பாரதி கண்ணம்மா : நின்னைச் சரணடைந்தேன்!
அந்திமாலைப் பொழுது அவனருகிருக்கும் பொழுது மனதினிக்கும் பொழுது மகிழ்ந்திருக்கும் பொழுது கரம் பற்றி விரல் நீவி தோழ் சாய தலை கோத கண் பார்க்க இதழ் சேர்க்க மடி சாய உடல் மூட ஆதவன் மெதுவாய் மறைய நீதான் என் ஒளிவிளக்கு .. அவன் உதடுகள் மொழிய அது ஒரு பொன் .. மாலைப் .. பொழுது .. எழுதிமுடித்துவிட்டு அவன் முகம் பார்த்தாள். மயக்க ஊசியில்லாமலே நிம்மதியாத் தூங்கிக்கொண்டிருந்தான். அணையப் போகிற விளக்கு இறுதி நேரத்தில் பிரகாசமாய் எரியுமே.. அதுபோலிருந்தது அவன் முகம். எழுந்து சென்று காலை போடவேண்டிய மருந்துகளை எடுத்து அடுக்கினாள். நேற்று அவள்பாட்டுக்கு மருந்தை எடுத்துக் குடுத்ததுக்கு nurse திட்டியிருந்தார். அதனால் அவனை எழுப்பாமல் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். இப்படி எத்தனை சந்தோசமான தருணங்களைத் தொலைத்துவிட்டோம் என்று நினைக்க நினைக்க வலித்தது. இனி அவன் இருக்கப் போற ஒவ்வொரு நிமிடங்களுமே சந்தோசத்தை மட்டுமே பார்க்க வேண்டும் என நேற்றே முடிவு செய்திருந்தாள். அதற்கு...