துரோகிகளும் தூங்கிப்போனோரும்
ஆளாளுக்கு என்னமோ காகிதக்கப்பல் விடுறதுபோல ஒவ்வொரு கதை (சத்தியமா கப்டனை ச் சொல்லவில்லை) சொல்லுறாங்கள். அதால நானும் இண்டைக்கு உங்களுக்கு ஒரு கதை சொல்லியே ஆகவேணும். நித்திரை வருமாப்போல இருப்பவர்கள் தயவுசெய்து இப்பவே உங்கடை கனவுதேசத்துக்கு ஓடிடுங்கோ. நம்ம கனவுதேசம் கொஞ்சம் Terrorஆ இருக்கப் போகுது. யூதாசால் காட்டிக்கொடுக்கப்பட்ட ஏசுநாதரைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். வெளியே அவரின் பரமசீடன் ஒருவன் சோகத்துடன் உட்கார்ந்திருக்கிறான். அபோது அருகிலிருந்தவன் கேட்கிறான், "உனக்கு அவரைத் தெரியுமா?" "இல்லை." சிறிது நேரம் செல்கிறது. "உன்னைப் பார்த்தால் அவர்களிலொருவன் போலவே இருக்கிறது." "சத்தியமா, அவர்கள் எப்படி இருப்பார்கள் என்றே எனக்குத் தெரியாது." விடிவதற்கு இன்னும் சிலநிமிடங்களே இருக்கிறது. "இல்லை. இவன் பொய் சொல்கிறான். பிடித்து விசாரியுங்கள்." இப்போது அவனுக்கு பயம் தொறிக்கொண்டது. "ஐயோ. என்னை விட்டிடுங்கோ. நான் ஒரு அப்பாவி." எழுந்து விரைகிறான். சேவல் கூவுகிறது. "நாளை விடிவதற்குள் மூன்றுமுறை என்னைத் தெரியாத...