இடுகைகள்

தீபாவளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அடடே இன்னைக்கு தீபாவளியில்ல?

படம்
இன்னைக்கு தீபாவளி. அட, எல்லோருக்குமே தெரிஞ்சது தானே இதில என்ன புதுசா கண்டு பிடிச்சிட்டேன் எண்டு கேக்கிறீங்களா? சின்னல்ல எனக்கு தீபாவளிக்கும் கார்த்திகை விளக்கீட்டுக்கும் ஒரே குழப்பம். ரெண்டுக்குமே விளக்குதான் கொளுத்துறாங்க. ஆனா சாமிதான் வேறையாம். எனக்கென்னவோ கார்த்திகை விளக்கீடு தான் நல்லா பிடிக்கும். அம்மாமா பந்தம் கொளுத்தி தருவா. நான் போய் சந்து பொந்தெல்லாம் நட்டுக்கொண்டு வருவன். பிறகு வாழை வெட்டி தார் நட்டு வீதில விளக்கு கொழுத்துவம். எங்கட சந்தியிலை டயர் எல்லாம் கொளுத்துவான்கள். அம்மா பாக்க விடமாட்டா. மூக்குகுள்ளை புகை போனா பிறகு இரவு முழுக்க சிவராத்திரி தான் எண்டு. ஆனாலும் நான் யன்னல் கிரிளுக்குள்ளாள எட்டி எட்டி பாப்பன். அதெல்லாம் ஒரு காலம்! சரி இப்ப தீபாவளிக்கு வருவமே. எல்லாருக்கும் தீபாவளி எண்டா ஒரே கொண்ட்டாட்டம் தானே. ஆனா எனக்கு ஏன் பெரிசா இல்லை எண்டு கேட்டிங்கன்னா சொல்றன். 1 . புது சட்டை - வருசத்துக்கு எனக்கு தெரிஞ்சு ஒரு தரம் தான் புது சட்டை எடுப்போம். அதுவும் எண்ட பிறந்தநாளைக்கு ரெண்டு நாள் முன்பு தான். அதிலேயே வருசப்பிறப்பு தீபவளிக்கெல்லாம் சட்டை எடுத்திடுவா அம்ம...