போதையும் போதிமரமும்
நேரம் : இரவு பதினோரு மணி இடம் : கிளார்க் கீ, சிங்கப்பூர் DJ இன்னும் வரவில்லைப் போலும். இடைவெளியை நிரப்ப Jennifer Lopaz இனது On the Floor பாடல் போய்க்கொண்டிருக்கிறது. உள்ளே ஓரிரண்டு மேஜைகளை பெண்கள் மட்டுமே நிறைத்திருக்கிறார்கள். ரெண்டு ஆண்கள் சற்றுத் தள்ளி கைகளில் house brand viskey உடன் pool விளையாடிக்கொண்டிருந்தனர். அவன் மட்டும் ஒரு மூலையிலிருந்த சோபாவில் உட்கார்ந்துகொண்டு நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். இந்த இடத்துக்கு அவனொன்றும் புதிதல்ல என்றாலும் என்னமோ இன்று எல்லாமே வித்தியாசமாகவே பட்டது. அதிலும் அந்த இடத்துக்கு சற்றும் சம்பந்தமேயில்லாமல் மெல்லிய புன்னகையுடன் கண்களை அரைவாசி மூடியபடி முன்னாலேயிருந்த உருவத்தைப் பார்க்கப் பார்க்க அவனுக்குளும் ஏதோவோர் பரவசம் பரவுவதுபோல இருந்தது. "Sir, can I fill this?" திடுக்கிட்டு நிமிர்ந்தவன் தனது கையிலிருந்த குவளையில் வெறும் ஐஸ் கட்டிகள் மட்டுமே இருப்பதை அப்போது தான் கவனித்தான். அவனுக்கு எப்போதுமே raw அடிப்பது தான் பிடிக்கும். நண்பர்களின் தொந்தரவு தாங்காமல் தான் ஓரிரண்டு ஐஸ் கட்டியே போடுவது. ஆனால...