கரிகணன் ஒளிவீச்சு
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஊரில் வருடாவருடம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு நிகழ்வு மேதின ஊர்வலம். ஒவ்வொரு வருடமும் வித்தியாசமாய் புதுசாய் பிரமாண்டமாய் பார்க்க பிரமிப்பாய் இருக்கும். ஒளிவீச்சுக்கள் பார்க்கையில் மெய்சிலிர்க்க வைக்கும். நம்மவர்க்குள் இத்தனை திறமைகளா என்று பலதடவை வியந்திருக்கிறேன். வண்ணங்கள், அமைப்புகள், அலங்காரங்கள், இசை என்று ஒவ்வொன்றிலுமே தனி அக்கறை காட்டியிருப்பார்கள். அனைத்திலும் ஒருவித ஒழுங்கு, நேர்த்தி இருக்கும். எத்தனை சவால்கள் பலரின் நிகரற்ற உழைப்பு தசாப்தகால உழைப்பின் சாதனை பிரமிக்கவைக்கும் படைப்புகள் ஓர் சாதனைப் பயணம் போராட்டத்தில் நாம் இழந்தது எத்தனையோ. அவை என்றுமே ஆறாத வடுக்களாய் பதிந்திருக்கும். ஆனால் அவை எமக்கு கற்றுத்தந்த பாடங்கள் வேறெந்த கல்விக்கூடங்களாலும் கற்றுத் தரமுடியாதவை. மண்ணெண்ணெய்யில் ஓடும் வண்டிகள், சிக்கன அடுப்பு, குப்பி விளக்கு என்பன தொடங்கி நீர்மூழ்கிக் கப்பல், அதிவேக படகுகள், ஆகாய விமானங்கள் வரை பொருளாதாரத் தடை தீவிரமாக அமுல்படுத்தப்பட்டிருந்த போராட்ட காலத்தில் கூட நாம் ச...