கொலைவெறி!
தனுஷ் ' கொலைவெறிடி 'ன்னு சும்மா ஒரு பேச்சுக்கு தன்றை மனுசிட்டை சொல்லப்போய் ( ? ), அவ அதைப் பிடிச்சு பாட்டாக்கசொல்ல ( சிம்புவைக் கடுப்பேத்தவோ? ), மூணு பேர் சேர்ந்து சும்மா முசுப்பாத்திக்கு அடிச்ச மெட்டு youtubeல பிக்கப்பாக ( அட நாம Campus Trip போறப்போ அடிப்பாங்களே அது மாதிரித் தானுங்கோ ), அதை தமிழ் பாட்டுக்கு முதலிடம் என்று BBC முதல் ஒபாமா வரை வாழ்த்துப் பாட ( தமிழ் பாட்டு??? அட இங்கைதான் போய்ண்டே ), இந்தியப் பிரதமர் தன் பங்குக்கு விருந்து வைக்க ( என்னமா அரசியல் பண்ணுறாங்க.. மாமனுக்கு தூது விட்டிருப்பாங்களோ ), நம்ம பெடியள் சும்மா சிவனே எண்டு பாத்திட்டுப் போகாம தம்பங்குக்கு செம்மொழி பெருமை பேச ( ரெண்டு நாளைக்கு முதல் தான் நம்ம எழுத்தாளரும் தெரியாத்தனமா இங்கிலிஷ்ல ஒரு ஈமெயில் பண்ணிட்டார்.. விட்டுடுங்க ப்ளீஸ்.. ), நானும் தூக்கியதை Facebookல " தமிழை விற்று பதக்கம் வாங்கும் தமிழா கேள் கொஞ்சம்… Danush " என்று பகிர ( விதி யாரை விட்டுது? பதக்கமெண்ட உடன புகை கிளம்புதில்லை..? ), அதப்பாத்திட்டு ந...