அடர்காட்டில் தானே
இற்றைக்கு சுமார் ஒரு வருடத்திற்க்கு முன்னர் வந்து சக்கை போடு போட்ட பாடல் கொலைவெறி பாடல். அதற்க்கு யாழிலிருந்து நம்ம பசங்க எதிர்ப்பாட்டு அடிச்சு விட அதுவும் Youtubeல பிச்சிக்கிட்டு போக அப்போ அதுக்கு சில மேதாவிப் பெரியவங்க சொன்னாங்க உங்களுக்கு திறமையிருந்தா நீங்களே சொந்தமா Compose பண்ணி ஒரு பாட்டு வெளியிடுறது தானே எதுக்காண்டி அதே tuneஐ copy பண்ணி பதில் பாட்டு கொடுக்கணும்னு.. அதுக்கு நான் சொன்னேன் இதே செந்தமிழ் வரிகளை நாம என்னதான் கடுமையாக உழைச்சு why this kolaiveri original songஐ விடவுமே நன்றாக இசையமைத்து வெளியிட்டாலுமே ஏனெண்டு ஒரு நாதியும் கேட்டிருக்காதெண்டு. காரணம் popularity.. அது தனுஷ்க்கு இருந்தது. ட்வீட் பண்ணிய அமிதாப்புக்கு இருந்தது. அதேபோல் தமிழ் மேல் பற்றுக்கொண்டோருக்கும் அதனை வாழ(?) வைப்போருக்கும் இருந்தது. இன்று Himalaya Creations இனது தயாரிப்பில் எமது மண்ணிலிருந்து, அவர்கள் கேட்டது போல் எமது சொந்த Composing இல் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை மட்டுமே பயன்படுத்தி எமது இளைஞர்களின் கடுமையான உழைப்பில் வெளிவந்திருக்கும் இந்தப்...