ஹிமாலயா கிரியேசன்ஸ் 4

by - 11/19/2012 12:11:00 பிற்பகல்


வருடக்கடைசி நெருங்கிக்கொண்டிருக்கின்றது. FBயில் பலர் இப்போதே countdown தொடங்கிவிட்டார்கள். மாயன் காலண்டர் வேற உலகம் அழியப்போகுது என்று பெரும் பீதியக்கிளப்பிக்கொண்டிருக்கும் சமயம் பார்த்து ஒரு போன்கால்.. "தம்பி.. 2013 பிறக்கப்போகுது, எனக்கு எங்கடை கரிகணன் காலண்டரை வைத்து ஒரு விளம்பரம் செய்ய வேணும்". 

ஆறடி உயரமும் முகமேதெரியாதளவுக்கு தாடியுமாக சட்சாத் அவர் வேறுயாருமல்ல, முதன் முதலாய் நமது குறிக்கோள்களைப் புரிந்து பாராட்டி தூக்கிவிட்ட கரிகணன் பிரிண்டர்ஸ் முதலாளி திரு.ராஜ்குமார் அவர்கள் தான். என்னா ஒரு நம்பிக்கை.. தன்னம்பிக்கை..  

நாளை நடக்கப் போகும் ஒன்றிற்காய் இன்று நமது முயற்ச்சியை கைவிட்டுவிட்டு சும்மாயிருப்பது சுத்த மடைத்தனம் அல்லவா? அந்தவகையில் 2013 பிறக்குதோ இல்லையோ அவர்களுடைய வேலை பெரிய பெரிய கம்பனிகளுக்கு ஆர்டர் எடுத்து கலண்டர், டயரி அடிப்பது. எமதுவேலை விளம்பரம் செய்வது.. யாரோ சொன்னார்கள் உலகம் அழியப்போகுதுதாம் என்றுவிட்டு வெறுமனே இருந்துவிடமுடியாது தானே? அதால.. 

"பன்னிரெண்டோட முடிஞ்சிடுச்சா..? பதின்மூணு வருதில்லை..?"
உங்க வாடிக்கையாளருக்கு என்ன குடுக்கப்போறீங்க..?விவாஹாஸ் விளம்பரம் Teenagersஐ பெரிதும் கவர்ந்திருந்தது. அடுத்து வந்த அருள் குளோபல் express விளம்பரம் Professionals மத்தியில் ஏக பாராட்டைப் பெற்றுத்தந்தது. எமது முதலாவது ஆங்கில விளம்பரமான Zulu Style எமக்கு இலங்கையைத் தாண்டி வெளிநாட்டில் மட்டுமல்லாது Singapore மீடியாக்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தைப் பெற்றுத்தந்தது.

எனவே புதிதாய் இதில் என்ன கொண்டுவருவது என்று யோசித்தால் குழந்தைகளையும் கவரும் விதமாக சற்றே வினோதமான முறையில் பரீட்ச்சித்துப் பார்க்கலாமே என்று தோன்றியது.

நிற்க, குழந்தைகளுக்கும் காலண்டருக்கும் என்ன சம்பந்தமிருக்க முடியும்? பெரிதாகவோன்றுமில்லை. அநேகாமாக தினமும் காலண்டர் கிழிப்பதிலிருந்து ரோல் கலேண்டர்ஸ் விதவிதமாய் வாங்கிச் சேர்ப்பது மற்றும் தந்தையின் மனேஜ்மென்ட் டைரீஸ்இல் கிறுக்கித் தள்ளுவது வரை எல்லாம் நம்ம வீட்டுக் குழந்தைகள் தான் இல்லையா?


ஹிமாலய கிரியேசன்ஸின் ஐந்தாவது விளம்பரம் நாளை வெளிவரும்.You May Also Like

1 comments