இற்றைக்கு சுமார் ஒரு வருடத்திற்க்கு முன்னர் வந்து சக்கை போடு போட்ட பாடல் கொலைவெறி பாடல். அதற்க்கு யாழிலிருந்து நம்ம பசங்க எதிர்ப்பாட்டு அடிச்சு விட அதுவும் Youtubeல பிச்சிக்கிட்டு போக அப்போ அதுக்கு சில மேதாவிப் பெரியவங்க சொன்னாங்க உங்களுக்கு திறமையிருந்தா நீங்களே சொந்தமா Compose பண்ணி ஒரு பாட்டு வெளியிடுறது தானே எதுக்காண்டி அதே tuneஐ copy பண்ணி பதில் பாட்டு கொடுக்கணும்னு..
அதுக்கு
நான் சொன்னேன் இதே செந்தமிழ் வரிகளை நாம என்னதான் கடுமையாக உழைச்சு why this kolaiveri original songஐ விடவுமே நன்றாக இசையமைத்து வெளியிட்டாலுமே ஏனெண்டு ஒரு நாதியும் கேட்டிருக்காதெண்டு. காரணம் popularity.. அது தனுஷ்க்கு இருந்தது. ட்வீட் பண்ணிய அமிதாப்புக்கு இருந்தது. அதேபோல் தமிழ் மேல் பற்றுக்கொண்டோருக்கும் அதனை வாழ(?) வைப்போருக்கும் இருந்தது.
இன்று Himalaya Creations இனது தயாரிப்பில் எமது மண்ணிலிருந்து, அவர்கள் கேட்டது போல் எமது சொந்த Composing இல் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை மட்டுமே பயன்படுத்தி எமது இளைஞர்களின் கடுமையான உழைப்பில் வெளிவந்திருக்கும் இந்தப் பாடலுக்கு அவர்கள் வைத்திருக்கும் பதிலை நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது என்று சொல்வார்கள். ஆனால் இருபது தொடக்கம் இருபத்தியைந்து வயதுகளிலேயே இருக்கும் இவர்களின் படைப்புகளில் இருக்கும் technical முதிர்ச்சி கண்டங்களைத் தாண்டி நிற்கிறது.
This is a love letter to the most beautiful girl in this world.. Babe you meant everything to me..... I love you.....
அடர்காட்டில் தானே தொலைந்தேனே
உந்தன் கூந்தல் இருட்டிலே
இன்னும் காணவில்லையே
I'm lost in the deep forest,
in the darkness of your hair,
and not yet found
நேற்று நான் இருந்தேன் இன்று இறந்தேன்
உன் வார்த்தைகள் மெல்ல என்னைத் தீண்டுதே
I was alive yesterday, and lifeless today
Your words touches me tenderly
கண்களோரம் காதல் பேசும் (2)
உன் பெண்மை என்னைத் தூண்டுதே
Love speaks along the side of your eyes
Your feminity urges me
கண்கள் உள்ளே விழுந்து
நெஞ்சின் உள்ளே நுளைந்து
மெல்ல மெல்ல என்னைக் கொன்று
போகும் தென்றல் நீயே
You are a tender breeze,
that falls in my eyes
Enters through my heart,
and kills me slowly and softly
உன்னோடு நானும் போகையில்
நாணம் போகையில்
நாளும் போதல வாடினேன்
When I walk with you, shyness goes away
Days are not enough, I'm fading..
நட்சத்திரம் அள்ளித்தான்
நிலவைத் துண்டாய் வெட்டித்தான்
உந்தன் கூந்தல் சூட்டுவேன்
I will adore your plaits,
by grabbing the stars from the sky
And slice the moon up in the high
தேகம் எல்லாம் பஞ்சாகும்
நீயும் நானும் ஒன்றாகும்
மஞ்சத்தில் தேன் சிந்தும்
கொஞ்சல்கள்தான் மிஞ்சும்
Bodies become soft like cotton,
When you and I become one.
Bed disseminates with honey drops,
And Left with sweet kisses
ஏதோ உந்தன் நினைவுகள் தினம்
ஏதோ சின்னக் கனவுகள்
இரவாக மெல்ல இனிமை சேர
அந்த வானில் பூப்பூக்குதே
Everyday, I think of you and my dreams are you
When the sun sets, the sweetness emerges
And Flowers bloom in the sky
கண்கள் முன்னே நீயும் வர
நெஞ்சம் உந்தன் பின்னால் செல்ல
ஐயையையோ காதல் பூக்குதே
When you appear, my heart follows you
Oh God! Love blooms
உள்ளே வைத்த காதல் இன்று
வெளியே வந்து உன்னைத் தேட
பூமிப்பந்து என்னை சுற்றுதே
The untold love kept in my heart revealed this day
and searches you
The world revolves around me
If Love is Blind, I'll Find My Way With You
Cinematography & Editing : SR. Thusikaran
Choreography : ST. Vakeesan
நிற்க, இத்தருணத்தில் ஊக்கத்தினையும் பாராட்டினையும் வழங்கிய அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கருத்துகள்