இடுகைகள்

CCIE லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Y.Ananthan 3xCCIE #28365 (RnS, SP and Sec)

படம்
ஈழத்தின் முதலாவது (எனக்குத் தெரிந்தவரை) மொட்டை.. மன்னிக்கவும் முட்டை (3x) CCIE க்கு இன்னிக்கு முப்பத்து மூன்று வயசாகிறது. இவர் இன்று இந்த நிலைக்கு (உலகின் இத்தகைய மூன்று பட்டத்துடன் இருக்கும் முன்னூற்று சொச்சம் பேருள் ஒருவராய்) வருவதற்கு கடந்த மூன்று ஆண்டு காலமாக  பட்ட பாடுகளையும்  நிறைவேற்றிய சில சாதனைகளையும் முன்னைய இரட்டை CCIE என்ற பதிவிலேயே  குறிப்பிட்டிருந்தேன். பிறந்தநாள் அதுவுமாய் திரும்ப கலாய்த்து மனுசனை டென்ஷன் பண்ண விரும்பவில்லை. அதனால் ஏற்கனவே  படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி பார்த்துவிட்டு மேலே தொடரவும். ஒரு மனுஷன் எம்புட்டுத்தான்யா படிப்பான்? அப்பிடின்னு சலிச்சுக்கிற பேர்வழிகள் எண்டால் கவலைப் படாதீங்க நீங்களும் நம்மில் ஒருவர் தான். அவனவன் சின்கிள் CCIE கே மூச்சு வாங்குது, இவங்கல்லாம் எப்படி டபுள் ட்ரிபில் எண்டு போறாங்கன்னு கொஞ்சம் ஆச்சரியமாய் இருந்துச்சென்னா மேல படியுங்க. இல்லைன்னா.. சாரி Quad-CCIE க்கெல்லாம் நம்ம ப்ளோக்ல என்ன வேலை? சில மாதங்களுக்கு முன்...

யோகநாதன் அனந்தன்

படம்
இரண்டாவது பதிவு :  Y.Ananthan 3xCCIE #28365 (RnS, SP and Sec) இன்று(01.06.2006) திருமண நாள். யாருக்கு? அனந்தன்.. அனந்தன்.. எண்டு (கவனியுங்க ஒருத்தர் தான்) வரியப்புலத்தைச் சேர்ந்த திரு திருமதி யோகநாதன் அவர்களின் செல்வப் புதல்வனுக்கும் ஏழாலையைச் சேர்ந்த திரு திருமதி நித்தியானந்தம் அவர்களின் ஏக புத்திரிக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு (நிசமாத் தானுங்கோ, நம்பாட்டிப் போங்கோ) வைகாசித் திங்கள் சுப முகூர்த்ததில கலியாணம் நடந்தது. அவங்க சீரும் சிறப்புமா பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்தாங்கன்னு Social Networks (Facebook, Youtube, etc..) சொல்லுது.. நிற்க, இப்ப எதுக்கு இந்த சுயபுராணம் எண்டு கேட்டிங்கன்னா.. சமீபத்திலை "திரு. யோகநாதன் அனந்தன் அவர்கள் சிஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட கணணி வலை வல்லுநர்(இரட்டை) ஆனதை முன்னிட்டு நண்பர்கள் சார்பில் பாராட்டு விழா" ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் வாழ்த்துரை வாசிப்பதற்கு எழுத்தாளர்(?) என்ற முறையில என்னைக் இழுத்து விட்டிடாங்க. அதில வேறை நாம எல்லாரைப் பத்தியும் எழுதுறம் ஆனா நம்ம ஆத்துக்காறரைப் பத்தி எது...