்தது மீதி"
இதான்.. நம்மாளுங்க காதல்ன்னு வந்ததுமே கண்மண் தெரியாம கற்பனை பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. அங்க நடக்கிரதென்னமோ பத்து வீதம் தான் மீதி முழுக்க இவங்க பண்ணிக்கிட்ட கற்பனை. அவங்க பண்ணுறதெல்லாமே என்னமோ தனக்குத் தானெண்டு / தாங்க பண்ணுறதெல்லாமே ஏதோ அவங்களுக்குத் தானெண்டு ஒரு குட்டி வட்டத்துக்குள்ளை சிக்கிடுவாங்க. அப்புறமா தொண்ணூறு நாள் போதை தெளிஞ்சதும் வெளியுலகம் கொஞ்சம் கொஞ்சமாய் கண்ணுக்குத் தெரியத் தொடங்கும். வானவில்லைப் போலவே கற்பனைகளும் மெது மெதுவாகக் கரையத் தொடங்க ஆரம்பிக்கையில் நிஜங்கள் உச்சி மண்டையில் அடித்தால் போல் உறைக்கும். 

தொடுதே... சுடுதே... மனதே... என்று என்னனமோ பிதற்றத் தொடங்குவார்கள். ஒருவேளை கற்பனைகளும் நூறுகோடி வானவில் போல விடாம மாறி மாறிவந்தா தப்பிச்சுக்கலாம். ஆனா நிஜத்தில் ரெண்டு வானவில் தொடர்ந்து சேர்ந்தாப்போல வாறதே அபூர்வம்.

"ஏனுங்க? அன்னிக்கு பாடின பாட்டை இப்பஒருக்கா எனக்காண்டி பாடுறீகளா?"
"எது?"
"கும்கில இருந்து.."
"வரி மறந்திடுச்சி. பிறகு பார்க்கலாம்."
"இப்பல்லாம் உனக்கு என்கூட டைம் ஸ்பென்ட் பன்னுரதுக்கே பிடிக்கலைலே.. இப்பிடித்தான் அன்னிக்கு கூட.."

 அப்புறமென்ன..?

"அய்யய்யயோ ஆரம்பமே நெஞ்சுக்குள்ளே பூகம்பமே" தான்.

ஆமா இப்பிடியே போனால் கடைசில என்னதான் நடக்கும்? ஒன்று சிம்புவ மாதிரி மனசாந்தி தேடி (வெளிய) எங்காவது சுற்றத் தொடங்குவாங்க. இல்லாட்டி நயன்தாரா மாதிரி சிம்பு இல்லைன்னா என்ன  பிரபுதேவா எண்டு போய்டுவாங்க. ஆமா.. இப்ப பிரபுதேவா கூட இல்லையாமே ஆர்யா எண்டொரு கேள்வி. சரி சரி.. நமக்கெதுக்கு வம்பு?




முக்கியகுறிப்பு: இதில் வரும் பெயர்கள் யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பனவல்ல. தவிர, இது பதிவரின் சொந்த அனுபவமுமல்ல என்பதையும் ரொம்பவே தெளிவாக முதலிலேயே சாரி.. கடைசில சொல்லிடறேன்.



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்