காதல் முதல் கடவுள் வரை
இப்ப கொஞ்சநாளா எனது பதிவுகளில் பாடல்களுக்கு கொஞ்சம் விடுமுறை கொடுத்திருந்தேன். JK வேற "உ ஊ மபதபாமா" வை மூடிடுறதா சொல்லிட்டார். அதால பல பாடல்களை இனி நானாத்தான் கஷ்டப்பட்டு யோசிச்சு கண்டு பிடிக்க வேண்டியிருந்தது. இப்ப வேறை யாழ்ப்பாணம் போய்ட்டு வந்ததிலையிருந்து ஒரே ஒம் சாந்தி பஜனை தான் வீட்லை. அனந்தனுக்கு கடுப்புன்னா ஒரே கடுப்பு. அதிலையும் நம்மட மூன்னு திடசங்கல்ப்பங்களை கேட்டிட்டு தலையிலை அடிச்சிண்டு உட்கார்ந்ததுதான்... ஹ்ம்ம்.. அதையெல்லாம் பிறகொருநாள் பாப்பம். இப்ப நான் சொல்லவந்தது இந்தவார வியழமாற்றத்தில் வந்த ஒரு பாடல் பற்றி.
இது நாம முன்பொருகாலம் பலதடவை போட்டுத் தேய்ந்த ஒருபாடல் தான். சும்மா சிவனேன்னு பாத்தீங்கன்ன வெளிப்படையா சந்தோசமான பாடல் போல கிடக்கும். ஆனால் பின்னால் ஒரு சோகம் நூலிழையாய் ஓடிட்டிருக்கும். ஒருவித இயலாமை இருக்கும். கெஞ்சல் இருக்கும். அதிலும் "மண்ணில் வீழ்ந்த பின்னும் மன்றாடுவேன்" என்ற வரிக்குப் பிறகு கேட்க்கவே தோன்றாது.
அப்படிப்பட்ட ஒரு பாடலை பொறுமையாய் இருந்து ரசிக்க வேணுமென்றால் நிச்சயமாய் நிறைய தில் இருக்க வேணும். (ஆனா இப்பெல்லாம் ஏனோ பழைய பீலிங்க்ஸ் மிஸ்ஸிங். அதால முழுசா ரசிச்சு பாக்க முடிஞ்சுது)
பாடல் வரிகள் மட்டுமின்றி அதுக்கேற்றால் போல் காட்ச்சியமைப்பும் கொடுக்கப்பட்டு, பார்க்கும் போதே இதயத்தே ஏனோ பிசைந்து செல்லும். ஒரு பெண் தானாய் வலிய வந்து தனது காதலைச் சொல்லும் போது அவளுக்குள் இருக்கும் ஒரு பயம் கலந்த தயக்கமா இல்லை தன் மீதேயான கோபம் கலந்த வெறுப்பா? அது சிம்ரனின் முகத்தில் மட்டுமல்ல காட்ச்சியமைப்புக்கு கொடுக்கப்பட்ட shadeஇலும் காட்டப்பட்டிருக்கும். (ரொம்பவே அலசிட்டனோ?)
காட்சியமைப்பின் இரண்டாவது பகுதியை ஒரு கோட்டை பின்னணியில் எடுத்திருக்கிறார்கள். அதைப் பார்க்கையில் ஏனோ எனக்கு யாழ் கோட்டையின் ஞாபகம் வந்து தொலைத்தது. சொன்ன நம்ப மாட்டீங்க இத்தனை நாளில்லை எத்தினையோ கோட்டை கொத்தளமெல்லாம் பாத்திருக்கிறன், ஆனா பக்கத்திலையே இருந்த நம்ம யாழ்ப்பாண கோட்டையை மட்டும் பாக்க முடியேல்லை. கடைசியா தொன்நூறிலை பிடிச்சப்புறம் இடிக்க முதல் பாக்கவேணுமெண்டு ஒருமுறை அப்பாவோடை டவுனுக்கு போனப்போ கேட்டன். அவங்கள் கண்ணி புதைச்சு வைச்சிருப்பங்கலேண்டு சொல்லி சைக்கிளை திருப்பிட்டார். இத்தினை வருசத்துக்கப்புறம் மோட்டார்சைக்கிளில் போனேன். புதிதாய் புனரமைத்து இருக்கிறார்களாம். முன்பு எப்படி இருந்ததெண்டு தெரியாது. ஆனால் புதிதாய்ப் பார்ப்பதாலோ என்னமோ ரொம்பவே அழகாயிருந்தது. ரசித்தேன். அந்திவானின் அழகை.. தூரத்து நிலவுகளை, நட்சத்திரங்களை, அகழியை, அருகில் சிதறிக்கிடந்த... ஆட்டுப் புளுக்கையைக் கூட. (ஆட்லறித் துண்டுகள் எண்டு சொல்லுவனேண்டுதானே நினைசீங்க?? நாம ரொம்பவே உஷாராக்கும்!)
ரசனைகள் பலவகைப்படும். பொதுவாகவே காதலிக்கும்போது ஆண்கள் எல்லோருமே பெண்கள் சொல்லுவது எல்லாவற்றையுமே தாமும் ரசிப்பதாய் சொல்லுவர். ஆனால் அடிப்படையில் அவர்கள் ரசிப்பது அவளை அல்லது அவள் உடம்பை மட்டும் தான். இவையெல்லாம் தாண்டி பலவிதமான ரசனைகளை, பற்றைக்குளிருந்து பறக்கும் மின்மினிகளை ஒரு குழந்தை காட்டி ரசித்து மகிழ்வதுபோல் பகிர்ந்து கொள்வதற்கென்று ஒரு நட்பு கிடைப்பதென்பது வெகு அரிது. பொதுவாகவே எனது நட்புவட்டத்தில் பார்த்தால் காதல் தொடங்கி கடவுள் வரை.. ஒன்றில் உண்டென்பர், அல்லது இல்லைஎன்பர். ஆனால் இரண்டுக்குமிடையேயான ஒருபுள்ளியில் இருபுறமுமிருந்து கூடவிவாதிக்க ஒரு ஜீவனை அனுப்பியது கூட அந்தக் கடவுள்தானா? நம்பாமலிருக்க முடியவில்லை. சுஜாதா சொல்லியதுபோல் "இருந்தால் நன்றாகத் தானிருக்கும்."
என்னைப் பொருத்தவரைக்கும் நம்மை மீறிய ஒரு சக்தி உண்டென்று ஒத்துக்கொண்டாலும் எனக்குத் தெரிந்து சத்தியம் தான் கடவுள். அதற்காக காந்தியின் பக்தை என்றெல்லாம் சொல்லிடாதீங்க. ஆனா நாம எவ்வளவுக்கெவ்வளவு வாழ்க்கையில் உண்மையை கடைப்பிடிக்கிரமோ, அப்போது ஒரு சில இடத்தில் நாம் தவறுவது போலிருந்தால் கூட எம்மையறியாமலே அதுவே உண்மை என்றாகிவிடும். ஆனால் அதை வரமாக்குவதும் சாபமாகுவதும் எமது கையில் தானிருக்கு.
நிற்க, பொதுவாகவே பலர் உண்மை சொல்வதற்கு தயங்குவது ஏனெனில் அது மனங்களை காயப்படுத்தும். அவர்கள் பற்றி மற்றவர் மனங்களிளிருக்கும் போலி விம்பத்தைத் தகர்த்துவிடும். யாருமே தாங்கள் இப்படித்தானென்று ஏற்றுக்கொள்ளவிரும்புவதில்லை. அவர்கள் நினைப்பது போல் போலி முகமூடிகளைக் காவுவதிலிருக்கும் வலியை விட உண்மை ஒன்றும் அதிகமாய் வலி தராது என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. இன்னும் சொல்லப்போனால் சத்தியம் ஆறுதல் தரும், உண்மையான அன்பை உணரவைக்கும். திருந்துவதற்கு கடைசியாய் ஒரு ஜீவனை அனுப்பிவைக்கும் கடவுளாகவிருக்கும். சரி சரி.. ரொம்ப தத்துவம் பேசுறமோ?
அதிசயமாய் சில நேரங்களில் அப்பட்டமான உண்மை பலரை ரசிக்கவைக்கும். அது வார்த்தைகளை மட்டுமல்ல செயல்களையெல்லாம் தாண்டி இணைத்துச் செல்லும். தனுஷின் கொலைவெறி பாடல் பிரபலமானதற்கு அதுவுமொரு காரணம் தான். அந்தவகையில் யாழிலிருந்து செம்மொழிக்கு அடுத்தபடியாக இவர்களும் தம்பங்குக்கு குதறியிருக்கின்றனர். (கொஞ்சம் ஓவர் தான்..)
கருத்துகள்
//நிற்க, பொதுவாகவே பலர் உண்மை சொல்வதற்கு தயங்குவது ஏனெனில் அது மனங்களை காயப்படுத்தும். அவர்கள் பற்றி மற்றவர் மனங்களிளிருக்கும் போலி விம்பத்தைத் தகர்த்துவிடும். யாருமே தாங்கள் இப்படித்தானென்று ஏற்றுக்கொள்ளவிரும்புவதில்லை.//
என்ற பழைய கௌரி வந்திட்டா .. அது சரி உங்கட பதிவில கௌரி வராம சிவசங்கரியா வரப்பபோறாங்க .. ஸ்டில் வாலிபன் அளவுக்கு மண்டை காய வைக்கவில்லை!!!
"பூவே வாய் பேசும்போது" மட்டும் "உ ஊ மபதபாமா" வில் வெளியாகி இருந்தா நான் நோண்டி நுங்கேடுத்து இருப்பன் .. ஆனா யாருமே வாசிச்சு இருக்கமாட்டாங்க .. வியாழமாற்றம் நல்ல விஷயங்களை அங்காங்கே செருக சான்ஸ் கொடுக்குது ... ஆளாளுக்கு ரசனை மாறுபடும் இல்லையா ..
அது சரி எங்கட கொலைவெறி பார்த்தீங்களா?
http://www.padalay.com/2012/02/version.html
கொஞ்சம் எடிட்டிங்ல சொதப்பீட்டம்.. அவசரத்தில செய்தது!
ஒவ்வொருபதிவும் போடுகையில் இதைவிட என்னத்தை எழுதிக் கிழிக்கப்போறோம் என்று தோன்றும். ஆனா நீங்க இப்படிவந்தி அடிக்கடி உசுப்பேத்திவிட்டிடுவீங்க..
//அது சரி எங்கட கொலைவெறி பார்த்தீங்களா? //
ஏன் உங்களுக்கு இந்த தேவையில்லாத வேலையெல்லாம்.. ஆனாலும் கேதா வாய்ஸ் நல்லாயிருக்கு.. பேசாமல் அவங்களையே பாட விட்டிருக்கலாமே? :)