வியாழன், மார்ச் 29, 2012

பதினாறு வயதினிலே

தலைப்பை பாத்தவுடனே பதினாறுவயசு ஸ்ரிதேவிதானே உங்க கண்முன்னாடி வெள்ளைப்  பாவாடை தாவணில "செந்தூரப் பூவே செந்தூரப் பூவே" எண்டு பாடிக்கொண்டு ஓடிவருவா இல்லையா? ஆனா நாம கொஞ்சம் புதுசா யோசிச்சு திரிஷாவ கொண்டுவந்து போட்டிருக்கிறம். அது எப்படின்னு பாக்கிறத்துக்கு முதல்லை... நாமெல்லாம் பதினாறு வயதிலை என்னத்தை கிழிச்சிட்டிருந்தம் எண்டு கொஞ்சம் rewind பண்ணிப் பாப்பமா..?

இற்றைக்கு சுமார் பதினைந்து வருடங்களின் முன்பு ஒரு நாள்.. வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நேரம்.. அப்பெல்லாம் வாரம் ஒருமுறை உடல் பயிற்சி பாடம் இருக்கும். பக்கத்திலை இருக்கிற சர்ச் முன்றலில் (இப்போ Laughs இருக்கிற இடம் என்று நினைக்கிறேன்) தான் செய்வோம். அப்போதான் தாவணிக் கனவுகள் மாதிரி நம்ம "sweet sixteen" பற்றி பேச்சு வந்தது. நாம அப்பெல்லாம் பெரிதாய் கதைக்க மாட்டோம் (இப்பவும் தான். நம்புங்க ப்ளீஸ்..) ஆனாலும் அன்னிக்குத்தான் புதிதாய் இந்த சொற்பதத்தைக் கேள்விப்பட்டதால் கொஞ்சம் ஊன்றி அவர்களின் உரையாடல்களை கவனிக்கத் தொடங்கினேன்.

ஒவ்வொருவரும் இளமை, கனவுகள், பசங்க அப்பிடி இப்படி எண்டு அந்த வயசுக்கே உரிய மாதிரி கதைத்துக் கொண்டிருந்த போது திடீரென்று பேச்சு காதல் பற்றி வந்தது. அப்பெல்லாம் நமக்கு காதல் எண்ட சொல்லைக் கேட்டாலே கை கால் எல்லாம் பதறும். ஏதோ ஒரு கெட்ட வார்த்தை என்ற ரீதியில் தான்  எனக்கு "MR.LOVE" அறிமுகமாகியிருந்தார். அதனால் டீச்சர் கேட்டால் எங்கை அடிவிழுமோ என்ற ஒருவித பயத்துடனேயே திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் அவர்களோ மிகவும் சகஜமாகவே யாரார் எவரைக் காதலிக்கினம் என்னேனவேல்லாம் பரிமாரியிருக்கினம் என்பது போன்ற தகவல்களை வெகு தாராளமாகவே பரிமாரிக்கொண்டிருந்தனர். எனக்கு ஒரு பக்கம் ஆச்சரியம், மறுபக்கம் நாமும் காதலித்துப் பார்க்கலாமோ என்ற ஒரு ஆசையும் வந்துவிட்டிருந்தது. ஆனா எங்கை போய் யாரைப் பிடிப்பது? கொஞ்சம் அழகாக இருந்தாலே நல்லாப் பழகிட்டு பிறகு ஏமாத்திட்டுப் போய்டுவாங்க என்று வேறை கேள்விப் பட்டதால எதுக்கு வம்பு என்று அப்போது கொஞ்சம் ஒத்திப் போட்டு விட்டேன். என்னிக்காவது ஒரு நாள் அந்தக் கலியுகக் கண்ணன் தன் ராதையைத் தேடி வரமாட்டானா என்ன?

சரி சரி.. இப்ப நம்ம விசயத்துக்கு வருவம். காதலுக்கு வயசில்லை எண்டு சொல்லுவினம். ஆனா  பருவ வயதில் வரும் காதல் "அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்" என்பதுபோல் பெரும்பாலும் கண்களிலேயே தொடங்கி இருக்கும். நேரம் போவதே தெரியாமல் மணிக்கணக்காக வெறுமனே பார்வைகளை  மட்டுமே பரிமாறிக் கொண்டிருப்பார்கள். யாரேனும் கண்டுபிடித்து விடுவார்களோ என்ற சுரணை கூட இருக்காது. தங்கள் காதல் மட்டும் தான் உலகத்திலையே ஏதோ மகா புனிதமான விஷயம் என்ற நினைப்பு இருக்கும். அப்பிடிப்பட்ட ஒரு இனிமையான வயதில் அப்பிடிப்பட்ட புனிதமான ஒரு காதலை நம்ம ஹீரோ இங்கை பண்ணியிருக்கிறாராம். அதாலை அவரு நம்ம heroineக்கு தனது காதல் பரிசா ஒரு இசை ஆல்பம் தயாரித்து வெளியிட்டார். ஆனா பிறகு என்ன நினைத்தாரோ தூக்கி ஒரு மூலையில போட்டிட்டார். இத்தினி வருசத்திலை அதை தூசிதட்டி எடுத்து youtubeல போடுறத்துக்கு சிங்கப்பூர்ல இருந்து ஒருத்தி வர வேண்டியதாப் போச்சுது.

நமக்குத்தான் இசையப் பத்தி ஒண்டும் தெரியாதே.. ஆனா அதிலை இருக்கிற பீலிங்க்ஸ் மட்டும் புரியும். நாம என்ன பாஹவதரா இசையையும் மெட்டையும் பத்தி அலசி ஆராயிறத்துக்கு? வெறும் ரசிகை மட்டும் தானே.. அதால எடுத்துப் போட்டுப் பாத்தன். யாரார் என்னென்ன சொன்னவையோ இல்லை சொல்லினமோ எனக்கு பிடிச்சிருந்துது. அதிலும் "காதல் சொல்ல ஓடிவந்தேன்" என்ற பாடலைக் கேட்டபோது ஏனோ விண்ணைத் தாண்டி வருவாயாவிலிருந்து "மன்னிப்பாயா" என்ற பாடலின் காட்சியமைப்பு தான் கண் முன்னே வந்து நின்றது. அதால சும்மா ஒரு சின்ன கலக்கு கலக்கிட்டம். யாரும் சிம்புவுக்கு சொல்லிடாதேங்கப்பா. கொலைவெறி போட்டு தனுஷ்க்கு டென்ஷன் குடுத்த மாதிரி அந்தாளுக்கு வேறை BP ஏறிடப் போகுது...

"உன்னை சுமக்க எந்தன் நெஞ்சில், பதினாறு வருடமாய்த் தவமிருந்தேன்""நீயும் காதல் சொன்ன பின்பு மௌனம் தான் கொல்வதேனோ"

என்னதான் இருந்தாலும் காதலிக்கோ/காதலுக்கோ பாட்டெழுதி மெட்டுப்போட்டு ஒரு ஆல்பம் செய்து ஸ்கூல் teachersஐ வைத்தே வெளியிடும் அளவுக்கு பதினாறு வயதிலை யாருக்காச்சும் தில் இருந்திருக்குமா என்ன? சத்தியமா எனக்கிருக்கலைப்பா..


சனி, மார்ச் 10, 2012

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி

உங்கள் பார்வைக்கு 

பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.

- மாணிக்கவாசகர், பிடித்தபத்து


How to meditate when you haven't got time?

just-a-minute is all it takes to bring ourselves back to our natural state of inner peace and well-being. Learn to relax, refocus and re-energise in just one minute with 'just-a-minute' meditations. It is about becoming a powerful positive force in your own life. Give yourself just-a-minute to experience it now.

"Be relaxed,
Be present ... Be powerful,
Be inspired ... Be your true self"

- by JAM (just-a-minute)
வியாழன், மார்ச் 08, 2012

காவோலைக் கனவுகள்


முன்வீதிதானாம் 
போவதா விடுவதா 
போய்த்தான் பாப்பமே

தொடங்கமுன் ஒரு வானிலையறிவிப்பு
மேகங்கள் கருக்கட்டியிருக்காம்  
முதல் துளிக்கான காத்திருப்பில் 
பட்டாம்பூச்சி பறக்குதாம் 
ஐடிக்கும் பூச்சிக்கும் என்ன சம்பந்தம்?
எங்கடா பிடிச்சீங்க இந்த ரசிகையை 


சரியெண்டு குடையை எடுத்துக்கொண்டு போனால்
சயந்தனாம் visionaryயாம்
கென்யாவில கட்டின கோட்டை
எங்கடை இடத்திலையும் சாத்தியம் என்றார்


லக்க்ஷியா சேந்தன் என்று ரெண்டு இளம் தளிர்கள் 
லட்சியம் கனவென்றேல்லாம் ஏதேதோ பேசினார்கள்  
மதுவென்றோருவர் வந்தார்
ஐன்ஸ்டினையும் காந்தியையும் கிரேசி என்றார்
அடுக்குமா சாமி உங்களுக்கு?

சர்வேஸ், ஜக், விமலா எண்டு ஒரு பெரிய பட்டாளம் 
சச்சினுக்கும் Could Computingக்கும் என்ன தொடர்போ
சதமடித்துவிட்டு அடிக்கடி மேலே பார்ப்பதாலோ   
சத்தியமா விளங்கேல்லை எனக்கு
கணனித்துறை கலாநிதியைக்கூட 
துணைக்கு இழுத்திட்டான்கள் 

தங்கக்கட்டியாம் நாள்கூலியாம்
சும்மா ரீல்சுத்துறான்கள் உவங்கலேல்லாம்
நானெல்லாம் நாப்பதுவருசமா உழைச்சும் 
ஒரு தங்கக்கட்டி வாங்கேலாது பாருங்கோ 

கடைசில எனக்கு என்ன புரிஞ்சுதோ இல்லையோ 
தம்பிமார் எதோ பெருசா பிளான் போடுறாங்கள் 
என்ர பெடியனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு 
தம்பியவை... நான் கண்ணை மூடுறதுக்குள்ளை 
அந்த 'சிலிக்கன் வாலி'யப் பாத்திடுவேனில்லை?

(கருத்துதவி : JK )


Sounds interesting?? come and Join our Community at https://www.facebook.com/groups/264218806991707/

Videos available at www.youtube.com/yarlithub
See you on our next meet up soon.

சனி, மார்ச் 03, 2012

அமாவாசை இரவுகளில்அரைவட்ட மதில் வெளியே நீர்நிலை
அல்லி துடிக்கின்றது நிலவொளி காண
சிலநூறு மின்மினி வெளிச்சத்தில்
நிலவும்தான் மங்கிற்றோ இன்று

மேக மூட்டமுமில்லை
பூமி நிழலுமில்லை
எங்கே சென்று ஒளிந்தது
இந்த நிலவு ?

அந்திவானச்சிவப்புக் காய்ந்து
நாளிகை பல கழிந்துவிட்டதென்று
அதனிடம் சென்று உரைப்பவர் எவரோ
இன்று மட்டும் ஏன் மறந்தாரோ

மலர்ந்த கடன் நீரினில் அழுகிடவோயிலை
முழுமதிக்குத் தவமிருக்கவோவன்றி
பாரினில் பணிவிடை செய்யவோவிலை
வெறுமனே கனவுகள் காணவோ

நாளை பூஞ்சோலையில் சென்று மலர
இன்று பாலைவனத்தில் நின்று தவம்
அங்கும் வரவிருப்பது இந்த நிலவுதானே
சென்று மலர்வதும் இதே அல்லிதானே

பௌர்ணமியின் வர்ணனைகள்
தேனாயினிக்கின்றன - இருந்தும்
அமாவசை இரவுகள் அங்கு வராதென்று
அடித்துச்சொல்ல முடியாதே

விண்ணில் எறிந்த அபிராமியின் காதணிகூட
மறுநாளே காணாது போயிற்றே
மாதமொரு தோடுதர அவளுக்கும்தான்
எத்தனை செவியிருக்கவேண்டும்

யுகங்கள் கடந்த நினைவுகளில்
யுகமாய்ச் செல்கின்றன நிமிடங்கள்
அறிவை அடைந்தபின்பும்
அவாவுறுவது அழகாகுமோ

கிழக்கில் சூரியன் கதிர்பரப்ப
இன்னும் சில நிமிடங்களே..
வருமா அந்த நிலவு மீண்டும்
அல்லியினுயிர்காக்க?"Before you my life was like a moonless night. Very dark, but there were stars--points of light and reason...And then you shot across my sky like a meteor. Suddenly everything was on fire; there was brilliancy, there was beauty. When you were gone, when the meteor had fallen over the horizon, everything went black. Nothing had changed, but my eyes were blinded by the light. I couldn't see the stars anymore. And there was no more reason for anything." - Twilight 

வெள்ளி, மார்ச் 02, 2012

காதல் முதல் கடவுள் வரை


இப்ப கொஞ்சநாளா எனது பதிவுகளில் பாடல்களுக்கு கொஞ்சம் விடுமுறை கொடுத்திருந்தேன். JK வேற  "உ ஊ மபதபாமா" வை மூடிடுறதா சொல்லிட்டார். அதால பல பாடல்களை இனி நானாத்தான் கஷ்டப்பட்டு யோசிச்சு கண்டு பிடிக்க வேண்டியிருந்தது. இப்ப வேறை யாழ்ப்பாணம் போய்ட்டு வந்ததிலையிருந்து ஒரே ஒம் சாந்தி பஜனை தான் வீட்லை. அனந்தனுக்கு கடுப்புன்னா ஒரே கடுப்பு. அதிலையும் நம்மட மூன்னு திடசங்கல்ப்பங்களை கேட்டிட்டு தலையிலை அடிச்சிண்டு உட்கார்ந்ததுதான்...  ஹ்ம்ம்.. அதையெல்லாம் பிறகொருநாள் பாப்பம். இப்ப நான் சொல்லவந்தது இந்தவார வியழமாற்றத்தில் வந்த  ஒரு பாடல் பற்றி.  

இது நாம முன்பொருகாலம் பலதடவை போட்டுத் தேய்ந்த ஒருபாடல் தான். சும்மா சிவனேன்னு பாத்தீங்கன்ன வெளிப்படையா சந்தோசமான பாடல் போல கிடக்கும். ஆனால் பின்னால் ஒரு சோகம் நூலிழையாய் ஓடிட்டிருக்கும். ஒருவித இயலாமை இருக்கும். கெஞ்சல் இருக்கும். அதிலும் "மண்ணில் வீழ்ந்த பின்னும் மன்றாடுவேன்" என்ற வரிக்குப் பிறகு கேட்க்கவே தோன்றாது.  

அப்படிப்பட்ட ஒரு பாடலை பொறுமையாய் இருந்து ரசிக்க வேணுமென்றால் நிச்சயமாய் நிறைய தில் இருக்க வேணும். (ஆனா இப்பெல்லாம் ஏனோ பழைய பீலிங்க்ஸ் மிஸ்ஸிங். அதால முழுசா ரசிச்சு பாக்க முடிஞ்சுது)

பாடல் வரிகள் மட்டுமின்றி அதுக்கேற்றால் போல் காட்ச்சியமைப்பும் கொடுக்கப்பட்டு, பார்க்கும் போதே இதயத்தே ஏனோ பிசைந்து செல்லும். ஒரு பெண் தானாய் வலிய வந்து தனது காதலைச் சொல்லும் போது அவளுக்குள் இருக்கும் ஒரு பயம் கலந்த தயக்கமா இல்லை தன் மீதேயான கோபம் கலந்த வெறுப்பா? அது சிம்ரனின் முகத்தில் மட்டுமல்ல காட்ச்சியமைப்புக்கு கொடுக்கப்பட்ட shadeஇலும் காட்டப்பட்டிருக்கும். (ரொம்பவே அலசிட்டனோ?)

காட்சியமைப்பின் இரண்டாவது பகுதியை ஒரு கோட்டை பின்னணியில் எடுத்திருக்கிறார்கள். அதைப் பார்க்கையில் ஏனோ எனக்கு யாழ் கோட்டையின் ஞாபகம் வந்து தொலைத்தது. சொன்ன நம்ப மாட்டீங்க இத்தனை நாளில்லை எத்தினையோ கோட்டை கொத்தளமெல்லாம் பாத்திருக்கிறன், ஆனா பக்கத்திலையே இருந்த நம்ம யாழ்ப்பாண கோட்டையை மட்டும் பாக்க முடியேல்லை. கடைசியா தொன்நூறிலை பிடிச்சப்புறம் இடிக்க முதல் பாக்கவேணுமெண்டு ஒருமுறை அப்பாவோடை டவுனுக்கு போனப்போ கேட்டன். அவங்கள் கண்ணி புதைச்சு வைச்சிருப்பங்கலேண்டு சொல்லி சைக்கிளை திருப்பிட்டார். இத்தினை வருசத்துக்கப்புறம் மோட்டார்சைக்கிளில் போனேன். புதிதாய் புனரமைத்து இருக்கிறார்களாம். முன்பு எப்படி இருந்ததெண்டு தெரியாது. ஆனால் புதிதாய்ப் பார்ப்பதாலோ என்னமோ ரொம்பவே அழகாயிருந்தது. ரசித்தேன். அந்திவானின் அழகை.. தூரத்து நிலவுகளை, நட்சத்திரங்களை, அகழியை, அருகில் சிதறிக்கிடந்த... ஆட்டுப் புளுக்கையைக் கூட. (ஆட்லறித் துண்டுகள் எண்டு சொல்லுவனேண்டுதானே நினைசீங்க?? நாம ரொம்பவே உஷாராக்கும்!)

ரசனைகள் பலவகைப்படும். பொதுவாகவே காதலிக்கும்போது ஆண்கள் எல்லோருமே பெண்கள் சொல்லுவது எல்லாவற்றையுமே தாமும் ரசிப்பதாய் சொல்லுவர். ஆனால் அடிப்படையில் அவர்கள் ரசிப்பது அவளை அல்லது அவள் உடம்பை மட்டும் தான். இவையெல்லாம் தாண்டி பலவிதமான ரசனைகளை, பற்றைக்குளிருந்து பறக்கும் மின்மினிகளை ஒரு குழந்தை காட்டி ரசித்து மகிழ்வதுபோல் பகிர்ந்து கொள்வதற்கென்று ஒரு நட்பு கிடைப்பதென்பது வெகு அரிது. பொதுவாகவே எனது நட்புவட்டத்தில் பார்த்தால் காதல் தொடங்கி கடவுள் வரை.. ஒன்றில் உண்டென்பர், அல்லது இல்லைஎன்பர். ஆனால் இரண்டுக்குமிடையேயான ஒருபுள்ளியில் இருபுறமுமிருந்து கூடவிவாதிக்க ஒரு ஜீவனை அனுப்பியது கூட அந்தக் கடவுள்தானா? நம்பாமலிருக்க முடியவில்லை. சுஜாதா சொல்லியதுபோல் "இருந்தால் நன்றாகத் தானிருக்கும்." 

என்னைப் பொருத்தவரைக்கும் நம்மை மீறிய ஒரு சக்தி உண்டென்று ஒத்துக்கொண்டாலும் எனக்குத் தெரிந்து சத்தியம் தான் கடவுள். அதற்காக காந்தியின் பக்தை என்றெல்லாம் சொல்லிடாதீங்க. ஆனா நாம எவ்வளவுக்கெவ்வளவு வாழ்க்கையில் உண்மையை கடைப்பிடிக்கிரமோ, அப்போது ஒரு சில இடத்தில் நாம் தவறுவது போலிருந்தால் கூட எம்மையறியாமலே அதுவே உண்மை என்றாகிவிடும். ஆனால் அதை வரமாக்குவதும் சாபமாகுவதும் எமது கையில் தானிருக்கு. 

நிற்க, பொதுவாகவே பலர் உண்மை சொல்வதற்கு தயங்குவது ஏனெனில் அது மனங்களை காயப்படுத்தும். அவர்கள் பற்றி மற்றவர் மனங்களிளிருக்கும் போலி விம்பத்தைத் தகர்த்துவிடும். யாருமே தாங்கள் இப்படித்தானென்று ஏற்றுக்கொள்ளவிரும்புவதில்லை. அவர்கள் நினைப்பது போல் போலி முகமூடிகளைக் காவுவதிலிருக்கும் வலியை விட உண்மை ஒன்றும் அதிகமாய் வலி தராது என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. இன்னும் சொல்லப்போனால் சத்தியம் ஆறுதல் தரும், உண்மையான அன்பை உணரவைக்கும். திருந்துவதற்கு கடைசியாய் ஒரு ஜீவனை அனுப்பிவைக்கும் கடவுளாகவிருக்கும். சரி சரி.. ரொம்ப தத்துவம் பேசுறமோ?

அதிசயமாய் சில நேரங்களில் அப்பட்டமான உண்மை பலரை ரசிக்கவைக்கும். அது வார்த்தைகளை மட்டுமல்ல செயல்களையெல்லாம் தாண்டி இணைத்துச் செல்லும். தனுஷின் கொலைவெறி பாடல் பிரபலமானதற்கு அதுவுமொரு காரணம் தான். அந்தவகையில் யாழிலிருந்து செம்மொழிக்கு அடுத்தபடியாக இவர்களும்  தம்பங்குக்கு குதறியிருக்கின்றனர். (கொஞ்சம் ஓவர் தான்..)

Recent Posts

Labels

விமர்சனம் அனுபவம் Himalaya Creations ஈழம் "அவள்" ஒரு தொடர் கதை கவிதைகள் Jaffna இசை பாரதி கண்ணம்மா Himalaya சிறுகதை Ananthan சிங்கப்பூர் YIT yarl IT Hub JK உங்கள் பார்வைக்கு இளையராஜா campus harikanan printers கொலைவெறி NEP Ramavarma Steve Jobs bk srilanka இயற்கை கவிதை ஜெயமோகன் தேவதாசி யோகநாதன் அனந்தன் 2013 7ஆம் அறிவு Birthday CCIE Chundikkuli Girls College Dhanush Osho Singapore calendar harikanan kamal maayan calendar nishaharan sridevi suganyan thusikaran vijay அறிமுகம் அவள் ஒரு தொடர் கதை காலம் ஜனனி தமிழ் இனி தில்லானா நட்பு நிலவு நீ தானே என் பொன்வசந்தம் புகைப்படம் யுகபாரதி 2012 48HFP 48HFP Jaffna 50 shades of grey AE Manoharan AR Rahman Anu Art of Dying Australia Avon BMICH Barathiyar Blind Love Changing Seasons Chicago David Cameron Deepawali Film HDB Happy New year Homebrew Computer Club India’s Daughter JD JPL Jaffna University Jeyachandran Kaayam Karate Kaun Banega Crorepati Kung Fu Leena Manimekalai MGR Mariah Carey Mayan Mr. Harith Kariapper Naan Varuven National Geographic Nov 27 OGA PT Rajesh vaithiya Rajini Ricky Martin Rosy Senanayake Saraswathi Ranganthan Shaolin Spanish Eyes St. Johns College Sudha raguram The Big Bang Trailer Uduvil Girls college Vigil for Sivayoganathan Vidhiya Vigil for Vidhiya Zen are you in it bk gowri chundikkuli cup of life hsenid incredible india jam just a minute kumki songs lift logo love makeup march 8 meditation moorthy digital color lab moorthy guest house network panchangam poet thamarai pokkiri post office ragunaathaiyar samantha silicon valley simbu sitharth song soorya soul step up stretching room effect swan system thirisha thuppakki veena virtusa vishwaroopam wanted why this kolaiveri women's day wso2 yarl zulustyle அக்க்ஷய திருதியை அங்கவர்ணனை அம்பி குரூப் அற்புதத்தில் அற்புதம் இறுதிப்போர் இலங்கை முஸ்லிம் எம்.ஜி.ஆர் எஸ். ராமகிருஷ்ணன் ஏசுநாதர் கடிதம் கலிங்கத்துப்பரணி சகோதரத்துவம் சிவகுமார் சிவபுராணம் சீமான் சுவாதித்திருநாள் செங்கடல் ஜெயச்சந்திரன் தங்க மீன்கள் தனுஷ் தமிழ் தலை முடி திரிசங்கு சொர்க்கம் திருவாசகம் தீபாவளி நத்தார் நந்தகுமார் நந்திக்கடல் நல்லூர் நாக. இளங்கோவன் பண்டிகை பழைய மாணவர் சங்கம் பாரதி பிடித்தபத்து புன்னகை மன்னன் புரட்சித் தலைவர் மாணிக்கவாசகர் முள்ளிவாய்க்கால் மே 2009 மேதினம் வெண்முரசு வைரமுத்து
 
Copyright © ரசிகை. Design By New Blogger Templates
Support IE 7, On Sales, Best Design