தமிழ் இனி.. 2
எனது தமிழ் இனி.. பதிவுக்கு பலர் பாராட்டி கருத்து தெரிவித்திருந்தாலும் சில காரசாரமான பதில்களும் கிடைக்கப் பெற்றிருந்தன. பொதுவாகவே தனிப்பட்ட பாராட்டுதல்களை இங்கே தனித்தனியே போட்டு நன்றி சொல்வது எனது வழக்கமல்ல. அதனால் அவர்கள் அனைவருக்கும் பொதுவாகவே நன்றியைக் கூறிக்கொண்டு, மற்றைய கருத்துக்களுக்குச் செல்வோம். முதலாவது கருத்து : கட்டுரையின் அடிப்படையையே புரிந்துகொள்ளாமல் ஜெயமோகன் மீது எதிர்வினைகள். ஜெயமோகன் தமிழை அழிக்கும் நோக்குடனோ சிதைக்கும் நோக்குடனோ எதையும் கூறவில்லை. அவர் சொன்னது இதுதான் “ஒரே எழுத்துருவாக ஆக்கினால் அடுத்த தலைமுறை அதை எளிதில் வாசிக்கும்” என்று மட்டும்தான். ஆங்கில எழுத்துருவில் தமிழை வாசிக்கும் வாசகர்கள் இருக்கிறார்கள் என்றோ, இப்போதே நூல்களை அப்படி வெளியிடமுடியும் என்றோ அவர் சொல்லவில்லை. ஜெயமோகன் அவருக்கு கிடைத்த எதிர்வினைக்கு சொன்ன விளக்கம் ஒரு பகுதி //“என்னைப்பொறுத்தவரை இது ஒரு சாத்தியக்கூறு பற்றிய யோசனை மட்டுமே. கண்ணெதிரே தமிழ்க்கல்வி அனேகமாக வழக்கொழிந்துவருவதைக் காண்கிறேன். சமீபத்தில் பல பொறியியல்கல்லூரிகளுக்குச் செல்லும்போது ...