இடுகைகள்

நட்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதல்(கள்)தின்ற நட்பு

படம்
"குரல்வளையில் சிக்கிய காற்று  சங்கீதமாவாதா காதல்..?" என்று நான் நாள் முழுக்க மண்டையைப் போட்டுடைத்து இரண்டு வரி ஒப்பேற்றிக்கொண்டிருந்த காலத்தில் ஓர் நாட்குறிப்பேடு முழுவதுமே நிரம்பிய ஆழமான கவிதைகளுடன் என்னை ஆச்சரியப்படுத்திய ஓர் நட்பு. வெள்ளவத்தை கடற்கரையில் ஓர்நாள்.. உன் கண்கள் என் தோழியைப் பார்க்கையில் என் கண்கள் திரும்பின கல்லறையை நோக்கி என்றுரைத்தாய். பாதி புரிந்தது மீதி புரியவில்லை. அன்றே முதல் விலகல் ஆரம்பம். ஆங்கிலம் என்பது அந்நிய மொழி அதைப் பேசுவதே பாவம் என்ற மனநிலையிலிருந்து வெளிவர முடியாமல் திணறிய என்னை ஆங்கிலம் பேச ஊக்கப்படுத்தி மாதமிருமுறை பிரிட்டிஷ் கவுன்சில் கூட்டிச் சென்ற ஓர் நட்பு. நடந்து வரும் வழியில் ஓர்நாள் titanic கப்பலின் மேல் கைவிரித்து நின்ற காதலர்களுக்காய் நாமிருவரும் சண்டையிட்டுக்கொண்டோம். உன்மேல் ஒருவித சந்தேகம் எழுகையில் அது இரண்டாவது விலகல். ஆண்கள் என்றாலே வேற்றுக்கிரக வாசிகள் போல் பார்த்த என்னை அவர்களுடன் சகஜமாகவும் அதே சமயம் அவர்களுக்கு வேறுவித எண்ணங்கள் வராமலும் / வரம்பு மீறும்படி த...

"அவள்" ஒரு தொடர் கதை ... : நண்பன்

படம்
பாகம் ஏழு : நண்பன்  "ரிங்..ரிங்.. ரிங்..ரிங்.. ரிங்..ரிங்.." அந்த ரூமில்தான் போன் அடித்துக்கொண்டிருந்தது. அவளோ கேளாததுபோல் யன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.  செத்துவிடலாம் போலிருந்தது. ஆனால் யாருக்கும் பிரச்சினை குடுக்காமல் சாகணும். அதுக்குத்தானே இங்கு வந்திருக்கிறாள். ஆனால் எப்படிச்சாவது எண்டு தான் தெரியவில்லை. தற்கொலை செய்யலாம் எண்டாலும், ஆசைகள் நிறைவேறாமல் செத்தால் ஆவியாய் அங்கயே அலைவார்கள் எண்டு எங்கையோ படிச்சதால அதுக்கும் விருப்பமில்லை. வாழவும் கூடாது ஆனால் தற்கொலையும் செய்யக் கூடாதெண்டால் எப்படி? யாராவது கொலை செய்தால் தான் உண்டு. ஆனால் அதுவும் பிறகு ஆவியாய் வந்து வஞ்சம் தீர்க்கப் புறப்பட்டு விட்டால் என்ன செய்வது? குழப்பமாய் இருந்தது அவளுக்கு. சுப்பிரமணி, அது அவனது பட்டப் பெயர். அவர்களது டீச்சர் தான் வைத்தது. காரணம் மறந்துவிட்டது. அவனை  அவளுக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். படிப்பில் கெட்டிக்காரன். வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறி பலர் போற்றும் ஒரு பெரிய புள்ளியாய் வந்துவிட வேண்டும் என்ற வெறி அவனிடம் சிறுவயதிலிருந்தே இருந்த...