ஹிமாலயா கிரியேசன்ஸ் 5
"பன்னிரெண்டோட முடிஞ்சிடுச்சா..? பதின்மூணு வருதில்லை..?" என்று ஒருவழியா மாயன்களிடமே கடன்வாங்கி ஒரு ஸ்டோரிபோர்ட் கொண்டுபோனா.. "இது ஓகே . ஆனா எனக்கு பஞ்சாங்க காலண்டருக்கு நிறைய importance குடுக்கணும். எனவே தனியாக வேறையா அதுக்கு இன்னொரு விளம்பரம் செய்யுங்க" என்றார். மெய்கண்டான் காலண்டர் எண்டு கேள்விப் பட்டிருகிறோம், ஆனால் யாரு எழுதுறா.. யாரு அடிக்கிறா என்று தெரியாததால் மெய்கண்டான வைத்து google பண்ணிப் பார்த்ததில் மெய்கண்டான் ஒரு சிவனடியார் எண்டு வந்துது. எனவே அவர் எழுதியிருக்க 99% வாய்ப்பில்லை. அப்பத்தான் சுஜன் அண்ணா சொன்னார் "கரிகணன் போன்று தான் மெய்கண்டான், அஷ்டலக்ஷ்மி போன்றவையும் பஞ்சாங்கத்தை வைத்துதான் அடிக்கினம். ஆனால் நாங்கள் யாழ்ப்பாணத்திலே புகழ்பெற்ற இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த காலண்டேரை பிரிண்ட் பண்ணி வெளியிடுறம் என்பது மக்களுக்கு தெளிவாக போய் சேரவேண்டும்" என்று. இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கம் என்றவுடன் தான் பொறிதட்டியது. சிறுவயதுகளில் வாக்கிய பஞ்சங்கத்தின் முன்னால் அவரது பெயர் ...