பாரதி கண்ணம்மா : யாமறிந்த மொழிகளிலே

by - 12/06/2011 12:01:00 முற்பகல்


அந்த விமானம் சிங்கப்பூர்ஐ வந்தடைந்தபோது நேரம் நள்ளிரவை நெருங்கிவிட்டிருந்தது. இந்த நேரம் Hospital போகமுடியாது. அப்பிடியே போனாலும் உள்ளே விடமாட்டார்கள். Hostel போய் குளித்துவிட்டு நாளைக்கு சீக்கிரமே எழுந்து போய்விடவேண்டும். Campusல் வேறை பத்து மணிக்குமுன் பதியச்சொல்லியிருந்தது. ரெண்டுநாள் முன்னமே வந்து தொலைத்திருக்கலாம். ஆனால் வீட்டில் எல்லோரையும் சமாதானப் படுத்தி, எப்ப பார் தடை போட்டுக்கொண்டிருக்கும் அம்மா வேறை.. ஏதோ இந்த உலகத்தை விட்டே போகப்போறமாதிரி ஒப்பாரி. என்னமோ இதுவரை வந்ததே பெரிய விசையம். ஆனால் எப்படிப் போய் அவர் முகத்தில் முழிப்பது. நினைக்கவே நெஞ்சு படபடவென்றது. மனுசி வேறை கூட இருக்குமோ தெரியாது. பலவிதமாய் அலைபாய்ந்த மனதை ஒருவாறு கட்டுப் படுத்திக்கொண்டு டாக்ஸி ஸ்டான்ட் போய் நின்றாள். 

அவள் பயந்தது போல இந்த ஊர் ஒன்றும் வேற்றுக்கிரகம் போல தெரியவில்லை. எல்லாமே இலகுவாய் கண்டுபிடிக்கக் கூடியதாகவிருந்தது. கண்பட்ட இடமெல்லாம் தெரிந்த தமிழ்மொழியைப் பார்க்கவே பெருமையாக இருந்தது. நானும் தமிழ் தான் என்று கத்த வேண்டும் போல இருந்தது. 
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்
இதுவே இலங்கையில் எண்டால் முடியுமா? "ஓயா தேமேல?" எண்டு பாஸ்போர்ட்ஐயும் மூஞ்சியையும் பத்து தடவை மாறி மாறிப் பார்த்த officer நினைவுக்குவர எரிச்சலாய் வந்தது. 
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்
உவங்களைக் கூட்டிக்கொண்டுவந்து இங்கை விட்டு "ஓமடா நான் தமிழ் தாண்டா. உண்டை நோட்டிலை மட்டும் இருக்கிற தமிழ் இங்கை நாடு முழுக்க இருக்கு பாரடா." எண்டு காட்ட வேண்டும் போல கிடந்தது. 
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்.
என்ன செய்தாலும் உதுகளுக்கு உறைக்கவா போகுது. ஓசிலை சிங்கப்பூர் பாத்தா சந்தோசத்திலை ஏதாவது கடுப்பேத்திட்டுத்தான் போகுங்கள். ஆனாலும் எல்லாரும் அப்பிடியில்லை. பிறகு வந்து ஹெல்ப் பண்ணின அந்த மேனேஜர் போலவும் ஆட்கள் இருக்கினம் தான்.

"where to go mam..?" ஆச்சரியமாயிருந்தது அவர்கள் விளிக்கும் முறை. இத்தனைக்கும் அந்தாளுக்கு அவளைப்போல் ரெண்டுமடங்கு வயசிருக்கும். கம்பஸ் பெயரைச்சொல்லி ஹோச்டல் போகச் சொன்னாள். அந்த நடுஇரவிலும் வீதியின் இருமருங்கிலும் ஒளிர்ந்த விளக்குகளின் வெளிச்சத்தில் ஜொலித்த சிங்கப்பூர் நிஜமாகவே தேவலோகம் போல இருந்தது. நடுநிசியில் யார் துணையுமின்றி தனியாக தெரியாத ஊரில் செல்கிறாள். அவன் கனவுகண்ட சுதந்திரதேசம் இதுதானோ என்று எண்ணத் தோன்றியது. மறுகணமே 'எங்கடை யாழ்ப்பாணம் கூட இப்படித்தானே இருந்தது. அறுவாங்கள் வந்து..' பெருமூச்சுவிட்டாள். 
செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே

இனி அதெல்லாம் நினைச்சு ஒண்டும் ஆகப்போறதில்லை. அதுதான் சமாதானம் வரப்போகுதாமே பிறகென்ன?

"mam you reached the place.." திடுக்கிட்டு சுயநினைவுக்கு வந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தால் பூஞ்சோலை போலிருந்தது. இதற்குள்ளா தங்கப் போகிறோம் என்று நினைக்க அதுவரை இருந்த பயம், தயக்கம் எல்லாம் முற்றிலும் காணாமல் போய்விட்டது. மகிழ்ச்சியுடன் காசை எடுத்துக் குடுத்துவிட்டு, பெட்டியை இறக்கி உள்ளே செல்ல முயன்றபோது "madam balance.." என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தாள். டிரைவர் தான் receipt ஐயும் கூடவே பத்துசதத்தையும் கார் கண்ணாடியை இறக்கிவிட்டு நீட்டிக் கொண்டிருந்தான். இந்த ஊர் நிச்சயமாகவே நிறைய ஆச்சரியங்களை தனக்குள் புதைத்துக் கொண்டிருக்குது என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். 

இப்படிப்பட்ட ஒரு ஊரில் அவனை சந்திக்கப் போவதை நினைத்து மனம் மகிழ்ச்சியால் துள்ளியது. இந்த ஒரு தருணத்துக்காகத்தான் அவள் வாழ்க்கை முழுவதும் காத்திருந்தது போல் ஒரு உணர்வு. ஆனால் அப்பிடியில்லையே. 

'சரி உந்தப் பழைய புராணம் எல்லாம் இப்ப எதுக்கு. பேசாமல் வந்த அலுவலைப் பாப்பம்.' ஒரு தீர்மானத்துடன் உள்ளேசெல்ல எத்தனித்தவளிடம் செக்யூரிட்டி வந்து "sorry mam. hostel closed" என்றான்.
"sorry. my flight was late and I don't know anyone here. can help me please?". 
அவளை ஒருதடவை மேலும் கீழுமாய்ப் பார்த்துவிட்டு "one minute" என்றவன் போன் எடுத்தபடி,
"your name?" 
சொன்னாள்.
"course" 
"Computer Science"
........
........
ஏதேதோ அவளுக்குப் புரியாத பாசையில் பேசிவிட்டு போனை வைத்தபடி,
"mam ask you to stay in guest-room tonight. she will assign your room tomorrow."
"Thanks"

உள்ளே சென்று பார்த்தாள். ஹோட்டல் VIP ரூம் போல அத்தனை அழகாக இருந்தது அந்த விடுதியறை. டிவி, கம்ப்யூட்டர், fridge, அட்டாச்பாத்ரூம் எண்டு சகல வசதிகளுடனும். கட்டில் அவளுக்குப் பிடித்த பிங்க் கலரில் பெட்ஷீட் போட்டிருந்தது. இந்த ஊரில் காலடி எடுத்து வைத்த ஒவ்வொரு நிமிடங்களுமே அவளை புதிது புதிதாக ஆச்சரியப் படுத்திக்கொண்டிருந்தது. இது ஊர் செய்த மாயமா? இல்லை.. பாரதி..?

***** 


தொடரும்..

யாமறிந்த மொழிகளிலே


You May Also Like

4 comments