யோ. அனந்தன் : பாகம் மூன்று : அம்பி குரூப்
"டேய்.. இங்க எழும்பி வாடா.." "என்ன சார்..?" சடார் படார் எண்டு கை, கால், தோள், தலை எண்டு கண்மண் தெரியாமல் அடிவிழுகிறது. "இவருக்கு.. இப்ப.. ஏன்.. அடிவிழுது.. எண்டால்..." பூசையை நிப்பாட்டாது.. "நீ என்ன பெரிய ரௌடியாடா..? " "இல்லை சார்.. நீங்க தான் அப்பிடி சொல்லுறியள்." "என்னையே எதிர்த்து கதைக்கிறியா..?" குருவானவரின் பூசை இப்போது அதி தீவிரமடைகிறது.. "நீ இப்ப என்ன செய்யிறாய் எண்டால் உண்ட அப்பாவையும் அம்மாவையும் சைக்கிள் ரிக்சாவில பின்னால ஏத்திக்கொண்டு 'சுன்னாகத்திலையே நான் தான் பெரிய ரவுடி' எண்டு கத்திக்கொண்டு போ.. " அடி இன்னும் நிற்கவில்லை இருந்தும், அந்த இக்கட்டான சூழலிலும் மிகவும் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு "நீங்க பெரிய ரவுடி எண்டு சொல்றத்துக்கு ஏன் சார் என்ர அம்மா அப்பாவை ஏத்திக்கொண்டு போகணும்?" ஒரு கணம் திகைத்த குருவானவர், உடனே சுதாகரித்துக்கொண்டு நாலாவது சாம பூசையை தொடங்குமுன் நம்மாள் எஸ்கேப். இது நடந்தது கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்பு யாழ் இந்துக் கல்லூரி, ஆண்டு ஆறு வகு...