கௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition) by Gowri Ananthan Link: https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition) by Gowri Ananthan Link: https://www.amazon.com/dp/B06XF1YQD4
இன்னைக்கு தீபாவளி. அட, எல்லோருக்குமே தெரிஞ்சது தானே இதில என்ன புதுசா கண்டு பிடிச்சிட்டேன் எண்டு கேக்கிறீங்களா? சின்னல்ல எனக்கு தீபாவளிக்கும் கார்த்திகை விளக்கீட்டுக்கும் ஒரே குழப்பம். ரெண்டுக்குமே விளக்குதான் கொளுத்துறாங்க. ஆனா சாமிதான் வேறையாம்.
எனக்கென்னவோ கார்த்திகை விளக்கீடு தான் நல்லா பிடிக்கும். அம்மாமா பந்தம் கொளுத்தி தருவா. நான் போய் சந்து பொந்தெல்லாம் நட்டுக்கொண்டு வருவன். பிறகு வாழை வெட்டி தார் நட்டு வீதில விளக்கு கொழுத்துவம். எங்கட சந்தியிலை டயர் எல்லாம் கொளுத்துவான்கள். அம்மா பாக்க விடமாட்டா. மூக்குகுள்ளை புகை போனா பிறகு இரவு முழுக்க சிவராத்திரி தான் எண்டு. ஆனாலும் நான் யன்னல் கிரிளுக்குள்ளாள எட்டி எட்டி பாப்பன். அதெல்லாம் ஒரு காலம்!
சரி இப்ப தீபாவளிக்கு வருவமே. எல்லாருக்கும் தீபாவளி எண்டா ஒரே கொண்ட்டாட்டம் தானே. ஆனா எனக்கு ஏன் பெரிசா இல்லை எண்டு கேட்டிங்கன்னா சொல்றன்.
1 . புது சட்டை - வருசத்துக்கு எனக்கு தெரிஞ்சு ஒரு தரம் தான் புது சட்டை எடுப்போம். அதுவும் எண்ட பிறந்தநாளைக்கு ரெண்டு நாள் முன்பு தான். அதிலேயே வருசப்பிறப்பு தீபவளிக்கெல்லாம் சட்டை எடுத்திடுவா அம்மா. ஆனா அவா எங்க ஒளிச்சு வைச்சாலுமே நான் கண்டு பிடிச்சு எல்லாத்தையுமே எடுத்து பிறந்தநாளுக்கே போட்டுடுவேன். அப்புறம் என்ன, தீபாவளிக்கு அதே பழைய சட்டை தான்.
2 . பலகாரம் - பயத்தம் பணியாரம் தான் அம்மாவோட ஸ்பெஷல். ஆனா அதையுமே, அம்மா இரவிரவா முளிப்பிருந்து பிடிச்சு வைக்க, எண்ணையில போடாமலே ஒரு கட்டு கட்டியிருப்பன். விடிய காலமை எழும்பி தெருல இருக்கிற எல்லா வேதக்கார வீட்டையும் தட்டி பலகாரம் குடுக்க வேணும். அதிலும் அருளக்கா வீட்டுக்கு போறதெண்டா எனக்கு நல்ல விருப்பம். ஏன் எண்டு பிறகொரு தரம் சொல்றன்.
3 . விருந்து சாப்பாடு - அப்பாவுக்கு பிடிக்காதெண்டோ இல்லை சாய் பாபா சொல்லியோ தெரியாது வீட்ல இப்பெல்லாம் கறி வாசனையே இல்லை. இருந்திருந்தாலும் எனக்கு உந்த எலும்பில இருக்கிற இத்தினூண்டு இறைச்சியை ஒருமணி நேரமா கடிச்சு கடிச்சு சாப்பிடுறதில உடன்பாடில்லை. உடன்பாடில்லை எண்டதை விட பஞ்சி எண்டே சொல்லலாம்.
4 . கோவில் - ஸ்ப்பா.. அதே கோவில்.. அதே சாமி.. அதே பூஜை.. நான் மட்டும் சாமியா இருந்திருந்தா எப்பவோ எழும்பி ஓடிப்போயிருப்பேன்.
5 . அப்பா - வரலாம்.. வராமலும் விடலாம். வருடம் ரெண்டு தடவை வரும் அப்பா இந்த முறை தீபாவளிக்கு வாராரோ கிறிஸ்மசுக்கு வாராரோ தெரியாது. வந்தா இந்த தடவை ஏதாச்சும் தூரக் கோவிலுக்கு கூட்டிட்டு போகச் சொல்லணும். நல்லதொரு மோட்டார் சைக்கிள் சவாரி செய்து ரொம்ப நாளாச்சு.
இப்ப விளங்குதே ஏன் இந்த தீபாவளி ஒண்டும் எனக்கு பெரிய கொண்டாட்டம் இல்லை எண்டு. ஆனா எதோ அசுரனை கிருஸ்னர்ரோ இல்லை சத்தியபமாவோ கொன்ற நாளாம். அதால உந்த சிம்மாசனத்தில இருக்குற அசுரன்களையும் கொஞ்சம் கவனியுங்கோ எண்டு சொல்லிவைப்பன் அவ்வளவுதான்.
அடடா.. சரவெடி, வானவெடியை விட்டிட்டனே. அதானே தினம் தினம் நடக்குது. உஷ்.. அதைப் பத்தியெல்லாம் இங்கை பேசப்படாதுன்னு அப்பா ஆர்டர்.
மற்ற படிக்கு சப்பெண்டு முடிக்காம எனக்கு நல்லா பிடிச்ச ஒரு பாட்டோட முடிக்கிறன்.
இதில மீனாவின் பார்வை மட்டுமல்ல ஒவ்வொரு அசைவும் கதை பேசும். ரெண்டு மூணு இடத்தில ரொம்பவே அசடு வழியும் தலைவருக்கு இதில மீனாவுக்கு டானசிலையும் இடைக்கிட இளைப்பாறவும் ஹெல்ப் பண்றதை விட வேறு அதிகம் வேலை இருந்ததாக தெரியவில்லை. அட்லீஸ்ட் ரெண்டு விளக்கையாவது கொளுத்திக் குடுத்திருக்கலாம்.
அடடே இன்னைக்கு தீபாவளியில்ல? சரி எதுன்னா என்ன தீபம் எல்லாம் ஒண்ணுதானே..
கருத்துகள்
வாயில வரத தமிழ் எழுத்தில வருகுது :)